யாருக்கும் அடங்காத வெறி பிடித்த கும்பல் நாங்கள் என்று காவி டவுசர்கள் காண்பித்துள்ளார்கள்.
விஜயதசமி அன்று காக்கி டவுசர் அணிந்து கையில் துப்பாக்கியோடும் வாள்களோடும் ஜம்மு நகரில் பேரணி என்ற பெயரில் மக்களை மிரட்டி இருக்கிறார்கள்.
பேரணிதானே போனார்கள், இதிலென்ன தவறு என்று கேட்பவர்களுக்கு ஆயுதச் சட்டம் என்று ஒன்று இருப்பதை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. சட்டத்தின்படி இப்படி ஆயுதங்களோடு வெளிப்படையாக அலைவது என்பது குற்றம். கடுமையான தண்டனைக்குரிய குற்றம். அப்படி ஆயுதங்களோடு அலைபவர்களை குண்டர்கள் சட்டத்தின்படி கைது செய்ய வேண்டும்.
இப்படி ஆயுதங்களோடு அலைபவர்களை யாராவது தட்டிக் கேட்டால், இவர்கள் என்ன நல்ல பிள்ளையாக அவற்றை கீழே போடுவார்களா அல்லது ஆயுதங்களை எதிரே உள்ளவர்கள் மீது பிரயோகிப்பார்களா?
இத்தனை நாள் இல்லாத தைரியம் இப்போது மட்டும் எங்கே இருந்து வந்தது காவிக்கும்பலுக்கு?
பிரதமர் மற்றும் அனைத்து மந்திரி பிரதானிகளும் காவி டவுசர் அணிந்த சேவக்குகளாக இருக்கும் போது, பிரதமரும் குடியரசுத் தலைவரும் மட்டுமே நேரலையில் பேச வேண்டிய உரிமையை ஆர்.எஸ்.எஸ் சர்சங்சாலக் மோகன் பகவத்திற்கு தாரைவார்க்கும் அரசு இருக்கும் போது காக்கி டவுசர்கள் இதையும் செய்வார்கள், இதற்கு மேலும் செய்வார்கள்.
பாஜகவோடு கூட்டணி வைத்துக் கொண்டாலும் அவர்களின் தில்லாலங்கடி வேலைகளையெல்லாம் அனுமதிக்க மாட்டோம் என்று சொன்ன ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் முப்தி முகமது சையது செய்ய வேண்டிய முதல் வேலை,
துப்பாக்கியோடும் வாள்களோடும் பவனி போன காக்கி டவுசர்களை பிடித்து ஜெயிலில் போட வேண்டியதுதான்.
ஆனால் சந்தர்ப்பவாதி முப்தி முகமது சையது அதைச் செய்ய மாட்டார் என்பதுதான் யதார்த்தம்.
அதனால் அடுத்த வருடம் காக்கி டவுசர்கள், ஏ.கே 47, கையெறி குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்களோடு ஊர்வலம் போகலாம் என்று திட்டமிட்டுள்ளார்களாம்.
poyya dubukku
ReplyDeleteஏன்யா டுபாக்கூர், மூஞ்சியே காண்பிக்க முடியாத நீயெல்லாம் எதுக்கு கமெண்ட் போட வர, காக்கி டவுசருங்க பொழப்பே இதுதான். வீரமானவன் மாதிரி காமிச்சுப்பீங்க,
Deleteஅதெல்லாம் வெடிக்காத துப்பாக்கி பாஸ்
ReplyDelete"ஆறறிவில் ஓரறிவு அவுட்" என்ற NS கிருஷ்ணன் பாடல்தான் என் நினைவுக்கு வருகிறது.
ReplyDelete