மூன்று நாட்கள் முன்பு வந்த ஒரு தீர்ப்பு ஊடகங்களின் கவனத்திற்கு ஏன் பெரிதாக வரவில்லை என்று தெரியவில்லை.
மே, 2008 ல் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் ஒரே சமயத்தில் ஏழு இடங்களில் வெடிகுண்டு வெடித்து எண்பது பேர் இறக்கிறார்கள்.
மூன்று மாதம் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் விமர்சனம் வர தேர்தலும் நெருங்கியதால் ஐவர் கைது செய்யப்படுகின்றனர்.
2019 ல் அவர்களில் ஒருவர் விடுவிக்கப்பட, ஒருவருக்கு மரண தண்ட்னையும் மற்ற மூவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்படுகிறது.
மூன்று நாட்கள் முன்பாக ஜெய்பூர் உயர் நீதிமன்ற பெஞ்ச் அனைவரையும் விடுதலை செய்து விட்டது. முற்றிலுமாக போலீஸால் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் அப்படி செய்த போலீசாரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
அப்போது ராஜஸ்தான் முதல்வர் பாஜகவின் வசுந்தரா ராஜி சிந்தியா.
கைது செய்யப்பட்டு இப்போது பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அப்பாவிகள் என்று விடுதலை செய்யப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்பதை தனியாக வேறு சொல்ல வேண்டுமா என்ன!
பிரக்யா தாகூர் போன்ற வெடிகுண்டு சாமியார்களின் கைவரிசையாக இருந்திருக்குமோ, அதனால்தான் பாஜக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவில்லையோ என்று சந்தேகமும் வருகிறதே!
No comments:
Post a Comment