தமிழ்நாட்டில் தான் பொற்காலத்தை அனுபவித்ததாக மேற்கு வங்கத்திற்கு ஓடிப் போகும் ஆரெஸெஸ் ரெவி சொல்லியுள்ளார்.
அவருக்கு வேண்டுமானால் அது பொற்காலமாக இருக்கலாம்.
அவர் பதவியில் இருந்த காலம் தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இருண்ட காலம்.
ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்க அரசின் முடிவுகளை முடக்கியது, சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களை முடக்கியது, ராஜ்பவனை மத வெறி நடவடிக்கைகளுக்கும் பொய்ப் பிரச்சாரத்திற்குமான களமாக மாற்றியது, தமிழ்நாட்டு மக்களின் பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்தியது, பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டை ஒடுக்கியது, பட்டங்களை மாணவர்கள் பெறுவதை தாமதித்தது, கற்பூரம் பற்றி அறியாத கழுதையாக சுதந்திரப் போராட்ட வீரர், மூத்த பொதுவுடமை இயக்கத் தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்களை இழிவு படுத்தியது, திருவள்ளுவர், வள்ளலார் போன்றவர்களுக்கு காவிச்சாயம் பூசியது
என தமிழ்நாடு கண்ட மிக மோசமான, கேவலமான ஆளுனர் ஆரெஸெஸ்.ரெவி என்றும் அவர் பதவிக்காலம் இருண்ட காலம் என்று மட்டுமே தமிழ்நாட்டு மக்கள் நினைவில் கொள்வர்.

This comment has been removed by a blog administrator.
ReplyDelete