Saturday, October 6, 2012

கலைஞரின் கறுப்புச் சட்டை மர்மமும் வாலறுந்த நரி கதையும்





மிகப் பெரிய வீர வசனம் எல்லாம் கூறி தமிழகத்தின் இழி நிலை அகலும் வரை இனி தான் கறுப்புச்சட்டை மட்டுமே அணியப் போவதாய் கலைஞர் பேட்டி அளித்தார். இப்போது அவர் மட்டுமல்லாமல் அவரது உடன் பிறப்புக்களும் கறுப்புச்சட்டை அணிந்து அதிமுக அரசிற்கு எதிராக பிரசுரம் வினியோகித்துக் கொண்டு வருகின்றனர்.

ஆனால் உடன் பிறப்புக்களே மவுனமாக என்ன முணுமுணுக்கிறார்கள் தெரியுமா?

இது அரசியல் கறுப்புச் சட்டை அல்ல, ஆன்மீகக் கறுப்புச் சட்டை. எப்படி ஜோசியர் அறிவுரைப்படி  இந்தனை நாள் மஞ்சள் துண்டு போட்டிருந்தாரோ, அது போலத்தான் கறுப்புச்சட்டையும்.

குடும்பத்தில் உக்கிரமான சகோதர யுத்தம், பேரனை போலீஸ் துரத்துகிறது. முன்னாள் அமைச்சர்கள் தலை மறைவு என்று ஏராளமான பிரச்சினைகளுக்கு சனி படுத்தும் பாடுதான் காரணம் என்றும் ஆகவே சனி பகவானுக்கு உகந்த கறுப்பு நிறம் அணிந்தால் நல்லது என்ற அறிவுரைப்படிதான் கறுப்புச்சட்டை அணியத் தொடங்கியுள்ளார் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

என்ன வாலறுந்த நரி மற்ற நரிகளையும் தங்கள் வால்களை நறுக்குமாறு சொன்னது போல, கழக உடன் பிறப்புக்கள் எல்லாம் இப்போது கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என்று அலைகிறார்கள், ஜெயா டி.வி யின் ஜாக்பாட் நிகழ்ச்சியில் விதம் விதமாக ஜாக்கெட் அணிந்து கொண்ட குஷ்பு உட்பட.


6 comments:

  1. karuppu sattaiya pottaa, vettikattaama irukkanumnu josier sollalayaa?

    ReplyDelete
  2. அவரது எந்த நடவடிக்கையும்
    சுய நலம் சார்ந்தே தானே எப்போதும் இருக்கும் ?
    நிச்சயம் நீங்கள் குறிப்பிடுவது போலத்தான் இதுவும்

    ReplyDelete
  3. இந்தாளு அடிக்கிற ஸ்டன்டு தாங்க முடியலப்பா.. முதலில் பெருசுகளை அரசியல் இருந்து கட்டாய ஓய்வுக் கொடுக்கும் மசோதாவை நிறைவேத்துங்கப்பு ... முடியல.

    ReplyDelete
  4. இந்த சனி,குரு,இந்த நீங்க நம்புரீங்க போலிறுக்கு..உங்க கிட்ட என்னாலே பேச மடியாது!

    ReplyDelete
  5. article is wrong:if u r troubled by SANI BHAGAVAAN,one should wear BLUE Coluored dress:But,if MK come with nudeness,it is also welcome

    ReplyDelete
  6. \\ஆகவே சனி பகவானுக்கு உகந்த கறுப்பு நிறம் அணிந்தால் நல்லது என்ற அறிவுரைப்படிதான் கறுப்புச்சட்டை அணியத் தொடங்கியுள்ளார் என்று அவர்கள் கூறுகிறார்கள்.\\
    இது நிஜமாத்தான் இருக்கும் போலத் தோணுது. அப்படியே போட்டாலும் இவங்க ஒரிஜினல் தி.க. கலர் கருப்புதானே, அது துக்கமா என்ன?

    ReplyDelete