Wednesday, December 3, 2014

எனக்கொரு காதலி இருக்கின்றாள்

 

சில நாட்களுக்கு முன்பாக விஜய் டி.வி சூப்பர் சிங்கர் ஜூனியரில் ஸ்பூர்த்தி என்ற சிறுமி முத்தான முத்தல்லவோ படத்தில் வரும் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" என்ற பாடலை அற்புதமாக பாடினாள். அவளுக்கு பாராட்டுக்கள்.

அதற்குப் பிறகு Anti Climax ஆக எம்.எஸ்.வி மாதிரி சிரியுங்கள் என்று எல்லோரையும் சிரிக்க வைத்து அது கடைசியில் அபத்தமான அ,ஆ,இ.ஈ வகுப்பாக மாறிப் போய் அந்த பெண் பாடியதை மறந்து போக வைத்து விட்டது.

அதனாலேயே அப்பாடலை தேடிப் பிடித்து பார்த்தேன்.

முழு பாடலும் கிடைக்கவில்லை. முதலில் இந்த இணைப்பிற்குச் சென்று பாடலை  கேட்கவும். 

இப்போது இங்கே போய் பாடலை  பார்க்கவும்.

எம்.எஸ்.வி யும் எஸ்.பி.பி யும் தங்கள் குரல் மூலம் வசியம் செய்த பாடல் இது. பியானாவும் வயலினும் இரண்டறக் கலந்து போட்டியும் போடும். பாடலின் இறுதி முப்பது வினாடிகள் மிகவும் சுவாரஸ்யம். கலைஞர்களுக்குள் பொறாமை வரும் தருணமும் கூட.

இந்த பாடலை பார்த்த கேட்ட உங்களுக்கு பரிசாக இதே படத்தின் இன்னொரு இனிய  பாடலும் கூட.

முழுமையான இசைக்குழுவோடு ஒரு பாடல் பதிவு செய்யப்படும் அப்பாடலை பார்த்த போதே, அது போன்ற இன்னொரு பாடலும் மனதிற்குள் ஒலித்தது. இப்பாடல் உங்களுக்கு போனஸ்

1 comment:

  1. வந்த புதிதில் பெரிதும் பகடி செய்யப்பட்டது இது. மிகத் தரமான அலுப்பில்லாத இன்னிசை. தேங்காயின் முக பாவனைகள் ரசிக்கும்படி இருக்கும்.

    ReplyDelete