Monday, March 9, 2026

மகளிர் இட ஒதுக்கீடு - வரும் ஆனா வராது

 


நேற்றே எழுதிய பதிவு, ஆனால் இன்றுதான் பகிர்ந்து கொள்ள முடிந்தது.

ஒவ்வொரு வருடமும் சர்வதேச மகளிர் தினத்தின் போது முன்னெழும் பிரச்சினையாக மகளிர் மசோதாவை நிறைவேற்றுவது என்பது இருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக யாரும் அது பற்றி பேசவில்லை.

ஏன் மகளிர் மசோதா சட்டமாகி விட்டதா?

ஆமாம்.

மறந்து விட்டீர்களா?

2023 ல் மகளிர் மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த சிறப்பான சம்பவத்தைக் காண, மோடிக்கு வாழ்த்து சொல்ல பாலிவுட் பெண் நட்சத்திரங்களை அழைத்திருந்தார்களே, இந்த நிகழ்விற்குக் கூட புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு பழங்குடி இனப்பெண் என்று இன்று மோடியால் பேசப்படும் ஜனாதிபதியை அழைக்கவில்லையே, அதையெல்லாம் மறந்து விட்டீர்களா?

மகளிர் இடஒதுக்கீடு சட்டமாகி விட்டதால் இப்போது நாடாளுமன்ற மக்களவையில் பெண் எம்.பி க்கள் 33 % இருக்கிறார்களா?

அங்கேதான் இருக்கிறது மோடியின் கேடித்தனம்.

மக்கட்தொகை கணக்கெடுப்பு நடந்து அதற்குப் பிறகு தொகுதி மறு சீரமைப்பு  நடந்து அதற்குப் பிறகுதான் அமலாகுமாம்.

2021 ல் நடந்திருக்க வேண்டிய மக்கட்தொகை கணக்கெடுப்பு இன்னும் தொடங்கக் கூட இல்லையே!

அது எப்போது தொடங்கி, எப்போது முடிந்து?

அமலாக்காமல் சும்மா சீனுக்காக மட்டும் நிறைவேற்றப்பட்டது மகளிர் மசோதா.

அதனால்தான் சட்டப்படி 181 பெண் எம்.பி க்கள் இருக்க வேண்டிய தற்போதைய மக்களவையில் 74 பெண் எம்.பி க்கள் மட்டுமே இருக்கின்றனர்.

சரி மகளிர் இட ஒதுக்கீடு அமலாக்கத்திற்கு எப்போது வரும்?

வரும்,  ஆனா (மோடியும் பாஜகவும் ஆட்சியில் இருக்கும் வரை) வராது.

5 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த குடும்பத்துப் பெண்களை ஆபாசமாக பேசுபவன் அழுகிப் போய் சாவான். அவன் பிணத்தை நாய், நரிகள் கூட சீண்டாது.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
    4. நீ அழுகிச் சாவது நிச்சயம்

      Delete