Monday, April 10, 2023

காட்பாடி கைவிடப் பட்டது இதனால்தானா?

 


சென்னை - கோவை வந்தே பாரத் விரைவு வண்டி காட்பாடியில் நிற்பதில்லை என்பது விவாதப் பொருளாக மாறி வருகிறது.

வழக்கறிஞரும்  எழுத்தாளருமான தோழர் இரா.முருகவேள் அவர்களின் முக நூல் பதிவை படிக்கும் போது காட்பாடி புறக்கணிக்கப்பட்டதன் காரணத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

பயணிகள் வசதியைப் பற்றி ஒன்றிய அரசு எப்போது கவலைப் பட்டுள்ளது! முதலாளிகள்தானே முக்கியம்!

இதோ தோழர் முருகவேள் அவர்களின் பதிவு.


தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா பயணம் பிரதமர் அடித்த பிசினஸ் டிரிப்.

பிரதமர் தொடங்கி வைத்தது எல்லாமே வணிக வளர்ச்சிக்கும், கார்ப்பரேட் விரிவாக்கத் துக்கும் ஏதுவாக வகுக்கப் பட்ட உள் கட்டுமான திட்டங்கள்.

நகரங்களே வளர்ச்சியின் என்ஜின்கள், வணிக வளர்ச்சியே மக்கள் வளர்ச்சியை தீர்மானிக்கும் ஆகிய பிஜேபி யின் பொருளாதார கொள்கைகளுக்கு ஏற்ப ஹைதராபாத் மல்டி மாடல் போக்குவரத்து, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் போன்ற வணிக மையங்களை சென்னை துறைமுகம், அதிகார மையத்துடன் இணைக்கும் வந்தே பாரத், சென்னை விமான நிலைய விரிவாக்கம் போன்ற திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்.

மதுரை புறக்கணிக்கப் பட்டது இதனால்தான்.

திருத்துறை பூண்டி, அகஸ்தியம் பள்ளி ரயில் பாதை அங்கு உற்பத்தி செய்யப் படும் industrial salt வணிக மையங்களுக்கு கொண்டு செல்வதற்கானது. பிளாஸ்டிக், பாலியஸ்டர்,கண்ணாடி ஆகியவை செய்ய பயன்படும் இந்த உப்புக்கு இப்போது மார்க்கெட் அதிகரித்து உள்ளது. எனவே சோழியன் குடுமி ஆடுகிறது.

பின்பு பிரதமர் கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் புராஜக்ட் டைகர் என்ற புலிகளை காக்கும் திட்டம் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் ஆன கொண்டாட்டங்களை தொடங்கி வைக்கிறார். யானை வளர்த்த பழங்குடி தம்பதி களை சந்திக்கிறார்.

இதெல்லாம் வன அதிகார வர்க்கத்தை வலிமை படுத்தும் நிகழ்வுகள். இந்த வனத்துறை திட்டங்களால் பல்லாயிரம் மக்கள் வனங்களில் இருந்து வெளியேற்றப் பட்டனர். போராட்டங்களும் உயிற்பலிகளும் நடந்தன. இந்த மக்களுக்கு நலத் திட்டங்கள் எதையும் பிரதமர் தொடங்கி வைக்கவில்லை.

பொதுவாகவே இந்தப் பயணத்தில் கார்ப்பரேட் நலனே முன்னிலை வகிக்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், நடுத்தர வர்க்க மக்கள் என்று பொது மக்களுக்கு பெயரளவில் கூட எதுவும் இல்லை.

ஒரு நாட்டை கார்ப்பரேட் கம்பெனி போல நிர்வகிக்கும் இன்னொரு பயணம்.

1 comment:

  1. திருப்பதியில் இருக்கும் காகம் கோவிந்தா என்றா கத்தும்?

    உள்ளூர் என்றாலும், வெளிநாடு என்றாலும் கார்ப்பரேட் நலனே!

    ReplyDelete