Saturday, April 29, 2023

ஆட்டுக்காரனை நம்பறாங்கய்யா

 


இன்னுமாடா இந்த உலகம் நம்மள நம்புது ன்னு ஆட்டுக்காரனையே யோசிக்க வைக்கும் பதிவுகள் கீழே . . .

எல்லாம் மத்யமர் ஆட்டுக்காரன் ஸ்பெஷல்







சங்கியாய் வாழும் துயரம்

 


தமிழர்கள் ஓட்டை வாங்கலாம் என்ற எண்ணத்தோடு ஆட்டுக்காரன் தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிக்க விட


கர்னாடக பாஜக ஆட்களோ, அப்படி ஒன்னும் ஓட்டு எழவெல்லாம் வேண்டாம்னு பாட்டை பாதியிலேயே நிறுத்திட்டாங்க.

நியாயப்படி பார்த்தா ஆட்டுக்காரன் அசிங்கப்பட்டு "போங்கடா, நீங்களும்  உங்க கர்னாடகா தேர்தலும்" என்று திரும்பி வந்திருக்கனும். ஆனா அந்தாளுக்கு வெட்கம், மான்ம், ரோஷம், சூடு, சொரணை எதுவும் கிடையாது.

ஆனா சங்கிங்க நிலைமை!

நடந்தது அசிங்கம்னு தெரியும். ஆனா அதை ஒத்துக்கவும் முடியாது. புதுசா வேற பிரச்சினை எதுவும் வேற இல்லை.

அதனால முட்டு முட்டுன்னு முட்டு கொடுக்கறாங்க பாருங்க!

"உள்ளே அழுகிறேன், வெளியில் சிரிக்கிறேன்" மொமண்ட்.

பாவம்யா சங்கியா வாழறது! 

Friday, April 28, 2023

அரசியலில் இதெல்லாம் ..........

 


அதிமுகவுடன் கூட்டணி என்றால் நான் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று வஜனம் பேசினான் ஆட்டுக்காரன்.

ஆட்டுக்காரன் மாதிரி முதிர்ச்சியற்றவர்கள் பற்றியெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள் என்றார் எடுபிடி  எடப்பாடி.

ஆனால் இப்போது . . . .


இதைத்தான் கவுண்டமணி அன்றே சொன்னார்

"அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"

Wednesday, April 26, 2023

ஆட்டுக்காரா, அது ...... வாயா?

 


ராகுல் காந்தி இந்திய ஜனநாயகம் பற்றி லண்டனில் உண்மையைச் சொன்னதற்கு சங்கிகள் குதித்தார்கள்.

இப்போது தமிழ்நாட்டை ஆட்டுக்காரன் கர்னாடகாவில் இழிவு படுத்தி பேசியுள்ளான்.


கர்னாடகா அரசியல் ஒரு புறம் இருக்கட்டும்.

"எனக்கு இன்னொரு முகம் இருக்கு, கர்னாடகா முகம். அடிச்சு பல்லு மொகரையெல்லாம் பேத்துடுவேன்"

என்று 

தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதும்

ஊடகக்காரர்களை (அவர்களுக்கு ரோஷம் கிடையாது என்பது வேறு விஷயம்) தொடர்ந்து அசிங்கப்படுத்துவதும்

கண்ணியம் என்ற கேட்டகரியில்தான் வருமா?

அல்லது

மகான் வடிவேலு சொன்னது போல

அது 

ஆட்டுக்காரனின் "............" வாயா?

குரங்குக் குளியல் - சிரிப்பு வருதுய்யா

 



கீழே உள்ள தகவலைப் படித்தவுடன் எனக்கு “கபகபன்னு” சிரிப்பு வந்தது.

 


யார் கண்டது! நம்ம ஆளுங்க இப்படி அளக்கறானுங்களே என்று “வெறும் நரேந்திரா”வுக்குக்கூட வெடிச்சிரிப்பு வந்திருக்கும்.

 

Tuesday, April 25, 2023

நான் அனுப்பி விட்டேன். நீங்கள்?


மாநில மனித உரிமை ஆணையத்துக்கு நான் அனுப்பிய மின்னஞ்சல் கீழே உள்ளது. அனைத்தும் விபரமாக உள்ளது. நான் அனுப்பியது போல நீங்களும் shrc.tn.gov.in என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

மாநில முதல்வர் ஆளுனருக்கு எதிராக பேசுகிறார். சட்டப்பேரவையில் தீர்மானம் போடுகிறார். ஆனால் மாநில காவல்துறை ஆட்டுத்தாடிக்கு காவடி எடுக்கிறது.

இதென்ன முரண்பாடு!




 


*பெறுநர்*
மாநில மனித உரிமைகள் ஆணையம்
திருவரங்கம்,
143, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை,
(கிரீன்வேஸ் சாலை),
சென்னை 600 028, தமிழ்நாடு.
அய்யா

பொருள் : *தஞ்சை தமிழ் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் SFI மாநில தலைவர் அரவிந்தசாமியை தன்னுடைய பட்டத்தை பெறவிடாமல் இழுத்துச் சென்று தனியறையில் பூட்டி விசாரணை என்ற பெயரில் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது வன்கொடுமை தடுப்பு மற்றும் மனித உரிமை மீறல் உள்ளிட்ட சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க கோருதல் தொடர்பாக*
வணக்கம்.
இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு தலைவர் கோ.அரவிந்தசாமி, 27 வயதுடைய இவர் தன்னுடைய ஆய்வில் நிறைஞர் (M.Phil) படிப்பை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 2021 ஆம் ஆண்டு முடித்தார். அதற்கான பட்டமளிப்பு விழா 24/04/23 (திங்கள்கிழமை) அன்று பல்கலைக்கழக கரிகால சோழன் பட்டமளிப்பு விழா அரங்கத்தில் நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவிற்கு கட்டணம் செலுத்தி பதிவு செய்த அனைத்து மாணவர்களும், காலை 8 மணிக்குள் அரங்கத்திற்குள் வரவேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது.

இதனை அடுத்து 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற அந்நிகழ்வில் அரவிந்தசாமியும் நீல நிற சட்டையும் வெள்ளை நிற கால் சட்டையும் அணிந்து கொண்டு சக மாணவராக பங்கேற்றார். காலை 9:35 மணியளவில் எஸ்பி திரு ஆசிஸ்ரேவத் அவர்களின் எஸ்.பி.சி.ஐ.டி உளவு பிரிவைசார்ந்த ஐந்து காவலர்கள் (நேரில் அவர் பார்த்தால் அடையாளம் கூடிய) அவரது பெயரை விசாரித்து தலைமுடி சட்டைப்பை அனைத்தையும் சோதனை செய்துவிட்டு சென்றனர். பிறகு 9:40 மணியளவில் மீண்டும் அதே எஸ்.பி.சி.ஐ.டியின் உளவு பிரிவைசார்ந்த வேறு 5 காவலர்கள் அவரது கை குட்டையை எடுத்து உதற சொல்லி முதுகு பக்கம் இடுப்பில் எல்லாம் சோதனை செய்துவிட்டு சென்றனர்.

பிறகு மண்டல சரக டிஐஜி திரு ஜெயச்சந்திரன் காவல் அதிகாரியின் தனிப்பிரிவு காவல் துறையினர் கும்பலாக (நேரில் அவர் அடையாளம் செய்யக்கூடிய) வந்து அவரை வலுகட்டாயமாக வெளியே இழுத்துச் சென்று மின்சாரம் இயந்திரம் வைத்திருக்கும் *மின்சார அறையின் உள்ளே வைத்து பூட்டி சோதனை என்ற பெயரில் அவர் அணிந்திருந்த பட்டமளிப்பு விழா அங்கி கோட்டை கழட்டச் சொல்லி பிறகு சட்டை கழற்றச் சொல்லி பேண்டை முழங்கால் வரை இறக்கச் சொல்லித் அவரது உள்ளாடைகள் எல்லாம் தூக்கி சோதனை என்ற பெயரில் அரை நிர்வாணப்படுத்தினர். கருப்பு உள்ளாடையும் கருப்பு மேல் பனியனும் அணிந்திருந்ததால் அதைப் பார்த்தும் அதையும் கழற்றச் சொல்லி இருக்கின்றனர். கடும் அதிர்ச்சியுற்ற அவர் இதற்கு மேலும் முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டதனால் விட்டுச் சென்றனர், பிறகு மேலும் தொடை மற்றும் பின்புறம் அனைத்து இடங்களிலும் கையை வைத்து அழுத்தி அநாகரிகமான முறையில் சோதனை என்ற பெயரில் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். எவ்வளவு முறையிட்டும் இத்தகைய சோதனையைத் தொடர்ந்து நடத்தினர்.*

பிறகு அதே மின்சார அறைக்குள் அமர வைத்துவிட்டு காவல் துறையினர் வெளியே காவலுக்கு நின்றனர். பட்டமளிப்பு விழா நிறைவடைந்து வெளியே செல்லும் சக மாணவர்கள் மற்றும் நண்பர்கள் அவரைப் பார்த்து 'தோழர் என்ன ஆச்சு??'' என்று விசாரித்த போது ''தோழர்'' என்று அழைத்த மாணவர்களையும் பிடித்து ''உனக்கும் அரவிந்திற்கும் என்ன தொடர்பு? நீ யார்? என்ன?'' என்ற விசாரணையை நடத்தினர். பிறகு மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து அஞ்சி கலைந்து சென்றனர். பிறகு மண்டல சரக காவல் அதிகாரிகளின் தனிப்பிரிவு காவல்துறை தஞ்சைநகர காவல் நிலைய காவலர்களிடம் அவரை ஒப்படைத்துவிட்டு அவர்கள் சென்றனர். *தஞ்சை நகர் காவலர்கள் அவர்களது வாகனத்தில் அழைத்துச் சென்று ஒரு மணி நேரம் தஞ்சை பகுதியில் சுற்றி பிறகு ஒரு மணிக்கு மேல் பல்கலைக்கழக கட்டிடத்திற்குள் அதேபோல் காவல்துறைக்கு மத்தியில் அமர வைத்திருந்தனர், சிறுநீர் கழிக்க கழிவறைக்கு சென்றால் கூட மூன்று காவலர்கள் அவரது அருகே அனுப்பி சிறுநீர்கழிக்கும் வரை அருகிலேயே இருந்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.*

இப்படி விசாரணை என்ற பெயரில் தனக்கு நேர்ந்த கொடுமைகளும் இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்க விடாமல் மனரீதியாக மன உளைச்சலுக்கு ஏற்படுத்தி அவரை மட்டுமல்லாமல் அவரோடு வந்த உறவினர்கள், குடும்பத்தினர்கள் அனைவருக்கும் பெரும் மன உளைச்சளை ஏற்படுத்திய சம்பந்தப்பட்ட ஐஜி, டிஐஜி, எஸ்பி, காவல் ஆய்வாளர் உட்பட காவல் அதிகாரிகள், தஞ்சாவூர் காவலர்கள் மீது உடனடியாக மனித உரிமை மீறல் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்ட பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்படிக்கு,
எஸ்.ராமன், வேலூர்

Monday, April 24, 2023

தேச நலன் அல்ல! உங்கள் நலன்

 


மூன்று நாட்கள் முன்பாக ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான நியூசிலாந்து நாட்டு குடி மகனான கேம்பெல் வில்சன் அளித்த பேட்டி இந்து நாளிதழில் வந்திருந்தது.

