நிதியமைச்சர்
ப.சிதம்பரத்தைக் கண்டித்து மத்திய அமைச்சர் ஜெய்ந்தி நடராஜன் பிரதமருக்கு கடிதம்
எழுதியுள்ளார். நிதியமைச்சகம் பெரியண்ணன்
மனப்பான்மையோடு அவர்கள் அனுமதிக்கும் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற
வேண்டிய அவசியம் இல்லை என்பது போல் நடந்து கொள்கிறார்கள். இது தவறு, தலையிட
வேண்டும் என்று பிரதமரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சுற்றுச்சூழல்
அமைச்சகம் வழங்கும் அனுமதிகள் எல்லாம் சரியாக ஆய்வு செய்யப்பட்டு
அளிக்கப்படுகின்றதா என்ற கேள்வி ஒரு புறம் இருந்தாலும் நிதியமைச்சகத்தின்
சிறப்புத்திட்டம் என்றால் அது
சுற்றுச்சூழல் அனுமதிக்கு அப்பாற்பட்டதில்லை என்ற ஜெயந்தி நடராஜனின் வாதம்
சரிதான்.
சரி,
ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜ் எல்லோரும் ஒரு காலத்திலே மூப்பனார் கோஷ்டியிலே
இருந்தார்களே ? இப்போது ஜெயந்தி நடராஜன் வேறு கோஷ்டி மாறி விட்டாரா இல்லை அவரே
புதிய கோஷ்டியின் தலைவராகி விட்டாரா?
காங்கிரஸ்
கட்சியின் கோஷ்டி அரசியல் வரலாறு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் கொஞ்சம்
சொல்லுங்களேன்...
No comments:
Post a Comment