நேற்று வாலாஜா படவேட்டம்மன் ஆலயத்தில் கட்டப்பட்டிருந்த
தீண்டாமச் சுவரை அகற்றுவதற்கான போராட்டம் அறிவிக்கப்
பட்டிருந்தது.
வேலூர் மாவட்டம் மட்டுமல்லாமல் பக்கத்து மாவட்டங்களில்
இருந்தெல்லாம் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த
போராட்டம் நடக்கக் கூடாது என்பதில் ஆட்சியாளர்கள்
மிகவும் கவனமாக இருந்தனர்.
வாலாஜா வரும் அனைத்து வழிகளிலும் செக் போஸ்ட்
அமைத்து கொடிகளோடு வந்தவர்களையெல்லாம்
மடக்கிக் கொண்டிருந்தனர்.
அத்தனையையும் மீறி நூற்றுக் கணக்கில் மக்கள்
குவிந்தார்கள். வாலாஜா பேருந்து நிலையத்திலேயே
அனைவரும் கைது செய்யப்பட்டு அகற்றப்பட்டனர்.
ஆனால் போராட்டம் உருவாக்கிய தாக்கத்தால்
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், கைது
செய்யப்பட்டவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த
மண்டபத்திற்கே வந்து தலைவர்களுடன் பேச்சுவார்த்தை
நடத்தினார்.
அக்டோபர் பத்தாம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தை
நடத்தி தீர்வு காணலாம் என்று உறுதியளித்துள்ளார்.
பார்ப்போம் தமிழக அரசாங்கம் அன்று யார் பக்கம்
நிற்கப் போகின்றது என்று...
அரசியல் சாசனத்தின் பக்கமா இல்லை
ஆதிக்க சக்திகள் பக்கமா என்று.....
///பார்ப்போம் தமிழக அரசாங்கம் அன்று யார் பக்கம்
ReplyDeleteநிற்கப் போகின்றது என்று...
அரசியல் சாசனத்தின் பக்கமா இல்லை
ஆதிக்க சக்திகள் பக்கமா என்று.....///
இதில் என்ன சந்தேகம் கண்டிப்பாக அரசாங்கம் அன்று ஆதிக்க சக்திகள் பக்கம் தான் நிற்கும்.