வளைகுடா நாடுகளில் இயங்கும் எமிரேட்ஸ்  போன்ற விமான நிறுவனங்கள் தாங்கள் இந்தியாவிலிருந்து இயக்கும் விமானங்களின் இருக்கை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்களாம்.

இதனை அனுமதிக்கவே கூடாது. அதனால் தேச நலன் பாதிக்கப்படும் என்று அவர் கடுமையாக எதிர்த்துள்ளார்.

இதிலென்ன தேச நலன் இருக்கிறது என்றுதான் எனக்கு தெரியவில்லை.

 ஏர் இந்தியா ஒன்றும் அரசு நிறுவனம் இல்லை. பொதுத்துறை நிறுவனம் இல்லை. அதனால்  ஏர் இந்தியாவிற்கு  லாபம் அதிகரித்தாலோ இல்லை நஷ்டம் ஏற்பட்டாலோ அதனால் நாட்டிற்கு எந்த பிரயோசனமும் கிடையாது.

 அப்படி ஒன்றும் ஏர் இந்தியா மக்கள் நலனுக்காக எந்த துரும்பையும் கிள்ளிப் போட்டதில்லை. உக்ரைன் போர் சமயத்தில் அங்கே சிக்கிக் கொண்ட இந்திய மாணவர்களை கூட்டி வருவதற்கு  மூன்று மடங்கு தொகையை வசூலித்த நிறுவனம்தான் ஏர் இந்தியா.

 அவங்களுக்கு நிறைய டிக்கெட் வித்தா எங்களுக்கு பிரச்சினை என்று சொன்னால் ஒரு சர்ச்சையும் கிடையாது. இதிலே தேச நலன் என்று முகமூடி அணிந்து கொள்வதுதான் அயோக்கியத்தனம்.

 ஏர் இந்தியா பொதுத்துறை நிறுவனமாக இருந்த போது அதன் நிர்வாகம், தனியா விமான நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது, அது தேச நலனுக்கு எதிரானது என்று சொல்லியிருந்தால், அதை அரசு கேட்டிருந்தால் இன்று வெளிநாட்டுக்காரரான கேம்பெல் வில்ஸன் எல்லாம் தேச நலன் பற்றி பேசும் அவல நிலைமை வந்திருக்காது.  

 

நிறுத்த வேண்டாம். திரும்பப் பெறுக

 


எட்டு மணி நேர வேலை நிறுத்தத்தை 12 மணி நேரமாக உயர்த்திய சட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

கூட்டணிக் கட்சிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் கோபத்தை தெரியப் படுத்திய மக்களுக்கும் கிடைத்த வெற்றி இது.

இறுதித் தீர்வு என்பது நிறுத்தி வைத்தலில் கிடைக்காது. திரும்பப் பெறுவதில்தான் இருக்கிறது.

எனவே அதை தமிழ்நாட்டு அரசு உடனடியாக செய்ய வேண்டும்.

ஒரு கமா கூட மாற்றப்படாது என்று சொல்லப்பட்ட விவசாய சட்டங்களே திரும்பப் பெறப்பட்டது. அதனால் கௌரவம் பார்க்காமல் அந்த நடவடிக்கையை அரசு உடனே எடுக்க வேண்டும். 


ஒரே ட்ரெயின், இரண்டு இந்தியா

 


பெங்களூருக்குச் சென்ற மகனை வழியனுப்ப நேற்று மாலை காட்பாடி ரயில் நிலையம் சென்றிருந்தேன். 

அப்போது எதிர் ப்ளாட்பார்மில் நின்றிருந்த பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் வண்டியின் சாதாரண வகுப்பு கோச் படத்தில் உள்ளது. முன்பதிவு செய்து இருக்கையில் அமர்ந்திருந்த  பயணிகளுக்கு இணையான அளவில் பயணிகள் நின்று கொண்டும் இருந்தார்கள்.

அடுத்த படத்தை பாருங்கள்.


குளிர் சாதனம் செய்யப்பட்ட பெட்டிகளில் பாதிக்கும் மேற்பட்ட இருக்கைகள் காலியாக இருந்தன. 

ஏன் இந்த முரண்பாடு?

ரயில்வே இப்போதெல்லாம் இரண்டாம் வகுப்பு பெட்டிகளையும் முன் பதிவு செய்யப்படாத பெட்டிகளையும் குறைத்து விட்டு குளிர்சாதனப் பெட்டிகளை அதிகரித்து விட்டது ரயில்வே துறை,

எல்லாம் காசுக்காகத்தான் . . .

"ஒளிரும் இந்தியா", "துன்பத்தில் உழலும் இந்தியா" என்று இரண்டு இந்தியாக்கள் இருப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி அடிக்கடி சொல்வார்.

இதனைத்தான் அந்த ரயிலும் சொல்கிறது. 



Sunday, April 23, 2023

ஆட்டுக்காரனை அசிங்கப்படுத்துதா விகடன்?

 


உண்மையான கர்னாடக சிங்கம் வந்தது என்று சொல்வதன் மூலம் ஆட்டுக்காரன் ஒரு டுபாக்கூர் கர்னாடக சிங்கம் என்று சொல்லி அசிங்கப் படுத்துகிறதா விகடன்?

