Monday, April 10, 2017

அவமானம் உனக்கன்றோ, நமக்கன்றோ?




பத்து லட்ச ரூபாய்
கோட்டு ஒன்றும்
அவர்களின் கோரிக்கையல்ல.

பசித்த வயிற்றுக்கு
சோறிடும் உழவனின்
பசி போக்க நிவாரணம்.

மோடி அரசு தந்தது 
என்னமோ நிர்வாணம்.

ஆடைகளைக் களைந்தது
என்னமோ அவர்கள்தான்.

அதற்குத் தள்ளிய
அராஜக அரசுக்குத்தான் 
அவமானம்,
இத்தனை நாள்
வேடிக்கை பார்த்த
நமக்கும்தான்.

இப்படியே தொடர்ந்தால்
இன்று அவர்கள்,
நாளை நாம்தான்,
துச்சாதன வேடத்தில்
அரசே நம்
துகிலுரிக்கும். 

No comments:

Post a Comment