Wednesday, April 26, 2017

நெல்லிக்காய் ஜூஸ் தடையும் மரண வதந்தியும்



கீழே உள்ள பதிவை எழுதி விட்டு அதற்கு பொருத்தமாக போலிச்சாமியாரின் படம் ஒன்றை போடலாம் என்று இணையத்திற்கு இப்போது சென்ற போதுதான் பாபா ராம்தேவ் விபத்தில் மரணம் என்று ஒரு வதந்தி பரவியதாக அறிந்து கொண்டேன்.

நெல்லிக்காய் ஜூஸ் மேட்டரிலிருந்து கவனத்தை திசை திருப்ப டுபாக்கூர் சாமியாரே, இந்த வதந்தியை கிளப்பி விட்டிருப்பாரோ என்று ஒரு சந்தேகம் வருகிறது.

ஏனென்றால் இந்த கேடிகள் எதையும் செய்வார்கள்

 
 மிலிட்டரி காண்டீனோடு நிறுத்தாதே

போலிச்சாமியார் ராம்தேவின் பதஞ்சலி கம்பெனி தயாரிக்கும் நெல்லிக்காய் ஜூஸ் அதாங்க ஆம்லா ஜூஸ், நுகர்வதற்கு தகுதியானது அல்ல என்று ஆய்வக அறிக்கைகளின் அடிப்படையில் இந்திய ராணுவ வீரர்களுக்கான, முன்னாள் ராணுவ வீரர்களுக்காக நடத்தப்படும் மிலிட்டரி காண்டீன்களிலிருந்து  அகற்றப்பட்டுள்ளது.

ஆயுர்வேத மருந்துகள் என்று போலிச்சாமியார் விற்கும் பொருட்களில் விலங்குகளின் எலும்புகளும் கொழுப்புக்களும் கலக்கப்பட்டுள்ளது என்று பல ஆய்வகங்களின் அறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத் நாடாளுமன்ற மாநிலங்களவையில் சமர்ப்பித்ததையும் அதனால் கடுப்பான பிராடு சாமியார், தனது குண்டர்கள் மூலம் புதுடெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகமான ஏ,கே,ஜி. பவன் மீது தாக்குதல் நடத்தி பொறுக்கித்தனம் செய்ததையும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

பதஞ்சலி பொருட்கள் மீது குற்றச்சாட்டுக்கள் வருவது என்பது புதிதல்ல. பாஜக ஆட்சியில் உள்ள போதே ஒரு பொருள் தடை செய்யப்படும் நிலை வந்துள்ளது என்றால் அதன் தரம் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல பதஞ்சலி பொருட்களின் தரத்திற்கு ஒரு சோற்றுப் பதமாக நெல்லிக்காய் ஜூஸை பார்க்க வேண்டும். அந்த டுபாக்கூர் சாமியார் தயாரிக்கும் அனைத்து பொருட்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். நாடி, நரம்பு, ரத்தம், புத்தி அனைத்திலும் மோசடித்தனம் ஊறியிருக்கும் அந்த சாமியார் தயாரிக்கும் இதர பொருட்கள் எல்லாம் மட்டும் வேறெப்படி இருக்கும்?

மிலிட்டரி காண்டீனோடு நிறுத்திக் கொள்ளாமல், நெல்லிக்காய் ஜூஸோடு நிறுத்திக் கொள்ளாமல், நாடெங்கிலும் பதஞ்சலி பொருட்களின் விற்பனையை தடை செய்யப்பட வேண்டும்.

மக்களின் உயிரோடு விளையாடுது பதஞ்சலி கம்பெனி.

பதஞ்சலி ஒரு உள்நாட்டு கம்பெனி, அதன் வளர்ச்சி பொறுக்காத பன்னாட்டுக் கம்பெனிகளின் சதி இந்த குற்றச்சாட்டு, ஆய்வறிக்கை என்று யாரும் காமெடி செய்ய வேண்டாம் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

இருப்பினும் சிலர் பிடிவாதமாக காமெடி செய்ய விரும்பினால், பின் வரும் கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டும்.

ராம்தேவின் எடுபிடியாக மோடி இருக்கையில் பன்னாட்டுக் கம்பெனிகளின் சதி என்பதெல்லாம் இந்த அரசில் செல்லுபடியாகுமா?

3 comments:

  1. உண்மை சாமியார்ன்னா திருவோடுகூட வச்சுக்ககூடாதாம். ஆனா இப்பத்திய சாமியார்கள் கோடிகளில்தான் புழங்குறாங்க

    ReplyDelete
    Replies
    1. correct-a sonneenga

      idhu
      communitukkum
      porundhum(aa?)


      porundhadunna
      indha comment
      delete...

      Delete
    2. அதிமேதாவி மொகபா,

      எப்படி பொருந்தும்னு நீ உன் பக்கத்துல போய் எழுது,
      அதோட லிங்க் கொடு. அங்க வந்து பதில் சொல்றேன்.

      உன்னால முடியாது. ஒளிஞ்சு விளையாடற கோழைப்பையன்
      எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது

      Delete