Saturday, April 15, 2017

அண்ணல் அம்பேத்கர்- தேர்தல் இல்லை - காணவில்லை






நேற்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் மக்கான் முனையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

2014 ம் வருடமன்று அவரது பிறந்தநாளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வந்திருந்து மாலை அணிவித்தார்கள். ஆனால் 2015 ம் வருடம் யாரையும் காணவில்லை.

ஆனால் கடந்த வருடம் திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் பெரும் புள்ளிகள் எல்லாம் வந்து மாலை அணிவித்தார்கள். முன்னாள் அமைச்சர் திரு துரை முருகன் மாலையை கையால் தொட்டுத்தர அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மாலை அணிவித்தனர்.

அதிமுக மேயர் திருமதி பா.கார்த்தியாயணி பெரும் படையோடு வந்திருந்தார். பிரம்மாண்டமான பேனர்கள் வேறு அவர் பெயரில் வைக்கப்பட்டிருந்தது. அது போலத்தான் காங்கிரஸ் கட்சி ஆட்களும்.

ஆனால் இந்த வருடம் வழக்கமாக வரும் தலித் அமைப்புக்கள், மார்க்சிட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியோர்தான்.திமுக, அதிமுக கட்சிகளின் எஸ்.சி/எஸ்.டி பிரிவைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்தார்களே தவிர, பெரும்புள்ளிகள் யாரும் கண்ணில் படவே இல்லை.

இந்த வருடம் தேர்தல் எதுவும் கிடையாது. அதனால் இவர்கள் யாரையும் காணவில்லை.

எந்த வருடமும் இரண்டு கட்சிக்காரர்களை பார்க்கவே முடியாது.

அவை

பாஜக, பாமக.

 

1 comment: