Tuesday, March 3, 2026

மீண்டும் மீண்டும் அசிங்கப்படும் அதிமுக

 

மோடி கலந்து கொண்ட மதுரை கூட்டம் தொடர்பாக நயினார் நாகேந்திரன், கூட்டத்திற்கு முதல் நாள் பகிர்ந்து கொண்ட படம் கீழே உள்ளது.


மேலே உள்ள படத்தில் உள்ள மோடியின் படத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது கீழே உள்ள படத்தையும் அதில் உள்ள மோடியின் படத்தையும் நன்றாக பார்த்துக் கொள்ளவும். இதுவும் நயினார் நாகேந்திரன் பகிர்ந்து கொண்டதுதான்.


என்ன நன்றாக கவனித்தீர்களா/?

முதல் நாள் பொதுவாக வெற்றியின் சின்னம் என்று கருதப்படுகிற இரண்டு விரல்களை காண்பித்துக் கொண்டிருந்த மோடியின் படம், கும்பிட்டுக் கொண்டிருக்கும் மோடியின் படமாக மாறி விட்டது.

இரண்டு விரல்களை காண்பிப்பது இரட்டை இலை சின்னத்தை குறிக்கிறது என்று பாஜக கருதியதால் அந்த படம் தூக்கப்பட்டு விட்டது.

முதலில் தந்தை பெரியார் படத்தை தூக்கச் சொன்னார்கள்.

பிறகு அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை குறிப்பது போல இருக்கக் கூடாது என்று மோடியின் படத்தையே மாற்றி விட்டார்கள்.

அதிமுக ஆட்சி என்று எடப்பாடி சொன்னால், என்.டி.ஏ ஆட்சி என்று மோடி சொல்கிறார்.




பேச்சு வார்த்தையில் எடப்பாடிக்கு கொடுக்கப்பட இடம் கூட, ஒரு கூட்டணியின் தலைவருக்கான இடம் இல்லை.

அதிமுக,வை பாஜக மீண்டும், மீண்டும், மீண்டும் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறது. கிரி "வீரபாகு" போல ரொம்ப நல்லவனாக அதிமுக அந்த அசிங்கங்களை மனமுவந்து சகித்துக் கொண்டிருக்கிறது. 



No comments:

Post a Comment