ஜனாதிபதி போஸ்ட் ஜஸ்டு மிஸ்ஸு

 


மாயாபென் கோட்னானி என்ற "வெறும் நரேந்திரா"வின் முதல்வராக இருந்த போது மாநில மந்தியாக இருந்தவருக்கு குஜராத் கலவரத்திற்காக முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

இப்போது அவர் குற்றமற்றவர் என்றொரு குஜராத் நீதிமன்றம் விடுதலை செய்து விட்டது.

வழக்கமாக கொலைகாரர்கள் விடுதலை செய்யப்பட்ட பின்பு அவர்களுக்கு எம்.பி. மந்திரி என்று பதவி கொடுத்து அழகு பார்ப்பது பாஜகவின் பெருமை மிகு பாரம்பரியம்.

ஆனாலும் இவர் சாதாரணமானவர் இல்லையே.

ஒன்ற. இரண்டா, அறுபத்து ஏழு பேர் கொடூரமாக கொல்லப்பட்ட நரோடா பாட்டியா வழக்கு! முதலில் மரண தண்டனை வேறு கொடுத்தார்கள்.

அம்மையார் ரேஞ்சிற்கு ஜனாதிபதி பதவிதான் கொடுக்க வேண்டும். என்ன சில மாதங்கள் முன்பாகத்தான் புதிய ஜனாதிபதி நியமிக்க்கப் பட்டு விட்டார். அதனால் வாய்ப்பு போய் விட்டது.

பேசாமல் அமெரிக்க தூதராக்கி விடுங்கள், 

"வெறும் நரேந்திரா"வுக்கு முன்பு விசா கொடுக்காத அமெரிக்காவை சூப்பராக பழி வாங்கியது மாதிரியும் இருக்கும் ! 

Friday, April 21, 2023

தடம் மாற வேண்டாம் தமிழ்நாட்டு அரசே!

 


தமிழ்நாடு அரசு இன்று நிறைவேற்றிய தொழிலாளர்களுக்கு எதிரான சட்டம் பிற்போக்குத்தனமானது.

பனிரெண்டு மணி நேர வேலை என்பது மனிதத்தன்மையற்றது என்பதால்தான் தொழிலாளர்கள் போராடினார்கள், துப்பாக்கித் தோட்டாக்களையும் தூக்குத்தண்டனையையும் பரிசாகப் பெற்றார்கள்.

அதனை மாற்றுவது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. கண்டிக்கத்தக்கது. 

ஒன்றிய அரசும் சங்கிகளும் ஆட்டுத்தாடியும்  எந்நேரமும் விஷம் கக்கிக் கொண்டிருக்கும் சூழலில் நேச சக்திகளின் எதிர்ப்பை மீறி செயல்படுவது மோசமான அரசியல் முடிவும் கூட.

தொழிலாளர்களின் விருப்பம் என்று சொல்வதெல்லாம் நடைமுறைக்கு உதவாது.

முடிவை அரசு உடனே மாற்ற வேண்டும். அது வரை சமரசமில்லாத போராட்டம் நடைபெற வேண்டும். 

வந்தே பாரத்.ரஷ்யாவுக்கு லாபம்

 


வந்தே பாரத் ட்ரெயின் கோளாறுகளைச் சொன்னால் இந்தியாவில் தமிழ்நாட்டில் ஐ.சி.ஃஎப்பில் தயாரிப்பை குறை சொல்லலாமா என்று சங்கிகள் சண்டைக்கு வந்தார்கள்.

ஆனால் இப்போது வந்தே பாரத் தயாரிப்பு ரஷ்ய நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கும் என்ன முட்டு கொடுக்கிறார்கள் தெரியுமா?

கம்பெனி ரஷ்யக் கம்பெனிதான். ஆனால் இந்தியாவில்தான் தயாரிக்கப் போகிறார்கள் என்று.

"மாப்பிள்ளை அவருதான். அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது" என்பது போல கம்பெனி இந்தியாவில் செயல்படும். ஆனால் லாபம் ம்ட்டும் ர்ஷ்யக் கம்பெனிக்கு போகும்.

இந்த "மேக் இன் இந்தியா'? 

அதெல்லாம் வழக்கமான ஜூம்லா  . . . 

Thursday, April 20, 2023

நீரின் கீழ் நெருப்பு

 


நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்

மும்பை, ஏப்.19- பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லீம், கிறிஸ்தவர்கள், தலித் மக்கள் மீதான தாக்கு தல் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து  வருகிறது. இந்நிலையில், பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தின் மலாட் -  பகுதியில் மார்ச் 30-ஆம் தேதி பாஜக, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம் அடங்கிய இந்துத்துவா கும்பல் ராமநவமி ஊர்வலத்தை நடத்தியது. இந்த ஊர்வலத்தின் பொழுது இஸ்லாமி யர்கள் இருக்கும் பகுதியில் நுழைந்த இந்துத்துவா கும்பல்,  இஸ்லாமியர்களின்  வீடுகள், அவர்களின் இருசக்கர மற்றும் சரக்கு வாக னங்களை அடித்து நொறுக்கியது.

முஸ்லிம்கள் மீது மட்டும் வழக்கு

இந்த விவகாரத்தில் இஸ்லாமியர்கள் ராம நவமி ஊர்வலத்தில் கற்களை வீசியதால்தான்  கலவரம் மூண்டதாக 12 முஸ்லீம் இளை ஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு மார்ச் 31-ஆம் தேதியும் இந்துத் துவா கும்பல் மீண்டும் கலவரத்தை அரங் கேற்ற, அடையாளம் தெரியாத நபர்கள் என்ற  பெயரில் 400 பேர் மீது பெயரளவிற்கு  வழக்கு  பதிவு செய்தது மால்வானி காவல்துறை.

