Thursday, March 5, 2026

எச்சரிக்கையாக இருப்பீர் அதிகாரிகளே! பலியாடாகாதீர்

 



திருச்சி கோட்ட ரயில்வே அலுவலகத்தில் ஒரு அலங்கார வளைவு வைத்து அதற்கு "கர்த்தவ்ய த்வார்" என்று இந்தியில் பெயர் வைக்கிறார்கள்.

தோழர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவிக்கிறார். முதல்வரும் இணைகிறார். கண்டனம் வலுக்கிறது.  எடப்பாடி கூட மெல்லமாக செல்லமாக சிணுங்கி வைத்தார். இறுதியில் அந்த "கர்த்தவ்ய த்வார்" எழுத்துக்கள் நீக்கப்பட்டது.

இது  அப்பட்டமான இந்தி திணிப்பு. மோடி அரசின் இந்தி வெறிக்கு ஒரு உதாரணம். 

இந்த வெறிக்கு அதிகாரிகள் பலியாடுகள் ஆகக்கூடாது.

நான் இதைச் சொல்வதற்கு காரணமுண்டு. 

ரயில்வேயில் நிகழ்ந்த இந்தி திணிப்பிற்கு முட்டு கொடுக்க முடியாமல் இந்தியிசை, அதிகாரிகள் மீது  பழி போடுகிறார்.


"சில அதிகாரிகள் செய்யும் தவறுக்கு தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயல்வதாக மத்தியரசு மேல் தேவையின்றி பழி போடப்படுகிறது" என்று அவர் பிரச்சினைக்கான காரணியை திசை திருப்புகிறார்.

அனைத்து அதிகாரிகளும் இதிலிருந்து பாடம் கற்க வேண்டும்.

மத்தியரசு சொல்கிறது, அமைச்சர் சொல்கிறது என்று நீங்கள் அரசியல் சாசன, ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராக செயல்பட்டால் பிரச்சினைகள் வரும் போது கடைசியில் நீங்கள்தான் மாட்டிக் கொள்வீர்கள். 

ஆட்சியாளர்களின் கைப்பாவைகள் அல்ல நீங்கள்!

ஒரு காலத்தில் அதிகாரிகளுக்கு தவறினை சுட்டி காட்டும் தைரியம் இருந்தது. 

ஆனால்

மோடி காலத்தில் எல்லாமே மாறி விட்டது.

பதவிக்காக சலாம் போடும் அதிகாரிகள் எதிர்காலத்தில் வருந்துவார்கள். 


No comments:

Post a Comment