நேற்று குரங்குக் குளியலில் மோடி ஏ1 பற்றி உருகி உருகி பேசியுள்ளார். மோடிக்கும் ஏ 1 க்கும் ஒரு காலத்தில் நல்லுறவு இருந்திருக்கிறது. மோடி முதலமைச்சராக பதவியேற்ற போதெல்லாம் நேரில் போய் வாழ்த்தும் சொல்லியுள்ளார்.
ஆனால் அது 2014 மக்களவைத் தேர்தல் வரையில்தான்.
2014 தேர்தலில் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் கூட்டணி கிடையாது. அதனால் தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளையும் தாக்கினார். இரு கட்சிகளாலும் தமிழ்நாட்டுக்கு வளர்ச்சியில்லை என்றெல்லாம் பேச கடுப்பான ஜெ மோடியை கடுமையாக தாக்கினார்.
குஜராத் மாடல் வளர்ச்சி என்பதெல்லாம் வெறும் மாயை என்றும் குஜராத் கலவரத்தையும் கண்டித்து இறுதியாக மக்களிடம்
"நீங்கள் யாரை ஆதரிப்பீர்கள், மோடியையா, இந்த லேடியையா?" என்று கேட்டார்.
அதிமுக ஆட்களோ அந்த கேள்வியை லேடியா? கேடியா? என்று பரப்பினார்கள்.
மோடியின் உருக்கத்தை பார்க்கையில் "மோடியா, லேடியா" என்பதுதான் நினைவுக்கு வந்தது.
அதிமுகவினருக்கும் வந்திருக்கும்.
அவர்களுக்கான புதிய கேள்வி
"பழைய எஜமானியா? புதிய எஜமானனா?"

This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete