திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் எண்ணற்ற உருட்டுக்களை அர்ப்பணித்த மோடி, ஒரு கதை ஒன்றையும் அளந்துள்ளார்.
அதென்ன கதை?
மதுரை விவசாயி காலையில் விளைவிக்கும் மல்லியை மாலையிலேயே நியூயார்க்கிலும் பாரீஸிலும் விற்பது சாத்தியமா?
இப்போது சென்னையிலிருந்து நியூயார்க்கிற்கும் பாரீஸிற்கும் விமானங்கள் செல்கின்றன. அதன் பயண நேரம் என்ன என்பதை கீழே பாருங்கள். சென்னை நேரத்திற்கும் மதுரை நேரத்திற்கும் வித்தியாசம் அதிகபட்சம் ஒரு மணி நேரம் இருக்கலாம். அது கூட பயண நேரம் அதிகம்தான் ஆகும்.
சென்னையிலிருந்து நியூயார்க் செல்ல குறைந்த பட்சம் 23 மணி நேரமும் பாரீஸ் செல்ல குறைந்த பட்சம் 18 மணி நேரமும் ஆகிறது.
பிறகு எப்படி காலையில் விளைவித்தது மாலையிலேயே விற்பனை ஆகும்?
ஆனால்
தவறு மோடியுடையது அல்ல.
மோடிக்கு பேச்சு எழுதிக் கொடுக்கும் பூத எழுத்தாளர் (GHOST WRITER) யாரோ, மூத்த்த்த்தவர் மாலனோ?) அவருக்கு "நினைத்தாலே இனிக்கும்" படத்தில் வரும் "எங்கேயும் எப்போதும்" பாடலில் வரும் "காலை ஜப்பானில் காஃபி, மாலை நியூயார்க்கில் காபரே, இரவில் தாய்லாந்தில் ஜாலி" வரிகள் நினைவுக்கு வந்து அந்த அடிப்படையில் மோடிக்கு உரை எழுதிக் கொடுத்திருப்பார்.
பாவம் மோடி, அவரை திட்டாதீங்க . . .




Air India: Offers nonstop service in approximately 13h 40m to 13h 45m. The most common 14-hour routes are between the New York metropolitan area and New Delhi (DEL)
ReplyDeleteசென்னையிலிருந்தே நேரடி சேவை இல்லாத போது மதுரையிலிருந்து மட்டும் வருமா? வரட்டும், அப்போது வருத்தம் தெரிவித்து வேறு பதிவு எழுதுகிறேன்.
DeleteAnother of gujju scoundrel feku's jhumla.
Deletemadurai to delhi flight time - 3 hours 10
delhi to ny flight time - 16h 45m
Flower shipments arriving at JFK International Airport typically clear customs within 24 to 48 hours.