நூல்
“பார்த்தினீயம்”
ஆசிரியர் தமிழ்நதி
வெளியீடு நற்றிணை பதிப்பகம்
சென்னை
விலை ரூபாய் 450.00
ஈழப் போராட்டத்தின் பின்னணியில் ஒரு காதல் கதை. இந்திய ராணுவம் நல்லது
செய்யும் என்று நம்பியவர்கள் ஏமாற்றப்பட்டதை விவரிக்கும் கதை என்று சொல்வதும் கூட
பொருத்தமாக இருக்கும்.
குறும்பு மிக்க மாணவன் வசந்த குமாரன், விடுதலைப் புலிகள் இயக்கத்தில்
இணைந்து பரணி என்று பெயர் மாறுகிறான். பரணியும் அவனது காதலி வானதியும் அவர்களின்
காதலும் ஈழப்போராட்டத்தால் எப்படி அலைக்கழிக்கப்படுகிறது என்பது மையச்சரடாக
இருந்தாலும் அம்மக்களின் வலியும் துயரமும் சந்திக்கும் பிரச்சினைகளும் மிகவும்
அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ள கதை.
அமைதிப்படை நுழைவதற்கு முந்தைய சில ஆண்டுகள், அமைதிப்படை இலங்கையில் இருந்த
காலம், வெளியேறிய காலம் என குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் கதை நகர்கிறது.
சிங்களப்படையின் தாக்குதல்கள், அதற்கு அஞ்சி ஊர் விட்டு ஊர் போனாலும்
துரத்தி வரும் துயரங்கள், உணவும் தங்குமிடமும் சிக்கலாய் மாறும் சூழல்கள்,
அருகிலேயே வெடிக்கும் குண்டுகள், காணாமல் போகும் இளைஞர்கள், ஆலயங்கள் அகதி
முகாம்களாய் மாறும் அவலம், அங்கேயும் வந்து சேரும் நெருக்கடி,
இயக்கங்களுக்கிடையேயான முரண்பாடுகள், சோதனை என்ற பெயரில் வக்கிரமாக செயல்படும் ராணுவ
வீரர்கள் என துவக்கப்பக்கங்கள் தமிழர்களின் இன்னலை துல்லியமாக படம்
பிடித்துக்காட்டுகின்றன.
இந்திய அமைதிப்படையின் வருகை நம்பிக்கையோடு எதிர் நோக்கப்பட, அவர்களுக்கும்
புலிகளுக்கும் இடையே மோதல்கள் உருவான திலீபனின் சாகும் வரை உண்ணாவிரதம் உள்ளிட்ட
நிகழ்வுகள் சரியாக சித்தரிக்கப்படுகிறது. அதன் பின்பு அவர்கள் ஒருதலைப் பட்சமாக தங்களோடு
இருக்கும் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படுவது, மற்ற இயக்கங்களால் புலிகள்
வேட்டையாடப்படுவது போன்ற நிகழ்வுகள், இது ஒரு புனைவல்ல, போர்க்குறிப்புக்கள் என்ற
உணர்வையே உருவாக்குகிறது.
அதே சமயம் புலிகள் இயக்கத்திற்கு உள்ளே நடைபெறும் பழி வாங்குதல்
நடவடிக்கைகளும் நேர்மையாக அணுகப்பட்டுள்ளது. அமைதிப்படையால் பாலியல்
தாக்குதலுக்குள்ளான ஒரு பெண், தனக்கு நேர்ந்த கொடுமையை வானதியிடம் பகிர்ந்து
கொள்வதை படிக்கையில் என்னைப் போலவே உங்களுக்கும் ராஜீவ் காந்தி மீது கோபம் வரும்.
இயக்கத்தில் சேர்வதென்பது பெருமையும் கவலையும் ஒரு சேர அளிக்கிற உணர்வு
என்பதை பல பாத்திரங்களின் பார்வையில் ஆசிரியர் சொல்கிறார். மக்களின் விடுதலைப்
போராட்டத்தில் பங்கேற்பு என்பது பெருமை, உயிருக்கு ஆபத்து என்பது கவலை.
வானதியையும் இந்த இரண்டு உணர்வுகள்தான் ஆட்டி வைக்கிறது. ஆனால் இயக்கத்திலிருந்து
வெளியே வந்த பரணியை அவள் ஏற்றுக் கொண்டாளா என்பதை நாவலைப் படித்து அறிந்து
கொள்ளுங்கள்.
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றிய மிக முக்கியமான நூல்
“பார்த்தினியம்” அவசியம் படிக்க வேண்டிய நூல். தமிழ்நதிக்குப் பாராட்டுக்கள்.
மிகக் கடினமான உழைப்பு.
do you or the author has any evidence about the rapes committed in Srilanka?
ReplyDeleteYou should not simply pass on the bugs like this.
Amentsty international has given lot of charges against srilankan army on the similar rape cases. But nothing against IPKF.
The author is a known for her stand on LTTE . What else any one can expect from her!
நாம் சிறு வயதில் இருந்து நம் இந்திய ராணுவத்தை பற்றி அதிகம் கேட்கப்பட்ட இரு பெரும் அவதூறுகள்..
ReplyDelete~~~
1.இந்திய ராணுவம் ஈழத்தில் பெரும் அட்டூழியம் செய்தது.
----
2.இந்திய ராணுவம் காஷ்மீரில் கற்பழிக்குது.
~~~
1. இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்து ஆன நொடியில் இருந்தே, அதாவது இந்திய ராணுவம் ஈழத்தில் சென்று சேரும் முன்னரே இந்திய ராணுவம் ஈழம் வந்தால் கற்பழிப்பார்கள் என்ற பொய்யை பரப்ப தொடங்கினார்கள்.. காரணம் அங்கே ராணுவம் இருந்தால் அவர்கள் மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள்.. நம்மால் நாட்டாமை செய்ய முடியாது என்ற காரணத்தால்தான்.. அதையும் மீறி அங்கு மக்கள் ராணுவத்திற்கு பெரும் ஆதரவு தந்தனர்..
அங்கே பெண்களை கடத்தலில் ஈடுபட்டால் சோதனை செய்யும் ராணுவத்தை கற்பழிக்கிதுனு அவதூறு பரப்பினர். நம் ராணுவ வீரர்கள் அங்கே விடுதலை புலிகளால் கொல்லப்பட்டதை பற்றி இங்கே பலர் பெருமையாக பேசுவார்கள்.. ஆனா எப்புடி கொன்னார்கள் னு கேட்டா காறி துப்புவீங்க.. எப்பவும் போல மக்களை கேடயமாக பயன்படுத்தி மக்களுக்கு நடுவில் மறைந்து இருந்து சுடுவது, கன்னி வெடி தாக்குதல், வழக்கம்போல பொட்டைதனமா பெண்கள் குழந்தைகள் உடம்பில் குண்டு கட்டி கொன்னதுனு அனைத்தும் பேடி தனம்.. எல்லாவற்றுக்கும் மேல் சிங்கலனிடமே ஆயுதம் வாங்கி இந்த பேடித்தனத்தை நிகழ்த்தினர்.. ஈழ தமிழ் மக்களை காப்பாற்ற நம் வீரர்கள் உடம்பை பெண்கள் மடியில் குண்டு வைத்து, மறைந்து இருந்து கொன்றுவிட்டு நம்மை ஜெயித்து விட்டோம் என்று மார்தட்டுகிறார்கள். இதே போல் தான் 10க்கும் மேற்பட்ட நாடுகள் செய்த ஈழ போரை இந்தியா மட்டும் நடத்தியதாக ஒரு குரூப் சொல்லிட்டு சுத்திட்டு இருக்கானுங்க..
..
சரி கற்பழிப்பு புகாருக்கு வருவோம்.. அங்கே புலிகள் அமைப்பினரால் Amnesty International எனும் மனித உரிமை அமைப்பிடம் இலங்கை ராணுவத்திற்கெதிராக 20,000 ஆயிரம் புகார்களை எழுப்பிய புலிகள் ஏன் இந்திய ரானுவத்திற்கெதிராக ஒரு கற்பழிப்பு புகாரை கூட எழுப்பவில்லை? அந்த அமைப்பிடம் நம் ராணுவத்திற்கெதிராக வெறும் பத்து ஆட்கொணர்வு மனுக்கள் தான் அவர்கள் செய்திருக்கிறார்கள்.. அவர்கள் சிங்கள படைகள் மீது ஆதாரத்தோடு நிரூபித்த பாலியல் குற்றங்களை ஏன் இந்திய ராணுவத்திற்கு எதிரா தர முடியல.. ஏன் னா இதெல்லாம் வெறும் கதைகள். இதை திரும்ப திரும்ப சொல்லி மக்கள் நம்பவைக்கப்பட்டனர். இந்த கற்பழிப்பு புகார் பற்றி ஏற்கனவே விடுதலை புலிகளின் பெண்கள் பிரிவு தலைவி தமிழினி் அவரின் சுயசரிதயான "கூர்வாளின் நிழலில்" புத்தகத்தில் தெளிவா எழுதிருக்காங்க..
..
மேலும் பல நடுநிலையான, நியாயமான ஈழ தமிழர்களே நம் ராணுவத்தின் மீது பூசப்பட்ட கறையை பொய் என்று மறுப்பு எழுதிருக்காங்க.. நம் ராணுவம் அங்கு இருந்த சமயம் பாதுகாப்பை உணர்ந்தோம்னும் சொல்றாங்க.. இன்றும் அங்கு கொழும்புவில் நம் இந்திய மாவீரர்கள் துயிலும் War Memorial இல் பல தமிழர்கள் அஞ்சலி செழுத்துறாங்க.. இதை பற்றி முழுதும் தெரிய நீங்க நடுநிலையான இலங்கை தமிழர்களிடம் பேசினாலோ, விடுதலை புலிகளின் மறுபக்கத்தை இணையத்தில் தேடினாலே கிடைக்கும்.
..
2. இந்திய ராணுவம் காஷ்மீரில் கற்பழிக்குது, வடகிழக்கு இந்தியாவில் கற்பழிக்குதுனு கதை அளக்கும் எச்சைகளிடம் அதற்க்கான (official - wiki) ஆதாரங்களை கேளுங்கள். காஷ்மீரில் நம் ராணுவம் கொடுமைகள் செய்தால் எப்படி அங்கு இருக்கும் 3 மாவட்டங்களை தவிர 17 மாவட்ட இளைஞர்களும் மக்களும் நம் ராணுவத்திற்கு ஆதரவு தர்றாங்கனு கேளுங்க.. காஷ்மீர் இளைஞர்கள் எப்படி தொடர்ந்து இந்திய ராணுவத்தில் இணையிராங்கனு கேளுங்க. இங்க பலபேருக்கு சொகுசா நிம்மதியா வாழ்வதால் வட இந்தியர்களை போல ராணுவத்தின் அருமை புரிய மாட்டேங்குது.. நம் costal guard கொஞ்சம் அசந்ததால உள்ள வந்து அடிச்ச 2008 mumbai attack மறந்து போச்சு போல.. இதுவே ராணுவத்தின் சேவைக்கு ஒரு சிறு உதாரணம்.. நம்மை சுற்றி உள்ள கழுகுகள் நம் ராணுவம் எப்ப அசரும் உள்ள வந்து அடிக்கலாம்னே இருக்காய்ங்க.. அவர்களிடம் இருந்து 24 மணிநேரமும் நம்மை காக்கும் வீரன் எங்கயோ பனிலயோ, பாலைவனத்திலோ அவன் குடும்பத்த விட்டு நமக்காக செத்துகுட்டு இருக்கான்.. சரி இப்ப கற்பழிப்பு புகாருக்கு வருவோம்.
ReplyDelete..
உலகில் இந்திய ராணுவம் மீது மட்டும் இல்ல, எல்லா ராணுவத்தின் மீதும் பிரிவினைவாதிகளால், தீர்விரவாதிகளால் கூறப்படும் புகார் பாலியல் புகாரே.. மக்களை மனதளவில் பாதிக்க, ராணவத்தின் மீது வெறுப்பு வரவைக்க இதுவே சிறந்த வழி.. ராணுவ வீரர்களின் மீது எந்த குற்றம் வந்தாலும் அதை ராணுவ நீதிமன்றங்கள் விசாரிக்கும், ராணுவ நீதிமன்றங்கள் விலைக்கு வாங்க முடியாதவை, எந்த பணமோ அதிகாரமோ அங்கு செல்லாது, வீரப்பன் வழக்கில் CPRF வீரர்கள் மூலம் நடந்த கூட்டு பாலியல் வன்புணர்வில் (வாச்சாத்தி வழக்கு) எந்த தலையீடும் இன்றி பெரிய அதிகாரிகள் உட்பட அனைவரும் தண்டிக்கப்பட்டனர். எனவே இவர்கள் சொல்லுவது போல் காஷ்மீரில் ராணுவம் அத்துமீறினாலும் அங்கே ராணுவ வீரர்கள் தண்டிக்கப்படுவர், அப்படி எத்தனை வீரர்கள் மீது புகார் எழுப்பப்பட்டு தண்டிக்கப்பட்டு உள்ளனர் என்ற விபரங்களை கேளுங்கள் நம் ராணுவத்தின் மீது பூசப்பட்ட களங்கம் விளங்கும்.. காஷ்மீரில் தீவிரவாதிகளால் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு அதை எதிர்த்து போராடிய ஒரு வீர காஸ்மீர் பெண்ணை பற்றி கூட சில வருடங்கள் முன் நாம் படித்திருப்போம்.. நிலமை இப்படி இருக்க, எதற்கெடுத்தாலும் உல்டாவாக ராணுவத்தின் மீது புகார் கூறுவது தவறு.. நம்மில் சிலர் சிறுவயதில் NCC, scouts, JRC போன்ற விடயங்களில் பள்ளியில் இருந்திருப்போம், அவற்றில் இருந்த மாணவர்களுக்கு ஓரளவுக்கு ராணுவத்தின் மதிப்பு புரியும் என நம்புகிறேன்.. ஏன்னா அந்த கட்டுப்பாடும், மீறினால் தரும் கடும் தண்டனையும் தான் இன்றும் ராணுவ வாழ்க்கை, இப்படி இருக்கையில் ஒரு ராணுவ வீரன் அவ்வளவு எளிதாக தவறு செய்யம்மாட்டடான், மீறி ஒன்னு ரெண்டு நடந்தாலும் கடும் தண்டனை நிச்சயம்.. எனவே காஸ்மீரில் ஹாயாக கற்பழிப்பு நடப்பது போல் எழுதுபவர்கள் போயி செக்ஸ் புக் எழுதி பொலச்சிக்குங்கடா.. நீங்க தப்பா பேசுற ராணுவம் தான் நாளைக்கி இங்க ஒரு தாக்குதலோ, நிலநடுக்கமோ, பெருவெள்ளமோ வந்தாலும் முதலில் உனக்காக உன் குடும்பத்தின் பாதுகாப்பிற்காக களத்தில் இறங்குபவன்.. அங்கு எல்லையில் எங்களுக்காக உயிர் விடுபவன் என் சகோதரன், எங்களுள் ஒருவன்.. அந்த நன்றி ஒரு தமிழனாக, இந்தியனாக, ஒரு மனிதனாக எங்களுள் உண்டு.
..
இதுவே அஜித், விஜய் பற்றி யாரவது பேசிருந்தா அவர்களின் ரசிகர்கள் கோவப்படுவாங்க, ஜெயலலிதா, கருணாநிதி, ராகுல், மோடி பத்தி பேசுனா அவங்க கட்சி காரங்க கோவப்படுவாங்க,, ஆனா நமக்காக உயிர்விடும் ராணுவ வீரர்கள யாரும் தப்பா சொன்னா நமக்கென்னனு அமைதியா இருக்கோம்.. இனி இந்த நிலமை மாறனும்.. ராணுவத்த பத்தி தப்பா பேசுனா ஒவ்வொரு இந்தியனும் திருப்பி அடிக்கணும்.