அமைதி ஊர்வலம்

கலவரம் நடந்து 2 வார காலம் ஆகிவிட்ட  பொழுதிலும் மலாட்-மல்வானி பகுதியில் பதற்றச் சூழலே நீடித்தது. மேலும் காவல்துறை கட்டுப்பாட்டுப் பகுதியாகவும் அறிவிக்கப் பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளது. இந்  நிலையில், மலாட்-மல்வானி பகுதியில் வாழும்  அனைத்து மத மக்களும் தங்களுக்குள் ஆலோ சனை செய்து, திங்களன்று அமைதி மற்றும் மதநல்லிணக்க ஊர்வலத்தை நடத்தினர். ஊர்வலத்தில், “நாங்கள் அமைதியாக வாழ்ந்து  வருகிறோம். எங்களுக்குள் மத மோதல் இல்லை. இந்து - முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மதத்தினரும் மலாட்-மல்வானி பகுதியில் அமைதியாக, மத நல்லிணக்கத்துடன் இருக்கி றோம்” என்ற கோஷங்களுடன் பிரம்மாண்ட  ஊர்வலத்தை நடத்தினர்.

கற்கள் வீசியவர்கள் வெளியாட்கள்

ராமநவமி ஊர்வலத்தில் கற்களை வீசிய வர்கள் மல்வானி பகுதியைச் சார்ந்தவர்கள் அல்ல. வெளிப்பகுதியில் இருந்து வந்த வர்கள். மல்வானி ஒரு அமைதியான மண்ட லம். இங்கு அனைத்து சமூகத்தினரும் ஒன்றாக வாழ்கின்றனர். சிசிடிவி காட்சிகளைப் பார்த்து  குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்” என ஊர்வலத்தில் பங்கேற்ற இந்து மதத் தலைவர் கூறினார். ஊர்வலத்தில் பங்கேற்ற ஜெயின் சமூ கத்தைச் சேர்ந்தவர்,”பல்வேறு சமூகங்க ளைச் சேர்ந்தவர்கள் நடத்தும் அனைத்து வணிகக் கடைகளும் மல்வானி பகுதியில் உள்  ளன. வன்முறைகளால் வணிகங்களை மோச மாகப் பாதிக்கும் சதிதான் இந்த கலவர அரங்கேற்றம். நாங்கள் அத்தகைய வன்முறை களை விரும்பவில்லை. நாங்கள் அமை தியை விரும்புகிறோம். மேலும் வன்முறை எதுவும் நடைபெறக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம்” எனக் கூறினார்.

நீரின் கீழ் நெருப்பு வைப்பு

ஊர்வலத்தில் பங்கேற்ற சீக்கிய சமூ கத்தைச் சேர்ந்த ஒருவர்,”மும்பையில் அமைதி  நிலவ வேண்டும் என்று அனைத்து மத  மக்களும் விரும்புகிறோம். சமூக விரோதிகள்,  எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தா லும், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தா லும், அவர்கள் மீது காவல்துறை நட வடிக்கை எடுக்க வேண்டும். குடியிருப்பா ளர்கள் எப்போதும் நிம்மதியாக வாழ விரும்பு கின்றனர். எதிர்காலத்திலும் அதையே விரும்பு கிறார்கள். மக்கள் என்ற தண்ணீரில் கல்லை  எறிந்து தொந்தரவு செய்ய விரும்புகிறார்கள். ஆனால் தண்ணீர் இதை கண்டுகொள்ளாமல் எப்பொழுதும் போல அமைதியாக இருக்கி றது. ஆனால் தண்ணீரின் கீழ் நெருப்பை வைத்திருப்பதை நிறுத்தும் வரை, தண்ணீர்  கொதிப்பதை நிறுத்த முடியாது. நாட்டில் தீ  வைப்பவர்களிடம் இதுபோன்ற செயல்க ளைச் செய்ய வேண்டாம் என்றும் நாடு முழுவதும் அமைதியைப் பேணுமாறும் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறினார்.


நன்றி - தீக்கதிர் 


 

Wednesday, April 19, 2023

பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள் ஒன்றிய அரசே!

 


உச்ச நீதிமன்றத்தை ஒன்றிய அர்சு எப்படி மதிக்கிறது என்று காலையில் எழுதியிருந்தேன்.

ஏதோ ஒரு கூட்டத்தில் பாக்யராஜ் பேசிய காணொளியை இன்று பார்த்தேன். அந்த காணொளி கீழே. . .



நீதிமன்றத்தை எப்படி மதிக்க வேண்டும் என்பதை ஒன்றிய அரசு இதைப் பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டும். அது போலவே நீதிமன்றத்தின் மதிப்பை சில நீதிபதிகளும் பாதுகாக்க வேண்டும், குறிப்பாக மதுரை பெஞ்சில் இருக்கும் ஒருவர்.

எச்.ராசா, ஒன்றிய அரசு ஆகியோர் நீதிமன்றத்திற்கு கொடுக்கும் மரியாதையை அறிந்தால் நடிகர் திலகத்தின் முகம் மேலே உள்ள படம் போல மாறியிருக்குமோ!

ஒன்றிய அரசும் உச்ச நீதிமன்றத்தை . . .

