Tuesday, April 11, 2023

துர்வாசரின் துர்நாற்றம்

 



முதலில் உள்ளது நேற்று மாலை பகிர்வதற்காக எழுதியது. ரவியின் பல்டி காரணமாக இயலவில்லை.

 

அதற்குள் பிரச்சினை முற்றியுள்ளதால் பிற்சேர்க்கையும் அவசியமாகி விட்டது.

 

துர்வாசர் பயந்துட்டாரு

 

துக்ளக் பத்திரிக்கையின் முன்பு துர்வாசர் என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்த வண்ண நிலவன், எழுத்தாளர் இமையத்தின் மீது விஷத்தை கக்கியுள்ளார்.

 

வண்ண நிலவனின் பதிவுகளும் அதற்கு இமையம் ஆற்றிய எதிர்வினையும் கீழே உள்ளது.

 






“செல்லாத பணம்” நாவலுக்கு இமையம் பெற்ற சாகித்ய அகாடமி விருதும் இமையம் தன்னை திமுக உறுப்பினர் என்று வெளிப்படையாக அறிவித்ததும் துக்ளக் பத்திரிக்கையின் முன்னாள் எழுத்தாளர் வண்ண நிலவனுக்கு எரிச்சலை உருவாக்கி விட்டது போல. . .

 

இமையத்திற்கு சாகித்ய அகாடமி விருது அளிக்கப்பட்ட போதே தன் வயிற்றெரிச்சலை மூத்த்த்த்த்த மாலன் வெளிப்படுத்தி இருந்தார். அப்போது எழுதிய பதிவு கீழே.

 

வெட்கமே இல்லையா மாலன்?

 




மூத்த்த்த்த பத்திரிக்கையாளரின் முக நூல் பக்கமே நீண்ட காலமாக செல்லவில்லை.  பத்தாண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிமுக அரசு பற்றி கருத்து கேட்காமல் 2006-2011 கலைஞர் அரசு பற்றி கருத்து கேட்கும் அவரது புத்திசாலித்தனம் மெய்சிலிர்க்க வைத்தது. (பத்து வருட அதிமுக ஆட்சியைப் பற்றி எதுவும் பேசாமல் அதற்கு முந்தைய திமுக ஆட்சியைப் பற்றி பேசுவதன் சூட்சுமம் பற்றி தனியாக எழுத வேண்டும்)

 அப்போதுதான் சாகித்ய அகாடமி விருது பற்றிய இந்த பதிவு கண்ணில் பட்டது.



 இந்த பதிவின் மூலம் மாலன் யாரை தூண்டி விடுகிறார்?

 பரிசு கிடைத்த இமையத்தின் படைப்பை விட இவர் படைப்பு தேவலாமே! அதற்கு கிடைத்திருக்கலாமே! இதற்கு கொடுத்திருக்கலாமே என்ற விவாதத்தை உருவாக்குவதன் நோக்கம் என்ன?

 மாலனின் சிண்டு முடிதலுக்கு இரண்டு காரணம் இருக்கலாம்.

 

ஒன்று திரு இமையம் தன்னை திமுக உறுப்பினர் என்று வெளிப்படையாகவே பிரகடனம் செய்துள்ளவர்.

 

இரண்டு திரு இமையம் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர், அவர்களின் வலிகளை தன் எழுத்தில் கொண்டு வருபவர்.

 இரண்டு காரணங்களுமே மாலனின் வெறுப்புக்குக் காரணமாக இருக்கலாம்.

 அதை நேரடியாக வெளிப்படுத்தாமல் இப்படி நரித்தந்திரத்தின் மூலம் வெளிப்படுத்துகிறார்.

திராவிட இயக்கத்தின் மீது, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் மீது பொய்யும் புரட்டுமாக வரலாற்றுத் திரிபோடு விஷம் கக்கிய காரணத்தால் கடந்தாண்டு "சூல்" நாவலுக்கு விருது கிடைத்த போது இவர் அப்படி கேட்டிருந்தால் நியாயமாக இருந்திருக்கும். 

 ஆனால் இது எனக்கு அதிர்ச்சியாக இல்லை. இதை விட அசிங்கமாக அவர் நடந்து கொண்டதைத்தான் பார்த்து விட்டோமே!

சட்டப்பேரவை தேர்தல் நெருங்க நெருங்க மாலனின் விஷக் கூச்சல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இன்று கூட தீக்கதிர் முன்னாள் பொறுப்பாசிரியர் தோழர் அ.குமரேசனின் முக நூல் பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டு வாங்கிக் கட்டிக் கொண்டார். ஆனால் பதில் மட்டும் சொல்லவில்லை.

