மோடியின் மூடத்தனமான பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்த போது ஆட்சியாளர்களின் ஊது குழல்கள்
"எல்லையிலே ராணுவ வீரர்கள் கஷ்டப்படும் போது உங்களால் வங்கி வரிசையில் கூட நிற்க முடியாதா?"
என்று ஏகடியம் பேசித் திரிந்தார்கள்.
எல்லையில் சிரமப்படும் வீரர்களுக்கு ஒரு வேளை ரொட்டி கூட ஒழுங்காகத் தருவதில்லை. எங்களின் உணவுக்கான பணமெல்லாம் ஊழலாக கொள்ளை போகிறது
என்று அம்பலப்படுத்தினார் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர் தேஜ்பகதூர் யாதவ்.
கார்கில் போர் வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்குவதில் ஊழல் செய்த வாஜ்பாயின் பாரம்பரியத்தில் வந்த மோடி அரசு தங்களின் தேசபக்தி சாயத்தை வெளுத்த அந்த ராணுவ வீரரை கைது செய்து சித்திரவதை செய்தது. குடிகாரன் என்றும் பைத்தியம் என்றும் பழி சொன்னது.
என்னை ஆளை விடுங்கள், நான் விருப்ப ஓய்வில் சென்று விடுகிறேன் என்று அவரை புலம்ப வைத்தது.
ஆனால் கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் அந்த மனிதர் இன்று பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விருப்ப ஓய்வு பெற்றால் கிடைக்கும் சலுகைகளை எல்லாம் மறுக்கவே இந்த பணி நீக்கம்.
உண்மையை உரக்கச் சொன்ன ஒருவனை பழி வாங்கியுள்ளது மோடி அரசு.
இதுதான் இந்த அரசின் குணாம்சம்.
இன்னும் இந்த அரசின் சுயரூபத்தை புரிந்து கொள்ள மறுப்பவர்கள்
.......................................அல்லது ...........................................
எழவு, அதை எத்தனை தடவை என் வாயாலேயே சொல்வது!
He has to face disciplinary action for what he did. No pint in arguing or blaming anyone. If he had any issue with food or whatever, it must have been handled within the organisation.
ReplyDeleteIt is not a question of Indiscipline. It is a case of exposure of corruption and lack of basic amenities. He is a whistle blower and he has to be safeguarded. But we can't expect such things in this Fascist regime
ReplyDeleteThe chaiwala government playing with the morality of soldiers. The soldiers may feel that the enemies (Pakistani and Chinese) beyond the border is more humanistic than our fellow Indians.
ReplyDelete