Friday, April 21, 2023

தடம் மாற வேண்டாம் தமிழ்நாட்டு அரசே!

 


தமிழ்நாடு அரசு இன்று நிறைவேற்றிய தொழிலாளர்களுக்கு எதிரான சட்டம் பிற்போக்குத்தனமானது.

பனிரெண்டு மணி நேர வேலை என்பது மனிதத்தன்மையற்றது என்பதால்தான் தொழிலாளர்கள் போராடினார்கள், துப்பாக்கித் தோட்டாக்களையும் தூக்குத்தண்டனையையும் பரிசாகப் பெற்றார்கள்.

அதனை மாற்றுவது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. கண்டிக்கத்தக்கது. 

ஒன்றிய அரசும் சங்கிகளும் ஆட்டுத்தாடியும்  எந்நேரமும் விஷம் கக்கிக் கொண்டிருக்கும் சூழலில் நேச சக்திகளின் எதிர்ப்பை மீறி செயல்படுவது மோசமான அரசியல் முடிவும் கூட.

தொழிலாளர்களின் விருப்பம் என்று சொல்வதெல்லாம் நடைமுறைக்கு உதவாது.

முடிவை அரசு உடனே மாற்ற வேண்டும். அது வரை சமரசமில்லாத போராட்டம் நடைபெற வேண்டும். 

3 comments:

  1. வேலூர் பிச்சைApril 21, 2023 at 8:36 PM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. தொழிற்சங்கவாதியான நீங்கள் பாசிச தமிழக அரசை கடுமையாக எதிர்க்க வேண்டும்.
    136000 கோடி இந்த இரு வருஷத்தில் கொள்ளை அடித்த திமுக அரசு உடனடியாக
    அகற்ற பட வேண்டும். தொழிற்சாலையில் 12 மணி நேர வேலை நேரம் சாத்தியப்படுமா தோழரே.

    ReplyDelete
    Replies
    1. சரி, பாசிச் பாஜக அரசை, அதானிகக்கு கோடிக்கணக்கில் அள்ளித் தரும் "வெறும் நரேந்திரா" அரசை நீங்கள் கண்டித்ததுண்டா? ஆம் எனில் நிரூபிக்கௌம்.

      Delete