Thursday, October 29, 2015

காளை மாடு ஓகேயா? ஒரு டவுட்டு



மாட்டுக்கறி கூடாது என்று காக்கி டவுசர்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். புது டெல்லியில்  உள்ள கேரளா இல்லத்தில் சோதனை போட்டு மூக்கை உடைத்துக் கொண்டார்கள். அங்கே உள்ளது எருமை மாட்டின் கறி என்று சொல்லி அசடு வழிந்தார்கள்.

எனக்கு ஒரு டவுட்டு.

மாட்டுக் கறி கூடாது என்று சொல்பவர்கள் பசு என்பது கோமாதா. "கோமாதா எங்கள் குலமாத" என்று ஏ.பி,என் படப்பாடலையெல்லாம் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு என்ன சந்தேகம் என்றால்

பசு மாட்டை உண்ணக் கூடாது என்றால் காளை மாட்டுக் கறியை சாப்பிடலாமா? ஏனென்றால் பசு வதை கூடாது என்றுதான் சொல்கிறார்களே தவிர, காளை வதை பற்றி எதுவும் பேசுவதில்லை. 

இல்லை காளை என்றால் சாதாரணமில்லை. அது சிவனின் வாகனம், ரிஷப தேவர், நந்தி தேவர் என்று அதற்கும் கதை கண்டு பிடிப்பீர்களா?

சரி காளை மாட்டுக்கறி உங்களுக்கு பிரச்சினை இல்லையென்றால் எது பசு மாட்டுக்கறி, எது காளை மாட்டுக்கறி என்று எப்படி கண்டுபிடித்து பிரச்சினை  செய்வீர்கள்?

சரி எருமை மாடு மட்டும் என்ன பாவம் செய்தது? எருமை மாடு பால் தருவதில்லையா? எருமை மாட்டுப் பாலில் சத்து கிடையாதா? உங்கள் புராணங்கள்படியே தர்மத்தை நிலைநாட்டுகிற தர்மதேவனான எமதர்மனின் வாகனமாயிற்றே எருமை. அதை தின்றால் பாபமில்லை என்று சொல்கிறீர்களே?  இல்லை தர்மத்திற்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லையென்பதால் எருமை வதையை கண்டு கொள்வதில்லையா? 

சொல்லுங்க பாய்ஸ், சொல்லுங்க 

6 comments:

  1. சரியான கேள்வி. அனைவரையும் யோசிக்க வைக்கக்கூடிய தலைப்பு.

    ReplyDelete
  2. பொதுவாக பலரின் மனதில் தோன்றும் சந்தேகங்களை வெளிக்கொண்டு வந்திருக்கின்றீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. புதுப் புது யோசனைகளை எல்லாம் சொல்லிக் கொடுக்கிறீர்களே...
    தங்களின் நூல் பற்றிய ஒரு சிறு அறிமுகம் எனது வலையில்,
    நேரமிருக்கும் பொழுது எனது வலைக்கு வருகை தாருங்கள் தோழரே
    நன்றி

    ReplyDelete
  4. சரியான கேள்வி சார்!

    ReplyDelete
  5. மாட்டை விரட்டும் சாட்டை இனி மாடுகளுக்கு தேவை இல்லை , உங்கள் பதிவு ஒரு நல்ல சாட்டை, நன்றாக உரைக்கும் படி சுழற்றி அடித்திருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.

    கோ

    ReplyDelete