உத்திரமேரூர் ஜனநாயக கல்வெட்டு குறித்து பெருமை பேச பிரதமருக்கு தகுதி இருக்கிறதா?
மதுரை எம்.பி. தோழர் சு.வெங்கடேசன் கேள்வி.
நேற்று சைதாப்பேட்டை தேரடியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கலை இரவு 2023 நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய தோழர் சு வெங்கடேசனின் உரை வழக்கம் போல் பல சுவாரசியங்களைக் கொண்டிருந்தது. பல சுவாரசியங்களில் ஒரு சுவாரசியம் இதோ..... (அவரது வார்த்தைகளிலேயே)
"நேற்று சித்திரை திருநாளை ஒட்டி டெல்லியில் மத்திய அமைச்சர் மாண்புமிகு எல் முருகன் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகிற பொழுது, நமது பிரதமர் 1200 ஆண்டுகளுக்கு முன்பே உலகத்திற்கே ஜனநாயகத்தை கற்பித்த பாரம்பரியமிக்க உத்திரமேரூர் கல்வெட்டுகளை பற்றி மிகவும் பெருமையாக பேசி இருக்கிறார். இவ்வளவு பேசியிருக்கிறாரே பெருமையாக ஆனால் அதைச் சொல்வதற்குரிய பொருத்தம் இவருக்கு இருக்கிறதா என்றால் இல்லை.
உத்திரமேரூர் கல்வெட்டு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு போட்டியிடக்கூடிய நபர்களின் தகுதிகள் குறித்தும் பேசி இருக்கிறது. அது குறிப்பிட்டிருக்கிற நான்கு தகுதிகளில் ஒன்று கல்வித் தகுதி. கல்வெட்டு குறித்து பெருமை பேசுகின்ற நீங்கள் அது முக்கியத்துவம் தருகிற கல்வி தகுதியைப் பேசினால் தடுமாறி நிற்கிறீர்களே.... ஏன்? என்று கேட்கிறோம்
.
மாறாக உங்களது கல்வித்தகுதி பற்றி நியாயம் கேட்கிறவர்களுக்கு ரூ 50000 அபராதம் விதிக்கின்ற விந்தை உங்கள் ஆட்சியில் மட்டும் தானே நடக்கிறது.
ஒரு இளங்கலை பட்டமும் ஒரு முதுகலை பட்டமும் பெற்றதாக சொல்லுகிறீர்கள். நீங்கள் முதுகலை பட்டம் பெற்றதாகச் சொல்லப்படுகிற தேதியில் அந்தப் பல்கலைக்கழகமே இல்லை என்பது தானே உண்மை. நீங்கள் இளங்கலை பட்டம் பெற்றதாக சொல்லப்படுகிற பல்கலைக்கழகத்தில் அந்தத் தேதியில் அந்த பாடமே இல்லை என்பதும் உண்மை தானே.
இதுகுறித்து நியாயம் கேட்க நீதிமன்றம் சென்றவருக்கு அந்த நீதிமன்றம் ரூபாய் 50,000 அபராதம் விதிக்கின்ற கொடுமை உங்கள் ஆட்சியில் நடைபெறுவதை ஏன் நீங்கள் பார்த்து ரசித்துக் கொண்டி ருக்கிறீர்கள்?
இத்தகு நீங்கள் உத்திரமேரூர் ஜனநாயக கல்வெட்டு குறித்து பெருமை பேசுவது நியாயம் தானா?"
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete