கோட்சேக்களின் சீடர்கள் ஆட்சியதிகாரத்தில் இருக்கின்ற காரணத்தாலேயே முன்னெப்போதையைம் விட மகாத்மா காந்தியை நினைவு கொள்வதும் அவர் கடைபிடித்த மத நல்லிணக்கத்தை முன்னிறுத்துவதும் அவசியம் ஆகிறது.
அதனால் இந்த ஆண்டு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மத நல்லிணக்க பாதுகாப்பு தினம் அனுசரிக்குமாறு எங்கள் தென் மண்டலக் கூட்டமைப்பில் வழிகாட்டினார்கள்.
எங்களது கோட்டத்தில் நேற்று கிளைகளில் கோரிக்கை அட்டை அணிதல், வாயிற்கூட்டங்கள் நடத்தினோம். மாவட்டத் தலைநகரங்களில் அண்ணல் காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து மத நல்லிணகத்தை வலியுறுத்தும் பிரசுரத்தை மக்களிடம் வினியோகிப்பது என்றும் முடிவு செய்திருந்தோம்.
அதற்காக வேலூர் கோட்டை முன்பாக இருக்கிற காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற போது எங்களுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சிக்காரர்கள் வந்திருந்தார்கள்.
மேலே படியேற முடியாத ஒரு முதியவர் ஒருவர் மட்டும் கீழே இருந்து "மகாத்மா காந்திக்கு ஜே" என்று முழக்கமிட மேலே போனவர்களோ மீண்டும் மீண்டும் அழுத்தமாக முழக்கமிட்டதோ
"அன்னை சோனியாஜீ வாழ்க"
"வருங்கால பிரதமர் ராகுல் காந்திஜி வாழ்க"
இவர்களுக்கு காந்தியைப் பற்றியும் தெரியவில்லை.
காங்கிரஸ் கட்சிக்கு மரியாதையை எப்படி பெறுவதும் என்றும் தெரியவில்லை.
நல்ல தொண்டர்கள்!!!
No comments:
Post a Comment