ஆட்டுக்காரன் இன்னிக்கு கொடுத்த வாட்ச் பில் தொடர்பான காமெடி பதிவு ஒன்று
உன்கிட்ட என்ன கேட்டோம்?
"ரஃபேல் வாட்ச் பில் கேட்டீங்க"
" யார் கையில இருக்க வாட்ச்சோட பில்?
"என் கையில கட்டியிருக்க வாட்ச் பில்"
"உன் கையில உள்ள வாட்ச்சோட வரிசை எண் என்னனு நீ சொன்ன?"
"149னு சொன்னேன்"
"இப்ப எந்த வரிசை எண் கொண்ட வாட்சோட பில்லை காட்டியிருக்க?"
"147ஆவது வரிசை எண் கொண்ட வாட்சோட பில்லை காட்டியிருக்கேன்"
"அது யாருடைய வாட்ச்?"
"என் நண்பன் சேரலாதன் ராமகிருஷ்ணனோடது"
"சரி, உன் நண்பன் சேரலாதன் ராமகிருஷ்ணனோட 147ஆவது ரஃபேல் வாட்ச் பில் இங்க இருக்கு. உன் கையில கட்டியிருக்க 149ஆவது வாட்ச்சோட பில் எங்க?"
"அதாங்ணா இது"
- Ganesh Babu
இப்போ சீரியஸான பதிவு
வழக்கறிஞர்கள் whatsapp குழுவில் வந்தது தோழர்: #BreakingNews
அண்ணாமலையின் ரபேல் வாட்ச் பில்லு கிடைச்சிருச்சி!
(கொஞ்சம் நீளமான பதிவு அவசியம் படிக்கவும் அனைத்து குழுக்களிலும் பகிரவும்)
பாஜக தலைவரோ இல்ல வேற யாரோ 5 , 10 லட்சத்துக்கோ அதுக்கு மேலயோ வாட்ச் வாங்குவதில் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை.
ஆனா ரெண்டு ஆடு வச்சிருக்க ஏழை விவசாயி என்று வேஷம் போட்டு 4 லட்சம் ரூவாய்க்கு வாட்ச் வாங்கி அதுக்கு கணக்கு காட்ட முடியாம கதை சொல்லிகிட்டு இருப்பது தான் வெட்ககேடு
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அண்ணாமலை தேசப்பற்றுடன் (!?) கட்டியிருக்கும் ரபேல் வாட்ச் அவரோட சொந்த பணத்தில் வாங்கிய வாட்சே இல்லை. அது போலீஸில் வேலை பார்த்த காலத்தில் லஞ்சமாக பெற்றுக்கொண்ட திருட்டு வாட்ச்.
அந்த வாட்ச் உண்மையிலேயே SARVALOKA SERVICES-ON-CALL PRIVATE LIMITED அப்படின்ற பெங்களூர் நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது! இந்த நிறுவனம் 2014ல் துவங்கப்பட்ட வீட்டு கட்டுமானம் மற்றும் ரிப்பேர் பணிகள் செய்யும் ஆன்லைன் நிறுவனம்.
இந்த நிறுவனம் பின்னாளில் விரிவாக்கம் மற்றும் நிர்வாக மாறுதல்கள் செய்யப்பட்டு HOUSEJOY என்ற பெயரில் செயல்பட ஆரம்பித்தது. ரூ.136 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டக்கூடிய இந்த நிறுவனத்தின் COOவாக அப்போது நியமிக்கப்பட்டவர் தான் 420 ஆசாமியான சஞ்சித் கவுரவ் (Sanchit Gaurav)
இந்த சஞ்சித் கவுரவின் உள்ளடி வேலைகளால் இந்த நிறுவனத்தை துவக்கிய அர்ஜுன் குமார் மற்றும் சுனில் கோயல் ஆகியோர் அந்த நிறுவனத்தை விட்டே நிர்வாக குழுவால் வெளியேற்றப்பட்டனர் என்பது உள்ளிருந்து வரும் செய்தி!
உள்ளடி அரசியல், நிறுவனத்தின் தரமற்ற சர்வீஸ்களால் கடுப்பானவர்கள் நிறுவனத்தின் மீது புகாரளித்து வந்தனர். இந்தச் சூழலில் தான் COO சஞ்சித் கவுரவ் பொருளாதார குற்றவாளியாக பெங்களூர் நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டு 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார் ( indiankanoon.org/doc/9163051/ )
இந்த நிலையில் தான் அப்போதைய கர்நாடக (அ)சிங்கம், அண்ணாமலை அக்டோபர் 2018 பெங்களூர் தெற்கு DCP- ஆக நியமிக்கப்பட்டார். இதே காலகட்டத்தில் HOUSEJOY நிறுவனத்தின் பெயரில் பல மோசடி புகார்கள் வரத்தொடங்கின. பாதிக்கப்பட்டவர்கள் அந்த நிறுவனத்தின் முன் போராட்டங்களும் நடத்தினர்.
DCP அண்ணாமலையின் காவல் எல்லைக்குள் தான் இது எல்லாமே நடக்குது. மீடியாக்களில் வெளியாகும் செய்திகளையும், பாதிக்கப்பட்டவர்கள் தரும் புகார்களையும் மழுங்கடிக்க நம்ம கிரிமினல் CEO அப்போதைய கர்நாடக ABVP பொறுப்பாளர், தற்போதைய அதே பெங்களூர் MPயான ‘தேஜஸ்வி சூர்யா’வை அணுகுகிறார்
இவ்வாறு நெருங்கிய நண்பர்களான தேஜஸ்வியும் சஞ்சித்தும் சஞ்சித்தின் HOUSEJOY நிறுவனத்திற்கு எதிராக கொடுக்கப்படும் புகார்களை கண்டுகொள்ளக்கூடாது என்பதற்காகவே தேஜஸ்வி சூர்யா மூலம் அப்போதைய DCP அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்ட வாட்ச் தான் இந்த ‘ரபேல் வாட்ச் BR03-94’!
இதுல இன்னொரு விசயம் என்னன்னா தேஜஸ்வி சூர்யாவும் இதே வாட்சை கட்டிக் கொண்டிருந்தவர் தான்! மோசடி பேர்வழியிடம் லஞ்சமாக பெற்ற வாட்ச்சை கையில் கட்டிக்கொண்டுதான் அண்ணாமலை எல்லோருக்கும் தேசபக்தி பாடம் எடுக்கிறார்.
No comments:
Post a Comment