Friday, April 7, 2017

ஜெ சடலத்தையே எடுத்துச் செல்லுங்களேன்



                    

தொப்பி கோஷ்டி பணப்பெட்டியை வைத்து ஓட்டு கேட்கிறது என்றால் ஜெயலலிதாவின் சவப்பெட்டி மாதிரியினை வைத்துககொண்டு ஓ.பி.எஸ் அணி ஆர்.கே.நகரில்  வாக்கு  கேட்கிறது.

தமிழக அரசியல்  எவ்வளவு கீழ்த்தரமாகி விட்டது என்பதற்கு இது ஒரு சான்று.

ஒரு வேளை ஆர்.கே.நகர் தேர்தல் தள்ளி வைக்கப்படவில்லை என்றால் இன்னும் எவ்வளவு கேவலமான காட்சிகளை பார்க்க வேண்டி இருக்குமோ?

சவப்பெட்டி பொம்மைக்கு பதிலாக சமாதியைத் தோண்டி ஜெயலலிதாவின் சடலத்தையே எடுத்துச் செல்லுங்களேன். அப்படி செய்தாலாவது எதிர்கால தியானங்கள், ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் சத்தியங்கள், பட்ஜெட் தாக்கல் போன்ற காட்சிகளிலிருந்தாவது தமிழகம் தப்பிக்கும்.

இந்த பிழைப்பிற்கு வேறு ஏதாவது செய்யலாம்.

ஆனாலும் தமிழக மக்கள் இதையெல்லாம் நம்பி வாக்களிப்பார்கள் என்பதுதான் மிகப் பெரிய வெட்கக்கேடு, ‘

ஆமாம். இப்படி தேசியக் கொடியை பிரச்சாரத்தில் பயன்படுத்துவது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது கிடையாதா?
 

3 comments:

  1. national flag
    yellarukkum
    podhu
    yaar
    vennalum
    mariyadhaiyaa
    use pannalaam.

    be proud to be an Indian!!



    aaamaaa
    Thalai Laamaa
    Arunachal visitla
    Silent Mode-aaa???

    ReplyDelete
  2. தம்பி மொகபா,

    தேர்தல் பிரச்சாரத்துக்கு தேசியக் கொடியை பயன்படுத்தலாமா என்பதுதான் கேள்வி.
    அபத்தமாக உளற வேண்டும் என்பதற்காக இந்தியப் பெருமையை எல்லாம் இழுக்காதே.

    உன் முகத்தோடு வா, தலாய் லாமா பற்றி பேசுகிறேன். இல்லையை அந்த மனிதன்
    பற்றி முன்னர் எழுதியுள்ளேன். படித்துப் பார்

    ReplyDelete