மூன்று
நாட்கள் முன்பாக ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான நியூசிலாந்து நாட்டு
குடி மகனான கேம்பெல் வில்சன் அளித்த பேட்டி இந்து நாளிதழில் வந்திருந்தது.
வளைகுடா
நாடுகளில் இயங்கும் எமிரேட்ஸ் போன்ற விமான
நிறுவனங்கள் தாங்கள் இந்தியாவிலிருந்து இயக்கும் விமானங்களின் இருக்கை எண்ணிக்கையை
அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்களாம்.
இதனை
அனுமதிக்கவே கூடாது. அதனால் தேச நலன் பாதிக்கப்படும் என்று அவர் கடுமையாக எதிர்த்துள்ளார்.
இதிலென்ன
தேச நலன் இருக்கிறது என்றுதான் எனக்கு தெரியவில்லை.
ஏர்
இந்தியா ஒன்றும் அரசு நிறுவனம் இல்லை. பொதுத்துறை நிறுவனம் இல்லை. அதனால் ஏர் இந்தியாவிற்கு லாபம் அதிகரித்தாலோ இல்லை நஷ்டம் ஏற்பட்டாலோ அதனால்
நாட்டிற்கு எந்த பிரயோசனமும் கிடையாது.
அப்படி
ஒன்றும் ஏர் இந்தியா மக்கள் நலனுக்காக எந்த துரும்பையும் கிள்ளிப் போட்டதில்லை. உக்ரைன்
போர் சமயத்தில் அங்கே சிக்கிக் கொண்ட இந்திய மாணவர்களை கூட்டி வருவதற்கு மூன்று மடங்கு தொகையை வசூலித்த நிறுவனம்தான் ஏர்
இந்தியா.
அவங்களுக்கு
நிறைய டிக்கெட் வித்தா எங்களுக்கு பிரச்சினை என்று சொன்னால் ஒரு சர்ச்சையும் கிடையாது.
இதிலே தேச நலன் என்று முகமூடி அணிந்து கொள்வதுதான் அயோக்கியத்தனம்.
ஏர்
இந்தியா பொதுத்துறை நிறுவனமாக இருந்த போது அதன் நிர்வாகம், தனியா விமான நிறுவனங்களை
அனுமதிக்கக் கூடாது, அது தேச நலனுக்கு எதிரானது என்று சொல்லியிருந்தால், அதை அரசு கேட்டிருந்தால்
இன்று வெளிநாட்டுக்காரரான கேம்பெல் வில்ஸன் எல்லாம் தேச நலன் பற்றி பேசும் அவல நிலைமை
வந்திருக்காது.
No comments:
Post a Comment