Wednesday, October 24, 2012

ஏங்க தா.பா,உங்களது மட்டும்தான் ரத்தமா ? என்னங்க நியாயம் இது?

இந்த வார ஜூனியர் விகடனிலும் குமுதம் ரிப்போர்ட்டரிலும்
சி.பி.ஐ கட்சியின் மகேந்திரன் புலம்பித் தள்ளியுள்ளார். 
அவர்கள் கட்சியிலிருந்து ஆறாயிரம் பேர் மார்க்சிஸ்ட் 
கட்சிக்கு வந்ததனால் உருவான முகாரி ராகம் இது.

அவர்கள் ஏன் மாறினார்கள் என்பது பற்றியெல்லாம் 
நான் இங்கே விளக்கப்போவதில்லை. 

மகேந்திரன் பேட்டியின் முக்கியப் புலம்பல் இரண்டு.

1 )கட்சி அலுவலகத்தை அறக்கட்டளையாக மாற்றியவர்களை
மார்க்சிஸ்ட் கட்சி சேர்க்கலாமா?

2 )ஆறாயிரம் என்ற எண்ணிக்கை தவறு 

முதல் விஷயத்திற்கு வருகிறேன். 2006 சட்டப்பேரவைத் 
தேர்தலுக்குப் பின்பு கட்சி விரோத நடவடிக்கைக்காக
மார்க்சிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்டக் குழு உறுப்பினர்கள்
பரமசிவம், சுப்ரமணியன், லிங்க முத்து ஆகியோர் 
நீக்கப்பட்டார்கள். அவர்களையும் கூடவே இன்னும் 
சிலரையும் சி.பி.ஐ ஆறத்தழுவி வரவேற்று இணைத்துக்
கொண்டது. 

அவர்கள் தனியாக செல்ல்வில்லை,  குடியாத்ததில் சி.ஐ.டி.யு 
அமைப்பிற்கு  சொந்தமான  பீடித்தொழிலாளர் சங்கத்தின்
கட்டிடத்தையும் சேர்த்தே கொண்டு போனார்கள். இன்று
நியாயம் பேசும் மகேந்திரனும் தா.பா வும் அந்தக் 
கட்டிடத்தை, மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்களின் உழைப்பில்
உருவான கட்டிடத்தை திருப்பி அளித்திருக்கலாமே?
இன்று சி.பி.ஐ  கட்டுப்பாட்டில்தானே இருக்கிறது. 

எப்படி ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓடி, திரும்பி வந்த
தா.பா மாநிலச் செயலாளர் ஆனாரோ அது போல 
ஓடி வந்த பரமசிவம் மாவட்டச் செயலாளர் ஆனார்.
லிங்கமுத்து குடியாத்தம் எம்.எல்.ஏ ஆனார்.

அதே போல ஜனசக்தி இதழில் இரண்டு செய்திகள்.

சி.பி.ஐ மாவட்ட மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து
ஐநூறு பேர் விலகி சி.பி.ஐ யில் இணைந்தார்கள். அவர்கள்
சொன்ன அந்த ஊரில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு கிளையே
கிடையாது. அந்த ஊரின் மொத்த ஜனத்தொகையே
நானூறு பேர்தான்.

அதைத்தவிர அந்த மாநாட்டு பொதுக்கூட்டத்தை நானும்
பார்த்தேன். மொத்தமே இரு நூறு பேர் தான் இருந்தார்கள்.
அப்படியென்றால்  சி.பி.ஐ கட்சியில் ஒரு ஆள் கூட
கிடையாது என்றாலும் கூட முன்னூறு பேர் குறைகிறது.

சமீபத்தில் பத்ரபள்ளி என்ற கிராமத்தில் நாற்பத்தி ஐந்து
பேர் விலகி சி.பி.ஐ யில் இணைந்தார்கள் என்று
செய்தி போட்டார்கள். அங்கே போனது  வெறும்
மூன்று பேர். அதுவும் மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து 
நீக்கப்பட்டவர்கள். 

இவர்களின் அபத்தங்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சித் 
தலைவர்கள் பதில் சொல்வதில்லை என்பதால் 
இவர்களின் இஷ்டத்திற்கு ஏதோதோ பேசிக்
கொண்டிருக்கிறார்கள். 

தோழர் தா.பா அவர்களே உங்களுக்கென்றால் ரத்தமா?
மற்றவர்களுக்கென்றால் தக்காளி சட்னியா?

2 comments:

  1. இதே மாதிரி உங்க கட்சியிலயும் அய் கட்சியிலயும் மாறி மாறி இருந்த தற்போது கொலை குற்றச் சாட்டுக்கு உள்ள அந்த தளி தொகுதி எம்எல்ஏ பற்றியும் கட்டுரை எழுதலாமே...

    ReplyDelete
  2. ஐயா, இது பற்றி நான் முன்னமே எழுதியுள்ளேன். 2006 சட்டமன்றத் தேர்தலில் சி.பி.ஐ, தளி தொகுதியில் நின்றது. சுயேட்சையாக நின்றதால்
    ராமச்சந்திரனையும் அவரது மாமனார் லகுமய்யாவையும் மார்க்சிஸ்ட் கட்சி நீக்கியது. ராமச்சந்திரன் சுயேட்சை எம்.எல்.ஏ ஆன பின்பும் அவரை கட்சியில் இணைத்துக் கொள்ளவில்லை. எந்த ராமச்சந்திரன் மீது சி.பி.ஐ புகார் செய்ததோ அதே ராமச்சந்திரன் தன் கட்சியில் இணைத்துக் கொண்டது, இந்த முறை அவருக்கே சீட் கொடுத்தது. அதனால் சி.பி.ஐ மாவட்டச் செயலாளர் நாகராஜ ரெட்டி கோவித்துக் கொண்டு அதிமுக சென்று விட்டார்

    ReplyDelete