புதுக்கோட்டை வலைப்பதிவர் விழாவில் என்னைக் கவர்ந்த ஒரு மிக முக்கியமான அம்சம், விழா அரங்கம் முழுதும் சுவர்களை அலங்கரித்த கவிதைகள்.
அவை வெறும் கவிதைகள் மட்டுமல்ல, ஓவியங்களால் மெருகேற்றப்பட்ட கவிதைகள். கவிதையால் ஓவியத்திற்கு சிறப்பா, ஓவியத்தால் கவிதைக்கு சிறப்பா என்று பட்டி மன்றமே நடத்தலாம்.
என்னை கவர்ந்த அந்த கவிதோவியங்கள் அல்லது ஓவியக் கவிதைகளை என் அலைபேசியில் சிறைப் படுத்தி வந்தேன். இணைய வெளியில் அவை சிறகடித்துப் பறக்க இங்கே பகிர்கிறேன்.
கவிஞர்களுக்கும் அதை இன்னும் சிறப்பாக்கிய ஓவியர்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.
பின் குறிப்பு : இன்னும் சில கவிதைகளையும் புகைப்படம் எடுத்திருக்க வேண்டும். ஆனால் சரியான இடம் கிடைக்காததால் இயலவில்லை. அதனால் இத்தொகுப்பில் இடம் பெறாதவை என் மனம் கவராதவை என்று பொருளல்ல. உதாரணத்திற்கு திரு சுப்ரா அவர்களின் கவிதை நன்றாக இருந்தது. ஆனால் படம் எடுக்க முடியவில்லை.
அருமை நானும் இப்போது தான் பார்க்கின்றேன் நன்றி சார்...
ReplyDeleteஅருமை. நன்றி
ReplyDeleteஆலங்குடி ஓவியர்களின் கவிதை ஓவியங்களை நாங்களே பார்க்க முடியாதவாறு விழாநாளில் காலை 8மணிக்குத்தான் வந்து வைத்தார்கள். அதற்காக அவர்களைப் பாராட்ட வேண்டும். தங்கள் படங்களின் வழியாகத்தான் நாங்களும் பார்க்கிறோம்! அவர்களுக்கும் தங்களுக்கும் நன்றி!
ReplyDeleteகவிதைஓவியங்கள் அருமை நண்பரே
ReplyDeleteஅவற்றை காட்சிப் படுத்திய முறையினை
இன்னும் மேன்மை படுத்தியிருந்தால்
விழா அரங்கே இன்னும் பொலிவு பெற்றிருக்கும்
நன்றி ஐயா
அழகான ஓவியங்களுடன் அருமையான கவிதைகள்! விழாவுக்கு நான் வராத போதும் என் கவிதை வந்திருப்பதை தங்கள் புகைப்படம் மூலம் அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDelete