Monday, April 17, 2023

புல்வாமா கொலைகள் - சங்கிகளின் சதியே

 


நாற்பத்தி நான்கு சி.ஆர்.பி.எஃப் வீரர்களை பலி கொண்ட  புல்வாமா தாக்குதல் தொடர்பாக  காஷ்மீரின் அன்றைய ஆட்டுத்தாடி சத்யபால் மாலிக் இப்போது தெரிவித்துள்ள தகவல் கீழே.


இது புதிதல்ல. 

புல்வாமா தாக்குதல் நிகழ்ந்த நேரத்தில் எழுதிய இரண்டு பதிவுகளை, முதலில் ஸ்க்ரீன் ஷாட்டுகளாகவும் பிறகு எழுத்து வடிவிலும் ப்கிர்ந்து கொள்கிறேன். 







Friday, February 15, 2019

கார்கிலைப் போலவே கோட்டை விட்ட . . .




350 கிலோ எடை கொண்ட வெடிப்பொருட்களை  ஒரு வாகனத்தில் ஏற்றி  நெடுஞ்சாலைக்கு கொண்டு வந்து ஒரு தாக்குதல் நடத்தப்  போகிறார்கள் என்ற தகவல் அரசுக்குத் தெரியாதா? ஒரு வாரம் மூடப்பட்ட பாதையில் ஆயிரக்கணக்கான வீரர்கள் இடம் பெயர  உள்ளனர் என்கிற போது  கவனம் வேண்டாமா?

இது உளவுத்துறையின் முழுமையான தோல்வி 

இதை நான் சொல்லவில்லை.

காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் சொல்கிறார்.

தாக்குதல் நிகழ்த்திய தீவிரவாதி சந்தேகத்திற்குரியவர்கள் பட்டியலில் இருந்தான். ஆனால் அவன் ன் எங்கே உள்ளான், என்ன செய்கிறான் என்பது தெரியாமல் போய் விட்டது என்கிறார் அவர்.

இந்த உளவுத்துறை தோல்விக்கு யார் பொறுப்பு?

அனைத்தையும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள ராணுவத் தலைமையைத் தவிர வேறு யாரைச் சொல்ல முடியும்/ 

கார்கிலில் நடந்ததும் இதுதான்.

ஊடுறுவல்  நிகழ்ந்தததை கோட்டை விட்டு விட்டு பிறகு போர் வரை சென்றார்கள். அதிலும் சவப்பெட்டி ஊழல்  செய்து காசு பார்த்தார்கள்.

இப்போது வாக்கு ஆதாயம் பார்ப்பார்களா?

ஒரே ஒரு சந்தேகமும் வராமல் இல்லை.

உளவுத்துறை தூங்கியதா?

அல்லது 

அது எச்சரிக்கை அளித்தும் அலட்சிய படுத்தப்பட்டதா?

ஏனென்றால் பாஜக ஆட்சிக்காக  எதையும் செய்யும்  

Saturday, February 16, 2019

வீரர்கள் மரணம். இப்போது கேட்காமல் வேறெப்போது?





ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் புலனாய்வு தோல்வி இருக்கிறது என்பதை அம்மாநில ஆளுனரே ஒப்புக் கொண்ட பின்பு அதை நேற்றைய பதிவாக எழுதினேன்.

ஒரு வாட்ஸப் குழுவில் கடுமையான விவாதம்.

போரில் உயிர் நீத்த வீரர்களின் சவப்பெட்டிகளே வந்து சேரும் முன் அரசியலாக்காதீர்கள் என்றது  அந்த குரல்.

முக நூலிலும் இது போல ஏராளமான கருத்துக்கள்.

நடந்த தாக்குதல்கள் என்பது கொடூரமானது. எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் மரணம் என்பது துயரமானது, அவர்களின் குடும்பங்களின் சோகத்தை நாமும் பகிர்ந்து கொள்கிறோம்.

அவர்களின் மரணத்திற்கு,
அவர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு
யார் காரணம்?

முதல் குற்றவாளி

நிச்சயமாக தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்பு “ஜெய்ஷ் இ முகமது”

அவர்களை தண்டிக்க வேண்டும், வேரரறுக்க வேண்டும். தீவிரவாதம் எந்த வடிவில் எந்த போர்வையில் வந்தாலும் அனுமதிக்கக் கூடாது.

இவர்கள் மட்டும்தான் குற்றவாளிகளா?

இந்திய குற்றவியல் சட்டம், குற்றத்தை நிகழ்த்தியவர்களை விட குற்றம் செய்ய தூண்டியவர்களைத்தான் அதிகமாக தண்டிக்கிறது.

குற்றம் நிகழப் போகிறது என்று தெரிந்தும் அதை தடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களே அலட்சியமாக அந்த குற்றம் நடத்த அனுமதிப்பது என்பது எவ்வளவு மோசமான ஒன்று!

குற்றத்தை நிகழ்த்தியவர்கள் மீது வரும் கோபத்தை விட குற்றம் நிகழ அனுமதித்தவர்கள் மீது இன்னும் அதிகமான கோபம் வர வேண்டாமா?

