அயோத்தி திரைப்படத்தின் கதை தொடர்பான சர்ச்சை ஓடிக் கொண்டுள்ளது. பீகாரிலிருந்து வந்த கிராம வங்கி ஊழியருக்கு ஏற்பட்ட துயரத்தின் போது பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் செய்த உதவி தொடர்பாக வங்கி ஊழியர் சங்கத் தலைவர் தோழர் ஜா.மாதவராஜ் வலைப்பக்கத்தில் எழுதியதே திரைப்படமாக வந்துள்ளது.
எஸ்.ராமகிருஷ்ணன் செய்த கதைக் களவு தொடர்பாக ஆஜான் ஏதாவது எழுதியுள்ளாரா என்று அவர் தளத்தில் தேடிப் பார்த்தேன். ஆல்.இன்.அழகுராஜாவாக எல்லா பிரச்சினைகளிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் ஆஜான், இந்த பிரச்சினையில் மட்டும் வாய் திறக்கவே இல்லை.
ஆமாம். அவர் நிலைமை கஷ்டம்தான்.
எஸ்.ரா வை ஆதரித்தாலும் பிரச்சினை.
இந்தாளோட சர்க்காரே திருட்டுக்கதை, அதனாலதான் ஆதரிக்கிறார்
என்று சொல்வார்கள்.
விமர்சித்தால்
உன்னோட சர்க்காரே திருட்டுக்கதை, நீ அவரை சொல்றியா என்பார்கள்.
அதனால் கள்ள மவுனத்தைத் தவிர வேறு வழியில்லை . . .
பிகு: எழுதி ரொம்ப நாள் ஆனதுதான். ஆஜான் தொடர்பாக புதிய பஞ்சாயத்துக்களுக்கு போகும் முன்பு இந்த பழைய பஞ்சாயத்தை ஏன் வீணாக்க வேண்டும் என்பதால் பகிர்ந்து கொள்கிறேன்.
ஆஜான் சம்பந்தமா நிறைய மேட்டர் சமீபமா வந்துச்சே.. நீங்க ஒண்ணுமே சொல்லல.. ஏதாச்சும் போடுங்க தோழர்... நல்லா இருக்கும். நன்றி.
ReplyDelete