டாக்டர் அரவிந்த் ரெட்டி என்ற பாஜகவைச் சேர்ந்த மருத்துவர்
சில தினங்கள் முன்பாக வேலூரில் கொடூரமான முறையில்
வெட்டி, கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். இவர் கடந்த
சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டவர்.
அவர் புதிதாக கட்டியுள்ள பங்களாவின் புதுமனை
புகுவிழாவிற்கு முதல் நாள் கொல்லப்பட்டார்.
மருத்துவர் தொழில் மட்டுமல்லாமல் ரியல் எஸ்டேட்
தொழிலும் செய்து வந்தவர்.
நடந்த கொலை மிகக் கொடூரமானது. நல்ல மருத்துவர்
என்ற பெயர் உண்டு. எங்கள் அலுவலகத்தில் கூட
இந்த வருடம் இன்சூரன்ஸ் வாரத்தின் போது நடைபெற்ற
மருத்துவ முகாமின் போது கூட நீரழிவு நோய் பற்றியும்
தற்காப்பு நடவடிக்கைகள் பற்றியும் நன்றாக விவரித்ததாகவும்
தோழர்கள் சொன்னார்கள்.
அவரது கொலை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய
ஒன்று. குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டு தண்டனை
அளிக்கப்பட வேண்டும். காவல்துறை இன்னும்
திணறிக் கொண்டிருக்கிறது.
இந்த மரணத்தை பாஜக தனது மதவெறி அஜெண்டாவிற்கு
பயன்படுத்துகின்றது.
கொலை தொடர்பாகவும் கொலையாளிகளைக்
கண்டுபிடிக்க நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்காகவும்
ஒட்டப்பட்ட போஸ்டர்களிலும் ஃப்ளெக்ஸ் விளம்பரத்திலும்
அதன் நோக்கம் தெளிவாக தெரிகிறது.
மத பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடு என்பதுதான்
அதன் பிரதான கோஷமாக உள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர்
பொன்.ராதாகிருஷ்ணனின் பேச்சிலும் நச்சு
வெளிப்பட்டுள்ளது.
தேச பக்திக்கு எதிரான கொலை, பாஜகவை ச் சேர்ந்தவர்
கொல்லப்பட்டால் அது மதத் தீவிரவாதிகளின் செயலாக
மட்டுமே இருக்க முடியும் என்றெல்லாம் அவர்
சொல்லியுள்ளார்.
கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
கொலையாளிகள் யார் என்று தெரியாது.
ஆனால் இவர்களே தீர்ப்பெழுதி விட்டார்கள்.
வேறு காரணம் என்பதை கண்டுபிடித்தால்கூட
இவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் போல.
அமைதியாக இருக்கும் வேலூர் மாவட்டத்தில்
இவர்கள் காலூன்ற பதட்டத்தை உருவாக்குகிறார்கள்.
இவர்களின் ஆக்டோபஸ் கரங்கள் சாதாரண மக்களின்
நெஞ்சங்களை நஞ்சாக்குவதற்கு முன்பு உண்மையான
குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது
காவல்துறையின் கடமை.
வருந்தத் தக்கது............
ReplyDelete