Sunday, March 15, 2026

காந்தியைச் சொன்னவர் ஏன் நேருவை சொல்லவில்லை மோடி?

 


கீழேயுள்ள படத்தில் உள்ள ஜந்துவின் பெயர் சுதான்ஷு திரிவேதி. பாஜகவின் மூத்த ஊடகத் தொடர்பாளர், உபியிலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்வான, பி.ஹெச்.டி பட்டம் பெற்றதாக சொல்லப்படும் முன்னாள் பேராசிரியர்.


எப்ஸ்டீன் கோப்புகளில் மோடியின் பெயரும் மந்திரி பூரியின் பெயரும் இருப்பது பற்றிய கேள்விக்கு அந்த ஜந்து 

"ராஜீவ் காந்தியின் பெயர் உள்ளது, சோனியா காந்தியின் பெயர் உள்ளது, ராகுல் காந்தியின் பெயர் உள்ளது, மகாத்மா காந்தியின் பெயரும் உள்ளது" 

என்று கோபமாக பதில் சொல்கிறது. 

ஆனாலும் இந்த மகாத்மா காந்தி மிகவும் மோசமானவர். 1953 ல் எப்ஸ்டீன் பிறப்பதற்கு ஐந்தாண்டுகள் முன்பே இறந்து போய் சுதான்ஷு திரிவேதியை காமெடி பீஸாக்கி விட்டார்.

ஆனால் சுதான்ஷு திரிவேதியும் பாவம்தான்.

மகாத்மா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருடைய பெயரையெல்லாம் சொன்ன அந்த ஜந்து மோடியின் பரம வைரி ஜவஹர்லால் நேருவின் பெயரை மட்டும் சொல்லவில்லை.

அது மறதியா? இல்லை திட்டமிட்டு தவிர்த்தாரா?

மோடிக்கு இந்த விஷயம் தெரிய வரும் போது திரிவேதிக்கு "ராஜ குலோத்துங்க" வை விட்டுவிட்ட வாயிற்காப்பாளருக்கு இம்சை அரசன் 23ம் புலிகேசி கொடுத்த தண்டனைதான் கிடைக்கும். 


No comments:

Post a Comment