 இப்படி இங்கே கம்பு சுத்துகிற மாலன், ட்விட்டரில் என்ன செய்கிறார் தெரியுமா?

 அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

வண்ண நிலவன் ரொம்பவுமே லேட் . இப்போதுதான் எழுதுகிறார். நெல்லை எழுத்தாளனான எனக்கு கிடைக்காத ஒன்று விருத்தாசலம் எழுத்தாளனுக்கு கிடைப்பதா என்ற விருதோஃபோபியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சாகித்ய அகாடமி விருது கொடுத்து விட்டால் சரியாகி விடுவார்.  

 

இமையத்தின் எழுத்துக்களை படித்ததற்கான விஷ முறிவு வைத்தியமாக ராஜநாராயணன் எழுத்துக்களை படிக்க வேண்டும் என்று இவர் சொல்வதும் மிகப் பெரிய போலித்தனம்.

 

ஆம்.

 

கிரா இறந்த போது அவருக்கு அரசு மரியாதை கொடுக்கப்பட்டதை  நக்கல் அடித்தவர் இவர். அப்போது இவர் எழுதிய பதிவு கீழே உள்ளது.

 மிகைப் படுத்தப் பட்ட புகழை,ஊதிப்பெருக்க வைக்கப்பட்ட புகழை அடைந்தவர் ராஜநாராயணன்.அவருடைய கரிசல் இலக்கியம் என்பதெல்லாம் இட்டுக் கட்டப் பட்டது.தஞ்சாவூர் இலக்கியம், திருநெல்வேலி இலக்கியம், கொங்கு இலக்கியம் , திருவண்ணாமலை இலக்கியம் என்றெல்லாம் வகைப்படுத்துவதைப் போன்ற அபத்தம் வேறில்லை.இலக்கியம் வட்டாரம் சார்ந்ததல்ல. மொழி,நிலம் சார்ந்த விஷயங்களை வைத்து இலக்கியத்தைப் பிரிப்பது சரியில்லை,நியாயமும் இல்லை.

ராஜநாராயணன் முதல் தரமான,இலக்கியபூர்வமான சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதிய சிறந்த எழுத்தாளர்.(கதைசொல்லி என்பது செல்லம் கொஞ்சுதல். நான் செல்லம் கொஞ்ச விரும்பவில்லை) அவருடைய கரிசல் சொல் அகராதி முக்கியமானது.அவருடைய நாட்டுப்புறக் கதைச் சேகரமும் அவருடைய தனித்த முயற்சிகளே.ஆனால்,அந்தப் பாலியல் கதைச் சேகரிப்பு அவருடைய பெருமைக்கு இழுக்கு சேர்ப்பது.

அவருக்கு ஞானபீடம் கொடுக்கும் அளவுக்கு அவரது கதைகளில் வாழ்வு குறித்த விசாரணைகள் , அல்லது தத்துவார்த்த ஆன்மீக மனநெருக்கடிகள் எதுவும் இல்லை.ஜெயகாந்தன் உரத்த குரலில் கதை சொன்னாலும் அவரது கதைகளில் மேற்குறித்த அம்சங்கள் நிறையவே உண்டு.அதனால்தான் அவருக்கு ஞானபீடம் வழங்கப்பட்டது.ராஜநாராயணனிடம் இது தேடினாலும் அகப்படாது.

அவருக்கு அரசு மரியாதை தரப்படுவது ரொம்ப அதிகப்படியானதே.

சரி,” துர்வாசர் பயந்துட்டாரு” என்று ஏன் தலைப்பு என்று கேட்கிறீர்களா?

 

அதொன்றுமில்லை.

 

எழுதிய பதிவுகளை எல்லாம் வண்ண நிலவன் நீக்கி விட்டார்.

 

பிற்சேர்க்கை

 

முதலில் எழுதிய பதிவுகளை நீக்கிய வண்ண நிலவன் இன்னொரு பதிவு எழுதியுள்ளார்.

 


இந்த பதிவிற்கு இமையம் ஆற்றிய எதிவினை கீழே…

 


வட்டார இலக்கியம் என்றெல்லாம் கிடையாது என்று சொல்கிற வண்ண நிலவன், எழுத்தாளர்களை ஜாதிய ரீதியில் பிரிக்கிறார். இது ஜாதிய மேட்டிமை புத்தி அன்றி வேறில்லை.

 

இவர் போன்றவர்கள்தான் சிறந்த எழுத்தாளர்கள் என்றால் இவர்கள் எழுதுவதுதான் சிறந்த படைப்பு என்றால்

 

அந்த எழுத்தும் படைப்பும் நாசமாய் போகட்டும்.

 

 

No comments:

Post a Comment