Saturday, October 27, 2012

கடிதம் எழுதினால்தான் அழகிரி, ஸ்டாலினும் மன்னிப்பு கேட்பார்களா, கலைஞரே

டி.ஆர்.பாலுவை பழனிமாணிக்கம் பொது வெளியில் விமர்சனம்
செய்ததற்காக  கலைஞர் கண்டித்தார். உறக்கத்தைப் பறித்து
விட்டார்களே என்று உருகி உருகி உடன் பிறப்பிற்கு கடிதம்
எழுதினார்.

வேறு வழியில்லாமல் பழனிமாணிக்கம் மன்னிப்பு கேட்ட பின்பு
பிரச்சினை முடிந்தது. தி.மு.கழகத்தின் கண்ணியம்
பாதுகாக்கப்பட்டது.

இளைஞர் அணி பொறுப்பாளர்களை நியமிப்பதில் தான்
பரிந்துரைத்தவர்களை புறக்கணித்து விட்டார்கள் என்று
பத்திரிக்கையாளர்களிடம்  அழகிரி வெடித்தார்.

மறுநாளே ஸ்டாலின் பத்திரிக்கையாளர்களிடம் அழகிரிக்கு
பதில் சொல்லி விட்டார். தகுதியானவர்களை நியமிக்கும்போது
பரிந்துரைக்கு என்ன வேலை உள்ளது என்று அழகிரி 
மூக்கை உடைத்து விட்டார்.

இதற்கு அழகிரி என்ன பதில் சொல்லப் போகின்றார் 
என்பதை விட
கலைஞர் என்ன செய்யப் போகின்றார் 
என்பதில் ஆர்வமாக உள்ளேன்.

இரண்டு  மகன்களையும் கண்டித்து உறக்கத்தை
தொலைக்க வைத்து விட்டீர்களே என்று கடிதம்
எழுதுவாரா?

அப்படி எழுதினால்தான் இவர்கள் அடங்குவார்களா?
இல்லை மன்னிப்புதான் கேட்பார்களா,

பார்ப்போம், சகோதர யுத்தம் எப்படி நடக்கிறது என்று
 

1 comment:

  1. \\பார்ப்போம், சகோதர யுத்தம் எப்படி நடக்கிறது என்று.\\ இவனுங்க அடிச்சிகுவானுங்க, சாவறவன் அப்பாவியா எவனாச்சும் மாட்டுவான், தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் நடந்த மாதிரி. அப்புறம் இவனுங்க ஒன்னு கூடிக்குவானுங்க.

    ReplyDelete