Monday, April 17, 2017

மோடி- பர்தா-ரிக்சா மாமா கவுண்டமணி



ஏன் பர்தா போட்ட பெண்கள்?



ஐம்பத்தி ஆறு இஞ்ச் மார்பர் தன் சொந்த மாநிலமான குஜராத்தின் சூரத் நகருக்கு இன்று போகிறாராம்.



அவரை வரவேற்க தடபுடலான ஏற்பாடுகள் நடைபெறுகிறதாம். சூரத் மாநகராட்சி அதற்காக பெரும் செலவு செய்கிறதாம். தெருவை சுத்தம் செய்வது போல மோடியார் நடித்த காட்சியை சிலையாக வைத்து சூரத் நகரின் வீதிகளை அலங்கரிக்கப் போகிறார்களாம். ஸ்வச்ச பாரத் என்று ஒரு காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியை திசை திருப்பிய அன்றோடு துடைப்பத்தை தூக்கி எறிந்து விட்டார் என்பதை நினைவுபடுத்துவதற்கான உள்குத்து வேலையா என்று தெரியவில்லை.





மோடியை வரவேற்க நாங்கள் வருகிறோம் என்று ஏராளமான முஸ்லீம் பெண்கள் சொல்லியுள்ளார்கள். அவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச் சொல்லியுள்ளோம். அவர்கள் எல்லாம் பர்தா அணிந்து கொண்டு மோடியை வரவேற்கப் போகிறார்களாம் என்று சூரத்தின் ஒரு எம்.எல்.ஏ சி.ஆர்..படேல் சொல்லியுள்ளாராம்.



ஏன் அவர்கள் பர்தா அணிய வேண்டும்?



சத்யராஜ் நடித்த ரிக்சா மாமா படத்தில் வாடகை வீடு கிடைப்பதற்காக கவுண்டமணி பர்தா போட்டு வெண்ணிற ஆடை மூர்த்தியை ஏமாற்றும் காட்சி நினைவுக்கு வருகிறதா?



மோடியை வரவேற்க முஸ்லீம் பெண்கள் வந்ததாக காண்பிக்க இப்படி ஒரு உத்தி? எத்தனை ஆண்கள் பர்தாவுக்குள் ஒளிந்திருக்கப் போகிறார்களோ?

பின் குறிப்பு ; நேற்று காலையே எழுதிய பதிவு. வேறு ஏதோ வேலை வந்ததால் பகிர்ந்து கொள்ள முடியாமல் போய் விட்டது.


No comments:

Post a Comment