Friday, October 2, 2015

அசுத்தமானவர்களிடமிருந்து.....



அவரைக் கண்டால் எப்போதுமே பிடிக்காது. அவர் சொன்ன மத நல்லிணக்கமோ வேப்பங்காயாய் கசப்பது. அதனால்தான் அவரை கொல்லவும் செய்தார்கள். ஆனால் ஆட்சியில் வந்து அமர்ந்த பின்பு சடங்கிற்காகவாவது அவரை நினைவு கொள்வதாகவும் பாராட்டுவதாகவும் நடிக்க வேண்டும்.

எளிமை, நேர்மை, மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம், தீண்டாமை ஒழிப்பு, சுய சார்பு என்று அவர் சொன்ன எத்தனையோ நல்ல விஷயங்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பே கிடையாது. அதனால் சுத்தம் என்ற ஒரு சொல்லைப் பிடித்துக் கொண்டு "ஸ்வச்சா பாரத்" என்று புரியாத வார்த்தையில் போன வருடம் ஒரு கூத்து நடந்தது.

"அரை நிர்வாண பக்கிரி" என்று வெள்ளையனால் கிண்டல் செய்யப்பட்டவரின் பிறந்த நாளில் பத்து லட்ச ரூபாய் கோட் அணிந்த கோமகன், ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் நூறு மணி நேரம் சுகாதாரப் பணியில் ஈடுபட வேண்டும் என்று வாய் கிழிய உபதேசமும் செய்தார்.

தேர்தல் வாக்குறுதிகள் போல இதுவும் கூட காற்றில் பறந்து போனது. புகைப்படத்திற்காக அன்று ஏந்திய துடைப்பமும் அன்றோடு காணாமல் போனது. இன்று விளம்பரத்திற்காக மீண்டும் உயிர்த்துள்ளது.

கோட்சேக்களின் ஆட்சியில் அண்ணல் காந்தி சொன்னதை மீண்டும் மக்களுக்கு சொல்ல வேண்டியுள்ளது. மத நல்லிணக்கத்தின் தேவையை அழுத்தமாக விளக்க வேண்டியிருக்கிறது. 

அதனால் இன்று எங்கள் சங்கத்தின் சார்பில் வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டத் தலை நகரங்களில் மகாத்மாவின் சிலைக்கு மாலை அணிவித்து மத நல்லிணக்கத்தை பாதுகாப்போம், மத வெறி சக்திகளை முறியடிப்போம் என்ற செய்தியைச் சொல்லும் பிரசுரத்தை மக்கள் மத்தியில் வினியோகித்தோம்.

அசுத்தமான சிந்தனை கொண்டவர்களை அரசியல் தளத்திலிருந்து அப்புறப்படுத்தி  தேசத்தை சுத்தப்படுத்தும் முயற்சிகளை என்றும் தொடர்வோம்.














2 comments:

  1. படங்களை பார்த்த போது மிகவும் மிழ்ச்சியாக இருந்தது.

    ReplyDelete
  2. when India will have leaders like Lalbahadur and kamraj ? my god save this country from these pseudo-secularists
    like Sonia and Modi as they are nothing but exhibitionists who hoodwink the people for votes and make rich people
    richer and poor people pooreer.

    ReplyDelete