Wednesday, April 19, 2023

ஒன்றிய அரசும் உச்ச நீதிமன்றத்தை . . .

 


ஹை கோர்ட்டாவது? ..............................வது ? என்று எச்.ராசா சொன்னது வரலாற்றில் முக்கியமான வாக்கியமாகி விட்டது.

உச்ச நீதிமன்றத்தை ஒன்றிய அரசும் அது போலத்தான் நினைக்கிறது.

ஆம்.

குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன் புணர்வு செய்து அவர்களின் குடும்பத்தையே கொலை செய்த 11 கயவர்களை விடுதலை செய்தது குஜராத் அரசு.

முன் கூட்டியே விடுதலை செய்ததற்கான காரணங்களை சொல்லுமாறும் அதற்கான கோப்புக்களை சமர்ப்பிக்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டது.

ஆனால் இன்று வரை அது நடக்கவில்லை.

"இன்றைக்கு பில்கிஸ் பானு, நாளை அது நானாகவோ அல்லது நீங்களாகவோ கூட இருக்கலாம். காரணத்தை நீங்கள் சொல்லவிட்டால் நாங்களே ஏதாவது காரணத்தை கற்பித்துக் கொள்வோம்"

என்றெல்லாம் ஜட்ஜய்யா  பொங்குகிறார்.

ஆனால் சொசிட்டர் ஜெனரல் அசைந்து கொடுக்கவில்லை. உங்களுக்கு காரணத்தை சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று அரசு கருதுகிறது என்றே சொல்கிறார்.

கோப்புக்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யச் சொல்லி மனு போடவுள்ளோம் என்றும் சொல்கிறார்.

சரி, அந்த மனுவை எப்போது தாக்கல் செய்வாய் என்று கேட்டால், நான் திங்கட்கிழமை நீதிமன்றத்துக்கு வந்தால் தாக்கல் செய்வேன். வராவிட்டால் முடியாது, எப்போது வருவேன் என்றும் தெரியாது என்றும் சொல்கிறார்.

இப்போது சொல்லுங்கள்.

ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தை எச்.ராசாவின் ஹைகோர்ட் போலத்தானே மதிக்கிறது! 

No comments:

Post a Comment