உங்களின் நீண்ட பதிவிற்கு நன்றி. ஆரோக்கியமான முறையில் உங்கள் கருத்து வெளியாகி உள்ளது. அதற்கு ஸ்பெஷல் நன்றி.
ReplyDeleteநிற்க
என் வலைப்பக்கத்தில் நான் நேரடியாக கேட்ட சில அனுபவங்களை முன்னரே பதிவு செய்துள்ளேன். நான் விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் கிடையாது. தத்துவார்த்த பின்னணி இல்லாததே அவர்களின் தோல்விக்குக் காரணம். இதனை தமிழ்நதியும் இந்த நூலில் கோடிட்டு காட்டியிருப்பார்.
அமைதிப்படையில் பங்கேற்ற ராணுவ வீரர்கள், ஒரு சி.பி.ஐ அதிகாரி ஆகியோர் சொன்ன விபரங்களை படியுங்கள்.
http://ramaniecuvellore.blogspot.in/2011/09/blog-post_03.html
http://ramaniecuvellore.blogspot.in/2011/09/blog-post_9654.html
http://ramaniecuvellore.blogspot.in/2011/09/blog-post_05.html
எல்லையில் போராடும் ராணுவ வீரர்களை போற்றுவோம். அதே நேரம் கறுப்பாடுகளை கண்டிப்போம். காஷ்மீர் பிரச்சினையை சிக்கலாக்கியதற்கு ராணுவத்தின் அத்துமீறலும் அவர்களுக்கு பாதுகாப்பு கவசமாக உள்ள AFPSA சட்டமும் ஒரு காரணம் என்பதை மறக்க வேண்டாம்.
வாச்சாத்தியில் நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திராவிட்டால் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்திருக்காது
நான் அறிந்தது இந்த கதையின் ஆசிரியர் கனடாவில் வாழ்ந்து தமிழகம் குடியேறிய இலங்கையர். எல்டிடிஈ வன்முறை அமைப்பின் தீவிர பிரசாரகர். அதிமுக நாஞ்சில் சம்பத்துக்கும் மேலே.
ReplyDeleteவட கொரிய கிம் ஜொங்மாதிரி இலங்கையில் சுட்டுவிளையாட எல்டிடிஈயிடம் துப்பாக்கி கொடுத்துவிட்டு இந்திய ராணுவம் திரும்பியிருந்தால் இவர் புகழ்ந்து கதை எழுதியிருப்பார்.
தங்களை எதிர்த்த பொதுமக்களை, மனித உரிமைகளுக்கு குரல் கொடுப்பவர்களை மட்டுமல்ல, கம்யூனிஸ்ட்டுகளையும் கொன்று குவித்தவர்கள் தான் எல்டிடிஈ அமைப்பினர்.
நடுநிலையான, அல்லது நியாயமான இலங்கை தமிழர்கள் தமிழகத்துக்கு சுற்றுலா வரும் போதே பயத்தில் நமக்கு எதற்கு வீண் வம்பு என்று கேட்ட கேள்விக்கு ஆமா போட்டுவிட்டு தப்பினோம் பிழைத்தோம் என்று செயல்படும் பரிதாபகரமான நிலைமையிலேயே உள்ளனர்.இதை என்னிடம் தெரிவித்தும் உள்ளனர். கேள்விகள் அந்த மாதிரி.
தலித்து தமிழர்களின் தலைவர் என்கின்ற திருமாவளவனும்,ஜாதிகட்சி நடத்துகின்ற பாட்டாளி + மக்கள் கட்சியும், புரச்சிகர வினவுக்கும் இலங்கை கோடீஸ்வர வன்முறை அமைப்பான எல்டிடிஈக்கு யார் ஜல்ரா அடிப்பது என்பதில் கடுமையான போட்டி நிலவுகிறது.
தமிழகத்தில் இருந்து இலங்கை சென்று துன்பநிலையில் வாழும் தமிழர்கள் மறக்கபட்ட தமிழர்களாகிவிட்டனர்.
http://www.thesundayleader.lk/2015/06/14/up-country-tamils-the-forgotten-4-2/