 


ஹை கோர்ட்டாவது? ..............................வது ? என்று எச்.ராசா சொன்னது வரலாற்றில் முக்கியமான வாக்கியமாகி விட்டது.

உச்ச நீதிமன்றத்தை ஒன்றிய அரசும் அது போலத்தான் நினைக்கிறது.

ஆம்.

குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன் புணர்வு செய்து அவர்களின் குடும்பத்தையே கொலை செய்த 11 கயவர்களை விடுதலை செய்தது குஜராத் அரசு.

முன் கூட்டியே விடுதலை செய்ததற்கான காரணங்களை சொல்லுமாறும் அதற்கான கோப்புக்களை சமர்ப்பிக்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டது.

ஆனால் இன்று வரை அது நடக்கவில்லை.

"இன்றைக்கு பில்கிஸ் பானு, நாளை அது நானாகவோ அல்லது நீங்களாகவோ கூட இருக்கலாம். காரணத்தை நீங்கள் சொல்லவிட்டால் நாங்களே ஏதாவது காரணத்தை கற்பித்துக் கொள்வோம்"

என்றெல்லாம் ஜட்ஜய்யா  பொங்குகிறார்.

ஆனால் சொசிட்டர் ஜெனரல் அசைந்து கொடுக்கவில்லை. உங்களுக்கு காரணத்தை சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று அரசு கருதுகிறது என்றே சொல்கிறார்.

கோப்புக்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யச் சொல்லி மனு போடவுள்ளோம் என்றும் சொல்கிறார்.

சரி, அந்த மனுவை எப்போது தாக்கல் செய்வாய் என்று கேட்டால், நான் திங்கட்கிழமை நீதிமன்றத்துக்கு வந்தால் தாக்கல் செய்வேன். வராவிட்டால் முடியாது, எப்போது வருவேன் என்றும் தெரியாது என்றும் சொல்கிறார்.

இப்போது சொல்லுங்கள்.

ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தை எச்.ராசாவின் ஹைகோர்ட் போலத்தானே மதிக்கிறது! 

Tuesday, April 18, 2023

ஆட்டுக்காரனை அதனால்தான் . . .

 


ஆட்டுக்காரனை ஏன் ஆப்பாயில், அரைவேக்காடு, பொய்யன், முட்டாள் என்றெல்லாம் அன்போடு அழைக்கிறோம்?

இச்செய்தியை முதலில் படியுங்கள்


இது உண்மை.

இந்த சம்பவத்திற்கு ஆட்டுக்காரன் போட்ட ட்வீட் (இப்போது நீக்கி விட்டான்)  என்ன தெரியுமா? 



என்ன, ஏது என்று  தெரியும் முன்பே பயங்கரவாதிகள் தாக்குதல் என்று சொல்லும் ஆசாமியை வேறெப்படி அழைக்க முடியும்!

கர்னாடகக் காற்று மாறி அடிக்குதா?

 பாஜகவின் பல தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.

அங்கே அரசியல் காற்று மாறி அடிக்கிறதா?

மூழ்கும் கப்பலில் இருந்து தப்பிக்கின்றனரா?

Monday, April 17, 2023

மொட்டைச் சாமியாரின் உதிரப் பிரதேசம்

 





 

உதிரப் பிரதேசம் என்று பொருத்தமாகச் சொன்ன ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரனுக்கு முதலில் நன்றி.

 

மொட்டைச்சாமியார் ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேசம் இது நாள் வரை பாலியல் குற்றங்களின் தலைமை மாநிலமாக இருந்தது. இப்போது கொலைகளின் தலைமையிடமாக மாறி விட்டது.

 

அலகாபாத்தில் நீதிமன்ற  வளாகத்திற்குள் காவலர்கள் புடை சூழ ஊடகக்காரர்களோடு பேசிக் கொண்டிருந்த இருவர் (அவர் முன்னாள் எம்.பி யாக இருக்கட்டும், 100 க்கும் மேற்பட்ட வழக்குகளை கொண்ட  கிரிமினலாக இருக்கட்டும். அதற்கான தண்டனை கொடுக்கும் அதிகாரம் போலீசுக்கோ முதலமைச்சருக்கோ கிடையாது என்பதை புரிந்து கொண்டு மேலே படிக்கவும்) கோர்ட் வாசலிலேயே சுடப்படுகிறார். அவரது சகோதரரும் சுடப் படுகிறார். இருவரும் அங்கேயே இறக்கிறார்கள்.

 

இந்த கொலை போலீஸ் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்து நடந்த கொலை.

 

ஏன்?

 

பிப்ரவரி மாதத்தில்  உமேஷ் பால் என்ற வக்கீல் கொல்லப்படுகிறார். அலகாபாத் கோர்ட் வளாகத்தில் கொல்லப்பட்ட அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் முதல் குற்றவாளிகளாக குற்றம் சுமத்தப்பட்ட ராஜூ படேல் என்பவரது பத்தாண்டுகளுக்கு முந்தைய கொலை வழக்கில் இந்த உமேஷ் பால்தான் முக்கிய சாட்சி.

 

உமேஷ் பால் கொலை வழக்கில் போலீஸ் பத்து பேர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்கிறது. பத்து பேரில் ஏழு பேர் கொல்லப்பட்டு விட்டனர். தலை மறைவாக இருப்பதால் மீதமுள்ள மூவர் தலை இதுவரை தப்பியுள்ளது.

 

இது மட்டுமல்ல காரணம்.