இங்கேதான் காவிகள் புகுந்து விளையாடுகிறார்கள்.

உணர்ச்சிகளை அவர்கள் தூண்டி விட்டு அதிலிருந்து அரசியல் ஆதாயம் அடைய அடித்தளம் அமைக்கும் வேளையில்

சில உண்மைகளை சிலர் பகிர்ந்து கொள்ள முன் வருகிற போது

கூச்சலிட்டு தேச பக்த போர்வையில் அந்த உண்மைகளை புதைக்க முயல்கிறார்கள். காவிகளால் மூளைச் சலவை செய்யப்பட்ட பல அப்பாவிகளும் அந்த சூழ்ச்சிக்கு இரையாகி

“இந்த நேரத்தில் இதையெல்லாம் பேசலாமா?” என்று வினவுகிறார்கள்.

இந்த நேரத்தில் பேசாமல் வேறெப்போது பேசுவது?

இந்த தேசத்தின் எல்லையைப் பாதுகாப்பதற்காக உயிர் நீத்த வீரர்களின் சடலங்களைப் புதைக்கும் போது அரசுப் பொறுப்பில் உள்ளவர்களின் அலட்சியத்தையும் அந்த அலட்சியத்திற்கான உள்நோக்கத்தையும் சேர்த்தே புதைத்து விட முடியுமா என்ன?

உணர்வுகள் மேலோங்கும்போது அறிவு மங்கி விடும் என்பது மிகவும் சரியாக பொருந்துகிறது.

உளவுத்துறை தோல்வியடைந்துள்ளது என்று ஆளுனர் சொல்கிறார்.
எங்கோ ஒரு தவறு நடந்துள்ளது என்று சி.ஆர்.பி.ஃஎப் பின் செய்தி தொடர்பாளர் கூறுகிறார்.

ஆனால் இங்கே நடந்துள்ளது உளவுத்துறையின் தோல்வி என்றோ எங்கோ நடந்த தவறு என்றோ சுருக்கி விட முடியாது என்பதைத்தான் ஆவணங்கள் சொல்கிறது.



IED (improvised Explosive Devise) பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல் வந்துள்ளது என்று ஜம்மு காஷ்மீர் போலீஸின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எச்சரித்துள்ளார்.

அந்த எச்சரிக்கையை உதாசீனம் செய்து நாற்பதுக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழக்கக் காரணமாக இருந்தது யார்?

தகவல் தெரிந்தும் வீரர்களை மரணப் படுகுழியில் தள்ளியது யார்?

இந்த அலட்சியத்திற்கு அரசியல் உள் நோக்கம் கிடையாதா?

இந்த கேள்விகளை இப்போது கேட்காமல் வேறெப்போது கேட்பது?

கலவரங்கள் தொடர்ந்தால் எங்கள் வெற்றி உறுதியாகும் என்று முசாபர்நகர் கலவரப் பின்னணியில் அமித் ஷா கூறியதை மறக்க இயலுமா?

உத்தர பிரதேச மாநில தேர்தலுக்கு முன்பாக கான்பூரில் ரயில் விபத்து நிகழ்ந்த போது எல்லைக்கு அப்பால் உள்ளவர்கள் தீட்டிய சதி என்று மோடி ஒவ்வொரு கூட்டத்தில் பேசியதையும் அந்த விபத்து காலாவதி ஆன பழுது பட்ட தண்டவாளங்களால் உருவானது என்ற உண்மை, மொட்டைச்சாமியார் முதல்வரான பின்பே வெளியானது என்பதை மறந்து விட முடியுமா?

குஜராத்தில் மோடியின் செல்வாக்கு குறைந்த நேரத்தில் எல்லாம் அவரது உயிருக்கு ஆபத்து என்று கதை கட்டி போலி எண்கவுன்டர்கள் மூலம் அப்பாவிகளை தீர்த்துக்கட்டிய உத்தமர் அமித் ஷா என்பதைத்தான் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியுமா?

மோடியோ, அமித் ஷா வோ மகாத்மா காந்தி போல, ஜவஹர்லால் நேரு லால் பகதூர் சாஸ்திரி போல நேர்மையாளர்கள் (அவர்களின் அரசியல் குறித்து மாற்றுக் கருத்து உண்டு. ஆனால் அவர்கள் நேர்மையானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது)  என்றால் இந்த கேள்விகளுக்கான தேவை எழுந்திருக்காது.

பதவிக்காக எந்த அளவிற்கும் கீழிறங்கக் கூடியவர்கள் என்பதால்

இப்போது கேட்காமல் வேறெப்போது கேட்பது?

2019 தேர்தல் வெற்றிக்காக பாஜக களப்பலி கொடுத்தது புல்வாமா வீரர்களை. 2024 ல் ஒரு உயிர் கூட பலி ஆகாமல் தடுக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

காவிக்கயவர்களின் கொலை வெறியை அம்பலப்படுத்துவதே நம்முடைய பணி.

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete