இரானின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி யை அமெரிக்க, இஸ்ரேல் கொலைகாரப்படைகள் கொன்றது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் எம்.ஏ.பேபி அவர்களுடைய பதிவு கீழே உள்ளது.
இரானிய அரசின் சில ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் சில கருத்து வேறுபாடு இருப்பினும் அந்நாட்டின் உச்சபட்ச தலைவரையும் மற்ற உயரதிகாரிகளை அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஜியோனிஸ்ட் இஸ்ரேலும் இரானின் இரையாண்மைக்கு எதிராகவும் சர்வதேச விதிகளுக்கு முரணாகவும் கொன்றதை ஏற்றுக் கொள்ள முடியாது. கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய செயல் இது.
லத்தீன் அமெரிக்காவிலும் மற்ற பல நாடுகளிலும் கடைபிடித்த அதே உத்திகளைத்தான் அமெரிக்கா கையாள்கிறது. இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா அளந்து விட்ட பொய்கள் அம்பலமானதை நாம் பார்த்திருக்கிறோம். ஆப்கானிஸ்தான், லிபியா மர்றும் சிரியா அனுபவங்கள் நம் கண் முன்னே உள்ளது.
அமெரிக்க ராணுவத்துறை உலகிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது. இரானில் அமெரிக்க, இஸ்ரேல் கூட்டணி இரானில் செய்து வரும் குற்றங்களுக்கு எதிராக உலகளாவிய அளவில் குரல் எழுப்ப இந்தியா முன்னெடுக்க வேண்டும்.
உலக அமைதிக்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ள சூழலில் அனைத்து ஜனநாயகக்குரல்களையும் ஒன்றிணைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுக்க வேண்டும். அப்போதுதான் வன்முறைத் தாக்குதல்களும் அதற்கான எதிர்வினைகளும் நிறுத்தப்படும்.
தோழர் எம்.ஏ.பேபி சொன்னது மிகவும் அருமையான ஆலோசனை. முன்னொரு காலத்தில் அணி சேரா நாடுகள் அமைப்பின் தலைவராக இது போல செயல்பட்ட நாடுதான் இந்தியா.
ஆனால் இந்த ஆட்சியாளர்கள் கேட்பார்களா?
அயத்துல்லா அலி காமேனி கொலையை கண்டிக்காத ஆள் மோடி. இஸ்ரேலோடு நிற்பேன் என்று வெளிப்படையாக கூவியவர் அவர்.
மகாத்மா காந்தியின் குரங்குகளுக்கு முற்றிலும் முரணானவர்கள் இவர்கள்.
இவர்கள் நல்லதை பார்க்க மாட்டார்கள்,
இவர்கள் நல்லதை கேட்க மாட்டார்கள்,
இவர்கள் நல்லதை பேசவும் மாட்டார்கள்.


சீனாவும் ரஷ்யாவும் மௌனமாக இருக்கும்போது தாங்கள் குதிப்பதின் மர்மம் என்ன
ReplyDeleteபோருக்கு எதிரான குரல்.ஏகாதிபத்திய ஆதிக்க வெறிக்கு எதிரான குரல்.
DeleteThis is how all evil empires like US end.
ReplyDelete