வரும் 11.10.2015, ஞாயிறன்று புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள நான்காவது தமிழ் வலைப் பதிவர்கள் திருவிழாவில் பங்கேற்க நான் பேருந்தில் முன் பதிவு செய்து விட்டேன்.
இதற்கு முன்பாக நடந்த வலைப்பதிவர் விழாக்களில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த முறை எப்படியாவது கலந்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். நல்ல வேளையாக வேறு எந்த பணியும் குறுக்கிடவில்லை. ஆகவே புதுக்கோட்டை வலைப்பதிவர் விழாவில் பங்கேற்பு உறுதி.
இதில் ஒரு முக்கியமான காரணமும் உள்ளது. ஏனென்றால் கவிஞர் முத்து நிலவன், இந்த ஆலோசனையை முன்மொழிந்தது வேலூரில்தான்.
எங்கள் ஊரில் முடிவான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாவிட்டால் எப்படி!
சரி நீங்களும் வருகிறீர்கள் அல்லவா?
புதுகையில் சந்திப்போம்
ஆகா
ReplyDeleteதாங்கள் வருகிறீர்களா
புதுகையில் மகிழ்வுடன் சந்திப்போம் நண்பரே
நன்றி
...போம்.
ReplyDeleteதோழருக்கு வாழ்த்துக்கள்! புதுக்கோட்டை உங்களை அன்புடன் வரவேற்கின்றது.
ReplyDeleteவாருங்கள் தோழரே வருக வருக (முதல்நாள் வருவதானால் சொல்லுங்கள் ஆ.கா.கழக விருந்தினர் இல்லத்தில் முன்பதிவு செய்யச் சொல்லிவிடுகிறேன். தஞ்சை ராஜனும் வருகிறார்)
ReplyDeleteவிழா சிறக்க வாழ்த்துக்கள்! எதிர்பார்ப்போடு காத்திருந்தும் விழாவிற்கு வர முடியாத சூழல் உருவாகிவிட்டது!
ReplyDeleteஎன்னங்க நம்ம விழா! அதுவும் நம் அண்ணன் முத்துநிலவன் உயிரைகொடுத்து வேலை செய்து இருக்கிறாரர். மேலும், உங்களையும் சந்திக்கும் ஆசை எனக்கு இருக்கு.ம பார்ப்போம் நாளை. சில வரிகள் நம் தலைவர் முத்துநிலவன் உழைப்பப் பற்றி!
ReplyDeleteமுத்துநிலவன் மற்றும் அவர் குழுவிற்கு என் அநேக நமஸ்காரங்கள்! இப் படை வெற்றி அடையாவிடின் எப்படை வெற்றி கொள்ளும். இனி, அடுத்த பதிவர் விழாவிற்கு புதுக்கோட்டை சந்திப்பை தான் எல்லோரும் உதாரணமாக கொள்வார்கள்------கொள்ளவேன்டும்!
புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு ஒரு Bench Mark--என்று எடுத்துக் கொள்ளவேண்டும். இது மாதிரி இனிமேல் இப்படி ஒரு விழாவை, முத்துநிலவன் குழுக்கள், மாதிரி மற்றவர்கள் நடத்துவது கடினம் என்று சொல்வதைவிட---Impossible---என்று சொல்லலாம்.
முத்துநிலவன் குழு உழைப்ப்பு வாழ்க!
புதுக்கோட்டைக்கு பெரும்புள்ளிங்க எல்லாம் போறங்க. வாழ்த்துக்கள்.
ReplyDelete