தேமுதிக இப்போது திமுக கூட்டணியில் இணைந்து விட்டது. என்ன பேரம் என்பது தெரியவில்லை. சிவராத்திரி அன்று பாஜகவின் ராஜ்நாத்சிங், அதிமுகவின் தங்கமணி ஆகியோரோடு ஜக்கியின் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த், இரண்டு தினங்களுக்குள் அறிவாலயம் வந்து விட்டார்.
அந்த புகைப்படத்தை பார்க்கும் போது பத்தாண்டுகளுக்கு முன்பாக கலைஞர் கூறியதுதான் நினைவுக்கு வந்தது.
"பழம் நழுவி பாலில் விழுந்து விடும்" என்று எதிர்பார்ப்பதாக அவர் பல முறை கூறிக்கொண்டிருந்தார். ஆனால் திமுக கூட்டணிக்கு வராத விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணியோடு கரம் கோர்த்துக் கொண்டார். அதுதான் மக்கள் நலக்கூட்டணிக்கு மிகப் பெரிய பிரச்சினையாக போனது.
சி.பி.ஐ(எம்), சி.பி.ஐ, மதிமுக, விசிக ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து பல கூட்டியக்கங்கள் நடத்தி பின்பு அந்த போராட்ட ஒற்றுமை மக்கள் நலக் கூட்டணியாக மலர்ந்த போது மக்கள் ஆதரவு இருந்தது. ஊடகங்களும் பெரிய அளவில் ஆதரவு கொடுத்தது.
எப்போது விஜயகாந்தும் ஜி,கே.வாசனும் வந்தார்களோ, அதற்கு பிறகு எல்லாமே தலை கீழாக மாறியது. சமூல வலைத்தளங்களின் துவக்க காலமாக இருந்தாலும் அவையும் ஊடகங்களும் அக்கூட்டணியை ஒரு கேலிப் பொருளாக மாற்றி ஒரு மாற்று அரசியல் சக்தி உதயமாவதை கருக்கி விட்டார்கள்.
கலைஞர் காலத்தில் பால் கிண்ணத்தில் விழாத பழம் பத்தாண்டுகளுக்குப் பின்பு மு.க.ஸ்டாலின் காலத்தில் விழுந்து விட்டது.

This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete