Wednesday, March 18, 2026

அசிங்கமா போயிடுச்சே ஜெயமோகன்

 


இன்றைக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்பு அகிலனுக்கு ஞானபீடம் அறிவிக்கப்பட்டபோது சுந்தர ராமசாமி மிகக் கடுமையாக எழுதினார். அகிலன் இன்று எவர் என்று தெரியாத நிலை. சு.ராவின் அக்கட்டுரை இன்றும் வாசிக்கப்படும் ஒரு ‘கிளாஸிக்’. சு.ரா சொன்னார் “ஜிப்பா தேசிய உடை ஆக்கப்படுவதை பிக்பாக்கெட்டுகள் ஆதரிப்பது போன்றது அகிலனுக்கு ஞானபீடம் கிடைத்தபோது சோட்டா எழுத்தாளர்கள் கொண்டாடியது”. அந்த பிக்பாக்கெட்டுகளின் பெயர்களை இன்று தமிழ் விக்கியில்தான் தேடவேண்டும்.

இது ஓர் எழுத்தாளர் விருது பெறுவதற்கு எதிரான கண்டனம் அல்ல. இது அந்த ஓர் எழுத்தாளர் சார்ந்த விஷயமும் அல்ல. இந்த விருதோ, அந்த எழுத்தாளரோ எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.

அகிலனுக்கு கிடைத்த ஞானபீடம் தமிழை சிறுமை செய்தது. ஐம்பதாண்டுகளாக தமிழ் இலக்கியத்தை எந்த இலக்கிய மேடையிலும் உரிய இடம் இல்லாததாக ஆக்கியது. அகிலன் தமிழின் தலைசிறந்த எழுத்தாளர் என்றால் மற்றவர்களின் எழுத்தை பொருட்படுத்தவேண்டியதில்லை என்று இந்தியா முடிவு செய்தது.

மேலே உள்ளது ஜெயமோகன் எழுதிய பதிவு. ஞானபீட விருது அகிலனுக்கு கொடுக்கப்பட்டதை ஜெயமோகனும் அவர் ஆசான் சுந்தர ராமசாமியும் கடுமையாக எதிர்த்தார்கள் என்பதையும் அகிலனை ஒரு எழுத்தாளராகவே ஜெமோ மதிக்கவில்லை என்பதையும் அந்த பதிவு சொல்கிறது.

ஜெயமோகன் எப்பேற்பட்ட பொய்யன், சந்தர்ப்பவாதி என்பதை எழுத்தாளரும் திரைக் கலைஞருமான தோழர் கவிதா பாரதி எழுதிய பதிவு லட்சமாவது முறையாக அம்பலப்படுத்துகிறது.

இதோ அந்த பதிவு

அகிலனுக்கு வழங்கப்பட்ட ஞானபீட விருது அரை நூற்றாண்டு காலம் தமிழ் நவீன இலக்கியத்தை இந்திய இலக்கிய சூழலில் மறைத்தது.
-இவ்வாறு ஒரு கோடி ரூபாய்
பம்பர் இலக்கியப் பரிசு அறிவிப்பில் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்
சுவாரசியமானதொரு பிளாஷ்பேக் இதோ..
1990-ல் அகிலன் நினைவு நாவல்போட்டியினை அகிலன் அறக்கட்டளை நடத்தியது..

பல எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை அனுப்பினர்.. ரப்பர் என்னும் தனது நாவலின் கையெழுத்துப்பிரதியை ஜெயமோகனும் அனுப்பினார்

அதில் முதல் பரிசு பெற்றது ரப்பர்.. ரூபாய் பத்தாயிரம் வழங்கப்பட்டு, அகிலன் நினைவு நாவல் போட்டியில் பரிசு பெற்றது என்னும் குறிப்போடு அகிலனின் மகன் அகிலன் கண்ணன் தனது தாகம் பதிப்பகத்தின் சார்பில் அந்த நாவலை வெளியிட்டார்.. அதுதான் ஜெயமோகனின் முதல் நாவல்..





தரமான இலக்கியத்துக்கு
ஒரு கோடி ரூபாய் பரிசறிவிக்கும்
ஜெயமோகனின் இலக்கிய அடையாளம், அவரது அளவுகோல்படி
'தரமற்ற எழுத்தாளர்' அகிலன் நினைவாக வழங்கப்பட்ட பத்தாயிரம் ரூபாய் மூலமாகத்தான் வெளிப்பட்டது..

இதற்கெல்லாம் ஜெமோ அசந்து விடுவாரா என்ன? அவருடைய முழக்கமே "துப்பினால் துடைச்சுப்பேன்" என்பதுதானே!


No comments:

Post a Comment