நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்
மும்பை, ஏப்.19- பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லீம், கிறிஸ்தவர்கள், தலித் மக்கள் மீதான தாக்கு தல் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தின் மலாட் - பகுதியில் மார்ச் 30-ஆம் தேதி பாஜக, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம் அடங்கிய இந்துத்துவா கும்பல் ராமநவமி ஊர்வலத்தை நடத்தியது. இந்த ஊர்வலத்தின் பொழுது இஸ்லாமி யர்கள் இருக்கும் பகுதியில் நுழைந்த இந்துத்துவா கும்பல், இஸ்லாமியர்களின் வீடுகள், அவர்களின் இருசக்கர மற்றும் சரக்கு வாக னங்களை அடித்து நொறுக்கியது.
முஸ்லிம்கள் மீது மட்டும் வழக்கு
இந்த விவகாரத்தில் இஸ்லாமியர்கள் ராம நவமி ஊர்வலத்தில் கற்களை வீசியதால்தான் கலவரம் மூண்டதாக 12 முஸ்லீம் இளை ஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு மார்ச் 31-ஆம் தேதியும் இந்துத் துவா கும்பல் மீண்டும் கலவரத்தை அரங் கேற்ற, அடையாளம் தெரியாத நபர்கள் என்ற பெயரில் 400 பேர் மீது பெயரளவிற்கு வழக்கு பதிவு செய்தது மால்வானி காவல்துறை.
அமைதி ஊர்வலம்
கலவரம் நடந்து 2 வார காலம் ஆகிவிட்ட பொழுதிலும் மலாட்-மல்வானி பகுதியில் பதற்றச் சூழலே நீடித்தது. மேலும் காவல்துறை கட்டுப்பாட்டுப் பகுதியாகவும் அறிவிக்கப் பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளது. இந் நிலையில், மலாட்-மல்வானி பகுதியில் வாழும் அனைத்து மத மக்களும் தங்களுக்குள் ஆலோ சனை செய்து, திங்களன்று அமைதி மற்றும் மதநல்லிணக்க ஊர்வலத்தை நடத்தினர். ஊர்வலத்தில், “நாங்கள் அமைதியாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்குள் மத மோதல் இல்லை. இந்து - முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மதத்தினரும் மலாட்-மல்வானி பகுதியில் அமைதியாக, மத நல்லிணக்கத்துடன் இருக்கி றோம்” என்ற கோஷங்களுடன் பிரம்மாண்ட ஊர்வலத்தை நடத்தினர்.
கற்கள் வீசியவர்கள் வெளியாட்கள்
ராமநவமி ஊர்வலத்தில் கற்களை வீசிய வர்கள் மல்வானி பகுதியைச் சார்ந்தவர்கள் அல்ல. வெளிப்பகுதியில் இருந்து வந்த வர்கள். மல்வானி ஒரு அமைதியான மண்ட லம். இங்கு அனைத்து சமூகத்தினரும் ஒன்றாக வாழ்கின்றனர். சிசிடிவி காட்சிகளைப் பார்த்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்” என ஊர்வலத்தில் பங்கேற்ற இந்து மதத் தலைவர் கூறினார். ஊர்வலத்தில் பங்கேற்ற ஜெயின் சமூ கத்தைச் சேர்ந்தவர்,”பல்வேறு சமூகங்க ளைச் சேர்ந்தவர்கள் நடத்தும் அனைத்து வணிகக் கடைகளும் மல்வானி பகுதியில் உள் ளன. வன்முறைகளால் வணிகங்களை மோச மாகப் பாதிக்கும் சதிதான் இந்த கலவர அரங்கேற்றம். நாங்கள் அத்தகைய வன்முறை களை விரும்பவில்லை. நாங்கள் அமை தியை விரும்புகிறோம். மேலும் வன்முறை எதுவும் நடைபெறக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம்” எனக் கூறினார்.
நீரின் கீழ் நெருப்பு வைப்பு
No comments:
Post a Comment