 

இதற்கு முன்பு அதிக் அகமதுவை பகல் வேளையில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடோடு மருத்துவமனைக்கு கூட்டி வரும் போலீஸ் இம்முறை இரவு நேரத்தை தேர்ந்தெடுத்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் பலவீனம் இருந்துள்ளது.

 

பாதுகாப்புக்கு இருந்த போலீசும் கொலை செய்தவர்களை சுடவில்லை. கொலை செய்தவர்களும் போலீசை சுடவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தம் ?

 

கொலை செய்தவர்கள் என்ன காரணம் சொல்லி இருக்கிறார்கள்?

 

இவர்களை கொன்றால் கிரிமினல் உலகில் பெரும் புகழ் பெற்று தங்களுக்கென்று ஒரு இடத்தை பெறலாம் என்று திட்டமிட்டார்களாம்.  பிறகு ஏன் அவர்கள் தப்பிக்க முயற்சி செய்யாமல் மாட்டிக் கொண்டார்கள்?

 

மொத்ததில் மொட்டைச் சாமியார் நீதிபதி வேடம் போட்டு தண்டனையை அவரே கொடுத்து விடுகிறார்.

 

புல்டோசராக இருந்த அவரது ஆயுதம் இப்போது துப்பாக்கியாக மாறி உள்ளது.

 

புல்வாமா கொலைகள் - சங்கிகளின் சதியே

 


நாற்பத்தி நான்கு சி.ஆர்.பி.எஃப் வீரர்களை பலி கொண்ட  புல்வாமா தாக்குதல் தொடர்பாக  காஷ்மீரின் அன்றைய ஆட்டுத்தாடி சத்யபால் மாலிக் இப்போது தெரிவித்துள்ள தகவல் கீழே.


இது புதிதல்ல. 

புல்வாமா தாக்குதல் நிகழ்ந்த நேரத்தில் எழுதிய இரண்டு பதிவுகளை, முதலில் ஸ்க்ரீன் ஷாட்டுகளாகவும் பிறகு எழுத்து வடிவிலும் ப்கிர்ந்து கொள்கிறேன். 







Friday, February 15, 2019

கார்கிலைப் போலவே கோட்டை விட்ட . . .




350 கிலோ எடை கொண்ட வெடிப்பொருட்களை  ஒரு வாகனத்தில் ஏற்றி  நெடுஞ்சாலைக்கு கொண்டு வந்து ஒரு தாக்குதல் நடத்தப்  போகிறார்கள் என்ற தகவல் அரசுக்குத் தெரியாதா? ஒரு வாரம் மூடப்பட்ட பாதையில் ஆயிரக்கணக்கான வீரர்கள் இடம் பெயர  உள்ளனர் என்கிற போது  கவனம் வேண்டாமா?

இது உளவுத்துறையின் முழுமையான தோல்வி 

இதை நான் சொல்லவில்லை.

காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் சொல்கிறார்.

தாக்குதல் நிகழ்த்திய தீவிரவாதி சந்தேகத்திற்குரியவர்கள் பட்டியலில் இருந்தான். ஆனால் அவன் ன் எங்கே உள்ளான், என்ன செய்கிறான் என்பது தெரியாமல் போய் விட்டது என்கிறார் அவர்.

இந்த உளவுத்துறை தோல்விக்கு யார் பொறுப்பு?

அனைத்தையும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள ராணுவத் தலைமையைத் தவிர வேறு யாரைச் சொல்ல முடியும்/ 

கார்கிலில் நடந்ததும் இதுதான்.

ஊடுறுவல்  நிகழ்ந்தததை கோட்டை விட்டு விட்டு பிறகு போர் வரை சென்றார்கள். அதிலும் சவப்பெட்டி ஊழல்  செய்து காசு பார்த்தார்கள்.

இப்போது வாக்கு ஆதாயம் பார்ப்பார்களா?

ஒரே ஒரு சந்தேகமும் வராமல் இல்லை.

உளவுத்துறை தூங்கியதா?

அல்லது 

அது எச்சரிக்கை அளித்தும் அலட்சிய படுத்தப்பட்டதா?

ஏனென்றால் பாஜக ஆட்சிக்காக  எதையும் செய்யும்  

Saturday, February 16, 2019

வீரர்கள் மரணம். இப்போது கேட்காமல் வேறெப்போது?





ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் புலனாய்வு தோல்வி இருக்கிறது என்பதை அம்மாநில ஆளுனரே ஒப்புக் கொண்ட பின்பு அதை நேற்றைய பதிவாக எழுதினேன்.

ஒரு வாட்ஸப் குழுவில் கடுமையான விவாதம்.

போரில் உயிர் நீத்த வீரர்களின் சவப்பெட்டிகளே வந்து சேரும் முன் அரசியலாக்காதீர்கள் என்றது  அந்த குரல்.

முக நூலிலும் இது போல ஏராளமான கருத்துக்கள்.

நடந்த தாக்குதல்கள் என்பது கொடூரமானது. எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் மரணம் என்பது துயரமானது, அவர்களின் குடும்பங்களின் சோகத்தை நாமும் பகிர்ந்து கொள்கிறோம்.

அவர்களின் மரணத்திற்கு,
அவர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு
யார் காரணம்?

முதல் குற்றவாளி

நிச்சயமாக தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்பு “ஜெய்ஷ் இ முகமது”

அவர்களை தண்டிக்க வேண்டும், வேரரறுக்க வேண்டும். தீவிரவாதம் எந்த வடிவில் எந்த போர்வையில் வந்தாலும் அனுமதிக்கக் கூடாது.

இவர்கள் மட்டும்தான் குற்றவாளிகளா?

