இன்சூரன்ஸ் துறை சம்பந்தமாக நேற்று நிர்மலா அம்மையார் மாநிலங்களவையில் பேசியிருக்கிறார். அதை அவரது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
இன்சூரன்ஸ் ஒழுங்காற்று வளர்ச்சி ஆணையம் (IRDA) மிகவும் கறாராக பொதுத்துறை, தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளை கண்காணித்து பாலிசிதாரர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தவறிழைக்கும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் மீது அபராதம் விதித்துள்ளதாகவும் சொல்லியுள்ளார்.
ரிலையன்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்.டி,ஃஎப்சி இன்சூரன்ஸ் ஆகியவைக்கு தலா இரண்டு கோடி ரூபாயும் ராயல் சுந்தரம், எஸ்.பி.ஐ லைப் ஆகிய கம்பெனிகளுக்கு தலா ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறது அமைச்சரின் அறிக்கை.
எல்.ஐ.சி யின் மீதோ, மற்ற நான்கு பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் கம்பெனிகள் மீதோ அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை என்பதை மட்டும் அமைச்சர் ஏனோ சொல்லவில்லை. அதெப்படி பொதுத்துறையை அவரால் பாராட்ட முடியும்!
இதை படிக்கையில் ஐ.ஆர்.டி.ஏ ஏதோ சுத்த சுயம்பிரகாச நியாயவான் போல தோன்றும். ஆனால் உண்மை நிலவரம் வேறு.
இந்த அபராதம் எல்லாம் வேறு வழியில்லாமல், ஏராளமான புகார்கள் வந்து, ஆம்புட்ஸ்மேன், நீதிமன்றம் குட்டி விதிக்கப்பட்டவை.
உன்மையின் ஐ.ஆர்.டி.ஏ எல்.ஐ.சி, பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு ஒழுங்காற்று வாரியமாக, தனியார் கம்பெனிகளுக்கு வளர்ச்சி ஆணையமாக செயல்பட்டு வருகிறது.
எல்.ஐ.சி முகவர்களை தனியார் கம்பெனிகளுக்கு மடை மாற்றி விடக்கூடிய விதத்தில் இன்சூரன்ஸ் சட்டங்களில் மாற்றம்,
எல்.ஐ.சி புதிய பாலிசிகளுக்கு அனுமதி கேட்கையில் இழுத்தடிப்பது, தனியார் கம்பெனிகளுக்கு சிவப்பு கம்பள மரியாதை கொடுப்பது,
முகவர்களின் கமிஷன் விகிதத்தை குறைத்து வணிகத்தை முடக்க முயல்வது (எல்.ஐ.சி யின் வணிகத்தில் 90 % முகவர்கள் மூலம் வருகிறது. தனியார் கம்பெனிகளில் 10 % வணிகம்தான் முகவர் மூலம் வருகிறது)
ஐ.ஆர்.டி.ஏ அடிப்படையில் பொதுத்துறைக்கு வில்லன். அதற்கு மாறான ஒரு சித்திரத்தை நிர்மலா அம்மையார் கொடுத்துள்ளார்.
இந்த டுபாக்கூர் வேலைகள்தான் மோடி அரசின் அடையாளம்.


No comments:
Post a Comment