முக்கிய முன் குறிப்பு ; ஒரு சீரியஸான பதிவு ஒன்றை எழுதிக்
கொண்டிருக்கிறேன். சங் பரிவாரக்கும்பல் கண்டிப்பாக தேச விரோதி என்று பட்டம் கொடுக்கும்.
அதற்கு முன்பாக சற்றே இளைப்பாற சின்னதாய் இந்த பதிவு.
ஏதோ ஒரு திருமண விருந்துக்கான மெனு என்று முக நூலில் பார்த்தேன். இவ்வளவு
தடபுடல் தேவையா என்ற கேள்விக்குள் இப்போது செல்லவில்லை.
இதிலே கட்டம் கட்டியுள்ள உணவு வகைகளைப் பாருங்கள்.
வெஜ் ஈரல் குழம்பு
உருளை மீன் ரோஸ்ட்
வாழைப்பூ மீன் குழம்பு
இவையெல்லாம் சைவ உணவு என்று தெரிகிறது..ஆனால் பெயர்களில் எல்லாம் அசைவ வாடை
அடிக்கிறது.
இவற்றையெல்லாம் செய்யத் தெரிந்தவர்கள் எப்படி தயாரிப்பது என்று செய்முறை
சொல்லிக் கொடுங்களேன்.
ருசி பார்த்தவர்கள், குறைந்தபட்சம் இவை எப்படி இருக்கும் என்றாவது
சொல்லுங்களேன்.
ம்க்கும் இதுலாம் பந்தாக்குன்னு நினைக்குறேன். இல்லன்னா எழுத்து பிழையா இருக்கும்ண்ணே
ReplyDeleteஇருக்கலாம். இருக்கலாம். ஆனா இப்படி அண்ணேன்னு சொல்லி வயசானவனாக்கிட்டீங்களே
Deleteஇவை எல்லாம்
ReplyDeleteவெஜ் ஈரல் குழம்பு,உருளை மீன் ரோஸ்ட்,வாழைப்பூ மீன் குழம்பு ஓபிஎஸ் செய்யும் தியானம் போன்றவை.