இந்திய குற்றவியல் சட்டம், குற்றத்தை நிகழ்த்தியவர்களை விட குற்றம் செய்ய தூண்டியவர்களைத்தான் அதிகமாக தண்டிக்கிறது.

குற்றம் நிகழப் போகிறது என்று தெரிந்தும் அதை தடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களே அலட்சியமாக அந்த குற்றம் நடத்த அனுமதிப்பது என்பது எவ்வளவு மோசமான ஒன்று!

குற்றத்தை நிகழ்த்தியவர்கள் மீது வரும் கோபத்தை விட குற்றம் நிகழ அனுமதித்தவர்கள் மீது இன்னும் அதிகமான கோபம் வர வேண்டாமா?

இங்கேதான் காவிகள் புகுந்து விளையாடுகிறார்கள்.

உணர்ச்சிகளை அவர்கள் தூண்டி விட்டு அதிலிருந்து அரசியல் ஆதாயம் அடைய அடித்தளம் அமைக்கும் வேளையில்

சில உண்மைகளை சிலர் பகிர்ந்து கொள்ள முன் வருகிற போது

கூச்சலிட்டு தேச பக்த போர்வையில் அந்த உண்மைகளை புதைக்க முயல்கிறார்கள். காவிகளால் மூளைச் சலவை செய்யப்பட்ட பல அப்பாவிகளும் அந்த சூழ்ச்சிக்கு இரையாகி

“இந்த நேரத்தில் இதையெல்லாம் பேசலாமா?” என்று வினவுகிறார்கள்.

இந்த நேரத்தில் பேசாமல் வேறெப்போது பேசுவது?

இந்த தேசத்தின் எல்லையைப் பாதுகாப்பதற்காக உயிர் நீத்த வீரர்களின் சடலங்களைப் புதைக்கும் போது அரசுப் பொறுப்பில் உள்ளவர்களின் அலட்சியத்தையும் அந்த அலட்சியத்திற்கான உள்நோக்கத்தையும் சேர்த்தே புதைத்து விட முடியுமா என்ன?

உணர்வுகள் மேலோங்கும்போது அறிவு மங்கி விடும் என்பது மிகவும் சரியாக பொருந்துகிறது.

உளவுத்துறை தோல்வியடைந்துள்ளது என்று ஆளுனர் சொல்கிறார்.
எங்கோ ஒரு தவறு நடந்துள்ளது என்று சி.ஆர்.பி.ஃஎப் பின் செய்தி தொடர்பாளர் கூறுகிறார்.

ஆனால் இங்கே நடந்துள்ளது உளவுத்துறையின் தோல்வி என்றோ எங்கோ நடந்த தவறு என்றோ சுருக்கி விட முடியாது என்பதைத்தான் ஆவணங்கள் சொல்கிறது.



IED (improvised Explosive Devise) பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல் வந்துள்ளது என்று ஜம்மு காஷ்மீர் போலீஸின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எச்சரித்துள்ளார்.

அந்த எச்சரிக்கையை உதாசீனம் செய்து நாற்பதுக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழக்கக் காரணமாக இருந்தது யார்?

தகவல் தெரிந்தும் வீரர்களை மரணப் படுகுழியில் தள்ளியது யார்?

இந்த அலட்சியத்திற்கு அரசியல் உள் நோக்கம் கிடையாதா?

இந்த கேள்விகளை இப்போது கேட்காமல் வேறெப்போது கேட்பது?

கலவரங்கள் தொடர்ந்தால் எங்கள் வெற்றி உறுதியாகும் என்று முசாபர்நகர் கலவரப் பின்னணியில் அமித் ஷா கூறியதை மறக்க இயலுமா?

உத்தர பிரதேச மாநில தேர்தலுக்கு முன்பாக கான்பூரில் ரயில் விபத்து நிகழ்ந்த போது எல்லைக்கு அப்பால் உள்ளவர்கள் தீட்டிய சதி என்று மோடி ஒவ்வொரு கூட்டத்தில் பேசியதையும் அந்த விபத்து காலாவதி ஆன பழுது பட்ட தண்டவாளங்களால் உருவானது என்ற உண்மை, மொட்டைச்சாமியார் முதல்வரான பின்பே வெளியானது என்பதை மறந்து விட முடியுமா?

குஜராத்தில் மோடியின் செல்வாக்கு குறைந்த நேரத்தில் எல்லாம் அவரது உயிருக்கு ஆபத்து என்று கதை கட்டி போலி எண்கவுன்டர்கள் மூலம் அப்பாவிகளை தீர்த்துக்கட்டிய உத்தமர் அமித் ஷா என்பதைத்தான் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியுமா?

மோடியோ, அமித் ஷா வோ மகாத்மா காந்தி போல, ஜவஹர்லால் நேரு லால் பகதூர் சாஸ்திரி போல நேர்மையாளர்கள் (அவர்களின் அரசியல் குறித்து மாற்றுக் கருத்து உண்டு. ஆனால் அவர்கள் நேர்மையானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது)  என்றால் இந்த கேள்விகளுக்கான தேவை எழுந்திருக்காது.

பதவிக்காக எந்த அளவிற்கும் கீழிறங்கக் கூடியவர்கள் என்பதால்

இப்போது கேட்காமல் வேறெப்போது கேட்பது?

2019 தேர்தல் வெற்றிக்காக பாஜக களப்பலி கொடுத்தது புல்வாமா வீரர்களை. 2024 ல் ஒரு உயிர் கூட பலி ஆகாமல் தடுக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

காவிக்கயவர்களின் கொலை வெறியை அம்பலப்படுத்துவதே நம்முடைய பணி.