பெங்களூருக்குச் சென்ற மகனை வழியனுப்ப நேற்று மாலை காட்பாடி ரயில் நிலையம் சென்றிருந்தேன்.
அப்போது எதிர் ப்ளாட்பார்மில் நின்றிருந்த பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் வண்டியின் சாதாரண வகுப்பு கோச் படத்தில் உள்ளது. முன்பதிவு செய்து இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகளுக்கு இணையான அளவில் பயணிகள் நின்று கொண்டும் இருந்தார்கள்.
அடுத்த படத்தை பாருங்கள்.
குளிர் சாதனம் செய்யப்பட்ட பெட்டிகளில் பாதிக்கும் மேற்பட்ட இருக்கைகள் காலியாக இருந்தன.
ஏன் இந்த முரண்பாடு?
ரயில்வே இப்போதெல்லாம் இரண்டாம் வகுப்பு பெட்டிகளையும் முன் பதிவு செய்யப்படாத பெட்டிகளையும் குறைத்து விட்டு குளிர்சாதனப் பெட்டிகளை அதிகரித்து விட்டது ரயில்வே துறை,
எல்லாம் காசுக்காகத்தான் . . .
"ஒளிரும் இந்தியா", "துன்பத்தில் உழலும் இந்தியா" என்று இரண்டு இந்தியாக்கள் இருப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி அடிக்கடி சொல்வார்.
இதனைத்தான் அந்த ரயிலும் சொல்கிறது.
Cost difference for the AC coaches between brindhavan and the shatabdhi is not much. instead of traveling in the brindhavan i can pay few more bucks for the shatabhdhi and reach my destination faster. Few years back they have removed all the AC coaches from brindhavan and later added it back after the LHB conversion. i hope they will remove the AC coaches from the brindhavan again.
ReplyDelete