நாளை சரஸ்வதி பூஜையை முன்னிட்டு அனைத்து
தொலைக்காட்சிகளும் சிறப்பு நிகழ்ச்சிகள்
ஒளி பரப்புகின்றன.
என்ன பெரிய புடலங்காய் சிறப்பு நிகழ்ச்சிகள்?
வெறும் சினிமாவும் சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள்
மட்டும்தான். என்ன அழுமூஞ்சி சீரியல்கள்
கிடையாது.
கலைஞர் தொலைக்காட்சியும் அதே போல்
நாளை முழுதும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்
போகின்றன.
மற்ற தொலைக்காட்சிகள் ( சன் டி.வி உட்பட் )
சரஸ்வதி பூஜையை முன்னிட்டு என்று
வெளிப்படையாக சொல்கிறார்கள்.
இங்கே மட்டும் விடுமுறை தின சிறப்புக்
காட்சிகள் என்று ஒரு புதுப் பெயர்.
இந்த கதை ஒவ்வொரு முறையும் நடக்கிறது.
பகுத்தறிவு முகமுடியை எப்போதோ கழட்டி
விட்டார்கள்.
இதிலே மட்டும் என்ன வீண் ஜம்பம்......
இலவசம், விலய்யில்லா பொருள் ஆனதுபோல,
ReplyDeleteஇங்கு சரசுவதி பூஜை, விடுமுறை நாளாகியது. இதுதான் அய்யா நமது திராவிட கலாச்சாரம். தமிழன் முட்டாளாகி ஐம்பது வருடங்களுக்கு மேலாகிறது.
use your remote (tv) at least.
ReplyDeletergds
seshan/dubai
சன் டி .வி. காரனுங்க உதயா என்னும் கன்னட சேனல் நடத்துரானுங்க. காவிரி பிரச்சினை தீவிரமாகும் போதெல்லாம் கன்னடர்களை அழைத்துவந்து தமிழன் செய்வது அட்டூழியம் என்று அவர்கள் பேசுவதை ஒளிபரப்பிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் விற்கும் தினகரன் பேப்பரில் வடா மாநிலங்களில் பெயருக்குக் கீழே ஹிந்தியில் பெயர் அச்சடித்திருப்பார்கள். ஹிந்திக்கு தார் பூசி தமிழனை ஹிந்தி படிக்க விடாமல் காத்த தியாகிகள் நிலையைப் பாருங்கள்............
ReplyDelete