நேற்று நான்கு பேர் ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட ஒரே புகைப்படம்.
ஒருவர் சதாப்தி ட்ரெயினில் பரிமாற்ப்பட்ட நல்ல சாப்பாடு என்கிறார்.
இன்னொருவர் டெல்லியில் கவுதம் கம்பீர் நடத்தும் மலிவு விலை உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு கொடுக்கப்பட்ட சாப்பாடு என்கிறார்.
மூன்றாவர் ராஜஸ்தான் ஜெய்பூரில் அரசு நடத்தும் இந்திரா மலிவு விலை உணவகத்தில் எட்டு ரூபாய்க்கு சாப்பிட்ட சாப்பாடு என்று எழுதுகிறார்.
அந்த் பெண்மணி இந்தியில் எழுதியுள்ளதால் அவர் எங்கே சாப்பிட்டார் என்று தெரியவில்லை.
மொத்தத்தில் ஒரே சாப்பாட்டு போட்டோவை வைத்து ஒவ்வொருவருவரும் ஒரு கதை சொல்லியுள்ளனர்.
சங்கிகளுக்கு இணையாக ஒரு காங்கிரஸ்காரரும் இந்த கதையென்ற நீரோட்டத்தில் இணைந்துள்ளார்.
சதாப்தி சாப்பாடு போலத்தான் தோன்றுகிறது. சதாப்தியில் எப்போதுமே சாப்பாடு நன்றாக இருக்கும். அதை இவர் ஒன்பது வருடம் என்று சொல்லி "வெறும் நரேந்திரா"விற்கு கிரெடிட் கொடுக்கிறார்.
"வெறும் நரேந்திரா" வின் ஆட்சியில் முன்னேற்றம் என்றால் எல்லா ரயில்களிலும் சாப்பாடு நன்றாக இருக்க வேண்டும். ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்பதுதான் யதார்த்தம்.
வெறும் நரேந்திரா, மறந்தீட்டீங்களா?
ReplyDeleteநன்றி, சரி செய்து விட்டேன்
Deleteகதைகள் பலவிதம்; சாப்பாடுகள் ஒரே விதம்!!
ReplyDelete