Friday, October 26, 2012

பேரம் படிந்திருந்தால் Zee டிவி விவகாரம் வெளி வந்திருக்குமா?





இன்றைய தலைப்புச் செய்தி Zee டிவி மீது காங்கிரஸ் எம்.பி நவீன் ஜிந்தால் சுமத்தியுள்ள  ப்ளாக் மெயில் குற்றச்சாட்டுதான்.

இதைப் படிக்கையில் காங்கிரஸ் எம்.பி  தான்  மிகவும் யோக்கிய சிகாமணி போல ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார். ஊடகங்கள்தான் ஊழல்களை ஊக்குவிக்கிறது என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டிய மிக மோசமான கட்டத்தில் ஊழல் முடை நாற்றம் அடிக்கும் காங்கிரஸ் கட்சி உள்ளது.

அதே சமயம் Zee டிவி தவறே செய்யாத உத்தமசீலர்கள் என்றும் சொல்ல முடியாது. இன்று ஊடகங்களை நடத்துபவர்கள் பெரு முதலாளிகள். அவர்களுக்கு பரபரப்பும் லாபமும்தான் முக்கியம். பத்திரிக்கை தர்மம் என்பதே இன்று பெரு ஊடக முதலாளிகளைப் பொறுத்தவரை  கெட்ட வார்த்தை.

விளம்பரத்திற்காகவும் டி.ஆர்.பி ரேட்டிங்கிற்காகவும் எதையும் செய்ய தயங்காத ஊடகங்கள்தான் இன்று அதிகமாக உள்ளது. தங்களை நன்றாக கவனிக்கும் நிறுவனங்களை கனிவுப் பார்வையோடு அணுகும் ஊடகங்கள் உள்ள நாடு இது.

Zee டிவிக்கும் நவீன் ஜிந்தாலுக்கும் இடையே பேரம் படிந்திருந்தால் இந்த பிரச்சினை வெளி வந்திருக்காது. பேரம் படியாததால் நிலக்கரி ஊழல் கறை படிந்துள்ள நவீன் ஜிந்தால் இன்று ஊடக ஊழலை அம்பலப்படுத்தும் போராளியாகி விட்டார்.

மொத்தத்தில் இரண்டு தரப்புமே ஊழல் குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

No comments:

Post a Comment