Wednesday, October 21, 2015

எழுத்தாளர் எஸ்.ரா விடம் சில கேள்விகள்




சில முக்கியப் பணிகள், பயணங்கள் அதன் விளைவாய் நேரமின்மை, புதிதாய் முளைத்த சர்ச்சைகள் காரணமாக புதுகை வலைப்பதிவர் விழா குறித்த இரண்டு முக்கியமான பதிவுகளை எழுத முடியாமலேயே போய் விட்டது. இன்று ஒன்று, நாளை மற்றொன்று என யோசித்துள்ளேன்.

வலைப்பதிவர் விழாவின் சிறப்பாய் அமைந்தது எழுத்தாளர் திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் உரை. இதற்கு முன்பாக அவரது உரையை கேட்கும் வாய்ப்பு என்பது வெண்மணி சம்பவம் குறித்து தோழர் பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய  "ராமையாவின் குடிசை" ஆவணப்படம் வெளியிடல் போதுதான் கிடைத்தது. 

ஆனால் அந்த விழாவில் "வாழும் தியாக வரலாறு" தோழர் என்.சங்கரய்யா அவர்களின் உணர்ச்சி மிகுந்த உரைக்கு முன்பாக எஸ்.ரா வின் உரை மட்டுமல்ல,  பாரதிராஜா, பாலு மகேந்திரா, கமலஹாசன் ஆகியோர் உரைகள் கூட மங்கித்தான் இருந்தது. 

புதுகையில் திரு எஸ்.ரா அவர்கள் பேசும் போது சொன்ன சில விஷயங்கள். 

"எழுதுவதை எக்காரணத்திலும் கைவிடாதீர்கள். வலைப்பக்கம் கொடுத்திருக்கிற சுதந்திரத்தை பயன்படுத்துங்கள்.

வரலாறு, ஆய்வு போன்றவற்றை பதிவிடுவதில் இன்னமும் முனைப்பு தேவைப்படுகிறது. ஆகவே அந்த தளங்களில் கவனம் செலுத்துங்கள்.

எழுதுவது எதுவாக இருந்தாலும் அது உங்களின் சொந்த படைப்பாக இருக்கட்டும். அடுத்தவரின் படைப்பை காப்பி அடைக்காதீர்கள். 

என்னுடைய ஒரு கட்டுரையையே சுமார் ஐம்பது பேர் காப்பியடித்து தங்கள் கட்டுரை என எழுதியுள்ளார்கள். அதில் ஒருவர் அதை படிக்கச் சொல்லி எனக்கே அனுப்பியிருந்தார்.

ஒரு நாவல் எழுதுவதற்கு முன்பாக குறைந்தபட்சம் அந்த கதாபாத்திரங்களோடு நான் ஒரு வருடமாவது வாழ்கிறேன். 

உங்கள் படைப்புக்களை மென்னூலாக மாற்றிக் கொள்ளுங்கள்"

அதன் பின்பு நடைபெற்ற கேள்வி பதில் பகுதி இன்னும் சுவாரஸ்யமாக அமைந்திருந்தது. 

பங்கேற்ற பதிவர்கள் பலரும் பல கேள்விகளை எழுப்பினார்கள். கேள்விகளும் சரி பதிலும் சரி சுவாரஸ்யமாகவே இருந்தது. 

கனியிருக்க காய் எதற்கு என்பது போல 

புதுகை வலைப்பதிவர் விழாவின் நிகழ்ச்சிகள் அத்தனையையுமே விழாக்குழுவினர் முழுமையாக வீடியோவாக பதிவு செய்து  அதை வலைப்பதிவர் விழாவிற்காக உருவாக்கிய வலைத்தளத்தில் பகிரவும் செய்துள்ளனர்.

அப்படி நேரடியான காணொளியை இந்த இணைப்பின் மூலம்  சென்று ரசியுங்கள். இரண்டாவது தொகுப்பில் திரு எஸ்.ரா அவர்களின் உரையும் கேள்வி பதில்களும் இருக்கிறது. 

நீங்கள் நேரடியாக கேட்டு முழுமையாக அனுபவிக்கும் வாய்ப்பு இருக்கிற போது அதை நான் ஏன் சுருக்கித் தர வேண்டும்? ஆகவே இணைப்பைப் பாருங்கள்.

வலைப்பதிவர் விழா சிறப்பாக அமைய திரு எஸ்.ரா அவர்களின் பங்கேற்பும்  ஒரு முக்கியக் காரணம். 

ஆனால் அதையும் விட முக்கியமான காரணம்

என்ன தெரியுமா?

நாளை?

2 comments:

  1. ஆகா
    என்ன நண்பரே
    சஸ்பென்ஸ்ஸோடு நிறுத்திவிட்டீர்கள்
    காத்திருக்கிறேன்

    ReplyDelete
  2. ஆஹா அடுத்து என்னன்னு ஆவலாயிருக்கே.....சீக்கிரமா எழுதுங்க..

    ReplyDelete