Monday, April 17, 2023

மொட்டைச் சாமியாரின் உதிரப் பிரதேசம்

 





 

உதிரப் பிரதேசம் என்று பொருத்தமாகச் சொன்ன ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரனுக்கு முதலில் நன்றி.

 

மொட்டைச்சாமியார் ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேசம் இது நாள் வரை பாலியல் குற்றங்களின் தலைமை மாநிலமாக இருந்தது. இப்போது கொலைகளின் தலைமையிடமாக மாறி விட்டது.

 

அலகாபாத்தில் நீதிமன்ற  வளாகத்திற்குள் காவலர்கள் புடை சூழ ஊடகக்காரர்களோடு பேசிக் கொண்டிருந்த இருவர் (அவர் முன்னாள் எம்.பி யாக இருக்கட்டும், 100 க்கும் மேற்பட்ட வழக்குகளை கொண்ட  கிரிமினலாக இருக்கட்டும். அதற்கான தண்டனை கொடுக்கும் அதிகாரம் போலீசுக்கோ முதலமைச்சருக்கோ கிடையாது என்பதை புரிந்து கொண்டு மேலே படிக்கவும்) கோர்ட் வாசலிலேயே சுடப்படுகிறார். அவரது சகோதரரும் சுடப் படுகிறார். இருவரும் அங்கேயே இறக்கிறார்கள்.

 

இந்த கொலை போலீஸ் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்து நடந்த கொலை.

 

ஏன்?

 

பிப்ரவரி மாதத்தில்  உமேஷ் பால் என்ற வக்கீல் கொல்லப்படுகிறார். அலகாபாத் கோர்ட் வளாகத்தில் கொல்லப்பட்ட அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் முதல் குற்றவாளிகளாக குற்றம் சுமத்தப்பட்ட ராஜூ படேல் என்பவரது பத்தாண்டுகளுக்கு முந்தைய கொலை வழக்கில் இந்த உமேஷ் பால்தான் முக்கிய சாட்சி.

 

உமேஷ் பால் கொலை வழக்கில் போலீஸ் பத்து பேர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்கிறது. பத்து பேரில் ஏழு பேர் கொல்லப்பட்டு விட்டனர். தலை மறைவாக இருப்பதால் மீதமுள்ள மூவர் தலை இதுவரை தப்பியுள்ளது.

 

இது மட்டுமல்ல காரணம்.

 

இதற்கு முன்பு அதிக் அகமதுவை பகல் வேளையில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடோடு மருத்துவமனைக்கு கூட்டி வரும் போலீஸ் இம்முறை இரவு நேரத்தை தேர்ந்தெடுத்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் பலவீனம் இருந்துள்ளது.

 

பாதுகாப்புக்கு இருந்த போலீசும் கொலை செய்தவர்களை சுடவில்லை. கொலை செய்தவர்களும் போலீசை சுடவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தம் ?

 

கொலை செய்தவர்கள் என்ன காரணம் சொல்லி இருக்கிறார்கள்?

 

இவர்களை கொன்றால் கிரிமினல் உலகில் பெரும் புகழ் பெற்று தங்களுக்கென்று ஒரு இடத்தை பெறலாம் என்று திட்டமிட்டார்களாம்.  பிறகு ஏன் அவர்கள் தப்பிக்க முயற்சி செய்யாமல் மாட்டிக் கொண்டார்கள்?

 

மொத்ததில் மொட்டைச் சாமியார் நீதிபதி வேடம் போட்டு தண்டனையை அவரே கொடுத்து விடுகிறார்.

 

புல்டோசராக இருந்த அவரது ஆயுதம் இப்போது துப்பாக்கியாக மாறி உள்ளது.

 

No comments:

Post a Comment